என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி"

    • இருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் துவங்கி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு மெல்ல தலைதூக்கும் நிலையில், டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    "டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு ஜே.என்.1 வகை பாதிப்பும், மற்ற இருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பும் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது," என டெல்லி சுகாதார துறை மந்திரி சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் நாடு முழுக்க டிசம்பர் 26-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா ஜே.என்.1 வகை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    "புதிய வகை கொரோனா பாதிப்புகள் தற்போதைக்கு வீரியம் குறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றன. இவை ஒமிக்ரான் குடும்பத்தை விட்டு தள்ளியே இருப்பதால், இது குறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், மீண்டும் கொரோனா பாதிப்பு பரவுவது வருந்தக்குரிய விஷயம் தான்."

    "இதன் காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம், அவை பரவுவதை தடுக்க முடியும்," என்று கங்காராம் மருத்துவமனையின் இருதவியல் துறையின் துணை தலைவர் மருத்துவர் பாபி பாலோத்ரா தெரிவித்து இருக்கிறார்.  

    • டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி பரிந்துரை
    • ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆதிமியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது.

    டெல்லி கலால் ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராஜ்யசபா நியமனத்திற்கான படிவங்கள் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட அனுமதிக்குமாறு திகார் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது

    தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக ஸ்வாதி மாலிவால் நியமிக்கப்பட்டார், ஆசிட் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்முயற்சிகளில் ஸ்வாதி மாலிவால் முக்கிய பங்கு வகித்தார்

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 இடங்களிலும் ஆம் ஆத்மி 62 இடங்களை கொண்டிருப்பதால், ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    ராகவ் சதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியை சேர்ந்த 10 பேர் மேலவையில் உள்ளனர். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் அதிகரித்துள்ளது.

    • அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் செல்கிறார்
    • மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பணிகளை கட்சிகள் துவங்கியுள்ளன

    அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாளை குஜராத் செல்கிறார்.

    புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், அவர் எந்த நேரத்திலும் கை செய்யப்படலாம் என்ற சூழல் நிழவி வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அவர் நாளை(ஜன.7) குஜராத் செல்கிறார்.

    மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு குஜராத் செல்லும் கெஜ்ரிவால், அங்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த இரண்டு நாள் சுற்று பயணத்தின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம் எல் ஏ சைத்ரா பசவானையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமலாக்கத் துறையின் 3 சம்மனுக்கும் ஆஜராகாததால் அரவிந்த் கேஜ்ரிவால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    • டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடைபெற உள்ளது
    • ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்றாவது வேட்பாளராக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி நியமித்துள்ளது.

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி இன்றுடன்(ஜன.12) முடிவடைந்த நிலையில், இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
    • முதலமைச்சர் ஏக்நாட் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான மிலிந்த் தியோரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாட் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து கூறிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருந்தார். ஒரு மிலிந்த் தியோரா வெளியேறினால், லட்சக்கணக்கான மலிந்த் தியோராக்கள் எங்களுடன் வந்து சேர்வார்கள். காங்கிரஸை இது எந்த வகையிலும் பாதிக்காது என தெரிவித்துள்ளார்.

    மிலிந்த் தியோராவின் விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித்தின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தீப் திக்ஷித், "மிலிந்த் தியோராவைப் போன்ற ஒருவர் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவின் கூட்டணிக் கட்சியில் இணையப்போவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. மனிதனுக்கு இரண்டு பெரிய பலவீனங்கள் இருக்கின்றன. பயமும், பேராசையுமே அவை" என தெரிவித்தார்.

    • 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்
    • இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி, இந்தியா தனது வீரம் மிக்க இந்திய இராணுவத்தை பெருமைப்படுத்தவும் ,நன்றி செலுத்தவும் இந்திய இராணுவ தினத்தை கொண்டாடுகிறது.

    1949ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியான மார்ஷல் கே.எம் கரியப்பாவின் 76வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    மார்ஷல் கே எம் கரியப்பா ஜனவரி 15, 1949 அன்று பிரிட்டிஷ் தலைமை தளபதியான ஜெனரல் பிரான்சிஸ் புட்சருக்குப் பிறகு இந்திய இராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றார். அதனால் இந்த மறக்கமுடியாத நாளில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அணிவகுப்பு நடைபெறும்.

    இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர். மேலும், தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    இவ்விழா உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விழா நடைபெறுகிறது.இன்று 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    ஜெனரல் மனோஜ் பாண்டே, தேச சேவையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    "இந்த இராணுவ தினமான 2024ல், இந்திய இராணுவத்தின் அனைத்து தரவரிசைகள், சிவில் ஊழியர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேச சேவையில் தங்கள் உயிரைக் கொடுத்த வீரார்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம். அவர்களின் தியாகம் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.இந்திய இராணுவம் 2024 ஐ "தொழில்நுட்பத்தில் இணைந்து செயலாற்றும் ஆண்டாக" இருக்கும்.இது இராணுவத்தின் திறன் தொழில்நுட்பத்தின் மாற்றத்திற்க்கு இணைந்து செயல்படும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

    தேசிய உணர்வில் இந்திய ராணுவத்துக்கு தனி இடம் உண்டு. தேசம் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதியில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."ஜெய் ஹிந்த்" என்று தனது உரையை முடித்தார்.

    மேலும் இராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • இந்திய உணவுக் கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது
    • இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய அங்கமாக உணவுக் கழகம் உள்ளது

    சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலையை மாற்றி அமைத்து, இந்தியாவின் உணவுத்தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யும் நோக்கில், அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அரசு, 1965-ம்ஆண்டு இந்திய உணவுக் கழகத்தை (எஃப்சிஐ) உருவாக்கியது. இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது.

    இந்தக் கழகம் உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உணவுக் கழகத்தின் பங்களிப்பு குறித்துப் பேசினார்.

    அவர் பேசியதாவது, "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய அங்கமாக உணவுக் கழகம் உள்ளது. உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, ஏழை மக்களுக்கு விநியோகிப்பதில் அதன் சாதனை வரலாற்று முக்கியத்துவமிக்கது. இந்தக் கழகம் வழியே இந்தியாவின் உணவு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

    மேலும், சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊழலற்ற நிர்வாகம் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நம்பிக்கையை பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

    • விமானியை பயணி தாக்கும் காட்சி இணையத்தில் வைரல்
    • பயணி மன்னிப்பு கேட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த விமானி அவர் மீது புகார் அளித்தார்

    டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று 110 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. மேலும் 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோவா செல்லவிருந்த விமானம் கடும் பனிமூட்டத்தால் பல மணி நேரம் தாமதமானது.

    இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வந்த விமானியை சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கியுள்ளார். விமானியை பயணி தாக்கும் காட்சியை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விமானத்தில் இருந்த அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து சாஹித் கட்டாரியா, விமானி அனுப் குமாரிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். மன்னிப்பை ஏற்க மறுத்த விமானி அவருக்கு எதிராக புகார் அளித்தார். சாஹித் கட்டாரியா மீது ஐபிசியின் பிரிவு 323, 341மற்றும் 290 மற்றும் விமான விதிகளின் பிரிவு 22 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    • இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா வருகிறார்.
    • விமானம் மூலம் கொச்சிக்கு வரும் பிரதமர் மோடி ரோடு-ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இன்று மாலை கேரளா செல்லும் பிரதமர் மோடி எம்.ஜி ரோட்டில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இருந்து எர்ணாகுளத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வரை ரோடு ஷோ செல்கிறார். அதனை தொடர்ந்து, நாளை கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி குருவாயூர் செல்கிறார். குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கு நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி-யும் நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    அதன் பின்னர் காலை 10 மணிக்கு திரிச்சூர் மாவட்டம் திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அங்கிருந்து கொச்சிக்கு திரும்பும் பிரதமர் மோடி, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்பு சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் 6 ஆயிரம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதன் பிறகு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வந்து செல்லும் வரை, குருவாயூர் கோவில் மற்றும் திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. பிரதமர் புறப்பட்டு சென்ற பின்னரே, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வருகையால், காலை குருவாயூர் கோவிலில் நடைபெற இருந்த 39 திருமணங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

    மோடி வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ரோடு-ஷோ மேற்கொள்ளும் இடங்கள், குருவாயூர் கிருஷ்ணர் கோவில், திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவில், கொச்சி கப்பல் கட்டும் தளம், எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார்.
    • ஆன்லைன், ஆஃப்லைனில் மக்கள் கருத்துகளை பெற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உருவாக்கம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார். அதன் தலைவராக நான் இருக்கிறேன். ஒருங்கிணைப்பாளராக சிங் தியோ இருக்கிறார். இக்குழுவில் 15 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இக்குழு ஏற்கெனவே இருமுறை கூடி ஆலோசித்திருக்கிறது. பணிகள் உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற இருக்கிறோம். இந்தத் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். எனவே, அதிக எண்ணிக்கையில் மக்களின் கருத்துகளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம் எனக் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், மக்களின் கருத்துகளைக் கேட்டுப் பெறுவதற்கான மேலும் இரு வழிகளை இன்று நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். ஒன்று, இதற்காக https://awaazbharatki.in என்ற இணையதளத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்த இணையதளத்தில் சென்று அதில் உள்ள பிரிவுகளின்படி மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இரண்டாவது வழி, awaazbharatki@inc.in என்ற இ-மெயில் ஐடி மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம்.

    நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளை வழங்க நாங்கள் வரவேற்கிறோம். இ-மெயில் மூலம் வரும் கருத்துகளை பல்வேறு பிரிவுகளாக பிரித்து, அவற்றில் சொல்லப்பட்டுள்ள யோசனைகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்யைில் மக்களை இணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை, உண்மையான மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்கிறார் முன்னாள் பிரதமர்
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி நடைபெற உள்ளது

    ஜன.22 ஆம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அயோத்தி செல்ல உள்ளதாக முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தது. அந்த அழைப்பை நான் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அழைப்பை ஏற்று என் குடும்பத்தினருடன் அயோத்தி செல்ல இருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர் செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்". மேலும். வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என தெரிவித்தார். 

    • குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
    • டெல்லி வான்பரப்பில் அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், குவாட்காப்டர்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த உத்தரவு பிப்ரவரி 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×