என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அவினாசி"
சட்டசபையில் பொன்முடி (தி.மு.க.) பேசும்போது, அத்திக்கடவு- அவினாசி திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று கேட்டார்.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நான்கைந்து நாட்களில் இறுதிசெய்யப்பட்டு இம்மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.
இந்த திட்டம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மலையில் இருந்து கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு வனத்துறை அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க காலிங்கராயன் பாளையத்தில் இருந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly
அவினாசி:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று 5-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெரியாயி பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.
இங்கு வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் இன்று 5 -வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
இதனால் மாணவர்களின் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் பள்ளியை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிரச்சினையில் அரசு உடனே தலையிட்டு அவர்களை பணிக்கு வர அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.பெற்றோர் போராட்டத்தால் அவினாசியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் 17 நடுநிலைப் பள்ளி, 61 ஆரம்ப பள்ளி,2 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ஒரு சிலரே இன்று வேலைக்கு வந்து இருந்தனர். இதனால் மாணவர்களும் குறைவாகவே வந்து இருந்தனர்.
அவினாசி:
அவினாசி அருகே உள்ள ராயம் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (59). இவரது மகன் மகேஸ்வரன். இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். வடுகம் பாளையம் -அவினாசி சாலையில் நடுவச்சேரி பகுதியில் சென்ற போது ஆடு குறுக்கே வந்தது.
இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற மகேஸ்வரன் திடீர் பிரேக் போட்டார். அப்போது பின்னால் அமர்ந்து இருந்த செல்வராஜ் தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் செல்வராஜ் இறந்தார். இது குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவினாசி:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை ஈகாட்டூர் எலந்த குட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவரது மகன் நிஷாந்த் (22). டிப்ளமோ கம்ப்யூட்டர் முடித்துள்ளார். இவரது நண்பர் கிருபாகரன் (20). ஊட்டி பைக்காரா மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்.
நிஷாந்தும், கிருபாகரனும் நேற்று மோட்டார் சைக்கிளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தனர். இங்கு வேலை முடிந்து அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அவினாசி அருகே உள்ள நாதம்பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரோடு ஓரம் சரக்கு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.
திடீரென மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் நிஷாந்த், கிருபாகரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.
நிஷாந்த் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவர் பலியான தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சக்தி வேல், தாய் சுதா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் சோகத்துடன் தனது மகன் உடல் வைக்கப்பட்டுள்ள அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மனமுடைந்து காணப்பட்ட அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தனர்.
இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சக்திவேல், சுதா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் மகனை பறி கொடுத்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நியூ திருப்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி (22), சுனிதா (24) விழுப்புரம் மாவட்டம் டி. குன்னத்தூரை சேர்ந்த ரம்யா (19), உளுந்தூர்பேட்டை பிரியா ஆகிய 4 பேரும் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 பேரும் அவினாசி வந்தனர். அங்கு கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.
பின்னர் அவினாசி பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் உள்ள அமிர்தம் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அந்த ஓட்டலின் முகப்பு பகுதி மேற்கூரை இரும்பு ஷெட்டால் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த மேற்கூரையின் கீழ் சரஸ்வதி, சுனிதா, ரம்யா, பிரியா ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டலின் மேற்கூரை ஷெட் மொத்தமாக இடிந்து விழுந்தது.
இதில் 4 பேரும் சிக்கி கொண்டனர். அவர்கள் அலறினார்கள். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மேற்கூரை ஷெட்டை தூக்கி காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் முடியவில்லை. இதனை தொடர்ந்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மேற்கூரையை அப்புறப்படுத்தினார்கள்.
ஆனால் சரஸ்வதி இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகி இருந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயம் அடைந்த சுனிதா, ரம்யா, பிரியா ஆகியோர் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இளம்பெண் ரம்யா இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
பல்லடத்தில் நேற்று முன்தினம் இரவு பஸ்நிலைய கழிவறை ஷெட் இடிந்து கொத்தனார் பலியான சம்பவம் நடைபெற்றது. தற்போது மேலும் 2 பெண்கள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்