என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பும்ரா"
- பும்ரா பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
- நாங்கள் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறோம் என பேரக்குழந்தைகளிடம் சொல்வது நன்றாக இருக்கும்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 8 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு ஆயத்தமாகும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் 30 வயதான டிராவிஸ் ஹெட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பெர்த் டெஸ்டில் 89 ரன்கள் விளாசிய அவர் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளில் தொடரின் முதல் டெஸ்டில் தோற்று, அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடி தொடரை வென்ற அணிகள் நிறைய உள்ளன. கடந்த ஆண்டில் நாங்கள் சில சவாலான டெஸ்ட் போட்டி மற்றும் தொடர்களை எதிர்கொண்டு விளையாடி இருக்கிறோம். எங்களுக்கு இந்த ஒரு வாரம் சரியில்லாமல் போய் விட்டது. அது பரவாயில்லை. மேலும் 4 வாய்ப்புகள் உள்ளன. முந்தைய ஆண்டுகளில் செய்தது போல் கடினமான சூழலில் இருந்து மிக வேகமாக மீண்டெழுந்து வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கிரிக்கெட் வரலாற்றில் அனேகமாக தலைச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார். அவர் பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம். அவருக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, நாங்கள் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறோம் என பேரக்குழந்தைகளிடம் சொல்வது நன்றாக இருக்கும். மிகுந்த சவால் அளிக்கக்கூடிய அவரை இன்னும் சில முறை சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
முதலாவது டெஸ்டில் தடுமாறிய எங்களது பேட்ஸ்மேன்கள் என்னிடம் வந்து பேட்டிங் ஆலோசனை கேட்பார்களா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் அதற்காக என்னை அணுகமாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாணியில் ஆடக்கூடியவர்கள். இனி 2-வது டெஸ்டுக்கு தயாராவது குறித்து அடுத்த 3-4 நாட்கள் நாங்கள் விவாதிப்போம். உண்மையிலேயே பும்ரா மற்ற பந்து வீச்சாளர்களை காட்டிலும் தனித்துவமானவர். அவரை திறம்பட சமாளிப்பதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களுடைய வழியை கண்டறிய வேண்டும்.
2020-ம் ஆண்டு இதே அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் இந்தியாவை 36 ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றோம். அதில் எல்லாமே சீக்கிரம் முடிந்து விட்டது. அந்த வெற்றியை ரொம்ப உற்சாகமாக கொண்டாடினோம். அது போன்று மீண்டும் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்குமா? என்பது தெரியாது.
இவ்வாறு ஹெட் கூறினார்.
- விராட் கோலி 9 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ரிஷப் பண்ட் 736 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் தொடர்கிறார்.
துபாய்:
ஐசிசி வாரம்தோறும் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள், வீரர்கள், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-ம் இடம் பிடித்துள்ளார். 825 புள்ளிகள் பெற்ற ஜெய்ஸ்வால் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் (736 புள்ளி) 6-வது இடத்தில் தொடர்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி 9 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசிய பும்ரா, 883 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அஸ்வின் (807 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா (423 புள்ளி) முதல் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் (290 புள்ளி) 2வது இடத்திலும் தொடர்கின்றனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
- ஐசிசி பும்ராவின் ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது.
46 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஷ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார்.
534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கேப்டன் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து, பும்ராவின் பவுலிங் ஆக்சன் பந்தை எறிவது போல் இருப்பதாலேயே அவரை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என்றும் ஆனால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் ஐசிசி அவருடைய ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.
இந்நிலையில், ரசிகர்களின் இத்தகைய விமர்சனத்துக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் சேப்பல் எழுதியுள்ள தனது கட்டுரையில், "பும்ரா தலைமையில் இந்தியாவின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். அதனால் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 104க்கு ஆல் அவுட்டானது. சில நேரங்களில் பும்ரா கிட்டத்தட்ட விளையாட முடியாதவராக இருந்தார்.
பும்ராவின் ஆக்சன் பற்றி கேள்வி எழுப்பும் நான்சென்ஸ் வேலையை தயவு செய்து நிறுத்துங்கள். அவருடைய ஆக்சன் தனித்துவமானது. அதே சமயம் அது சந்தேகத்துக்கு இடமின்றி சரியாக உள்ளது அப்படிப்பட்ட ஒருவரை விமர்சிப்பது ஒரு சாம்பியனையும் நம்முடைய விளையாட்டையும் இழிவு படுத்துகிறது" என்று எழுதியுள்ளார்.
- 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது.
- பும்ரா 2 விக்கெட்டும் சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெர்த்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
The final over of the day, the perfect finish for India #AUSvIND pic.twitter.com/Pci4mZdEpW
— cricket.com.au (@cricketcomau) November 24, 2024
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே பும்ரா செக் வைத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆன மெக்ஸ்வீனியை டக் அவுட்டில் வெளியேறினார். இதனையடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய கம்மின்சை சிராஜ் அவுட்டாக்கினார். மேலும் பும்ரா அடுத்த ஓவரிலேயே லபுசாக்னேவை வீழ்த்த அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியா 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. உஸ்மான் கவஜா 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
- முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.
- உலகின் சிறந்த வீரராக பும்ரா இருக்கிறார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் நேற்று நாதன் மெக்ஸ்வீனி (10 ரன்), உஸ்மான் கவாஜா (8), ஸ்டீவ் சுமித், (0), கம்மின்ஸ் (3) ஆகியோரை அவுட் செய்தார். இன்று அலெக்ஸ் கேரி (21) விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீரர் என்று இலங்கை முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா பாராட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் இதை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அனைத்து வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) பும்ரா சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சில் தொடர்ந்து மெருகேறி வருகிறது.
உலகின் சிறந்த வீரராக அவர் இருக்கிறார்.
இவ்வாறு ஸ்டார்க் கூறியுள்ளார்.
- பும்ரா 5 விக்கெட் கைப்பற்றினார்.
- ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 150 ரன்னில் சுருண்டது. நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ராவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 9 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலேக்ஸ் கேரி 21 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அலேக்ஸ் கேரி விக்கெட் மூலம் பும்ரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து வந்த நாதன் லயனை ஹர்ஷித் ராணா 5 ரன்னில் வெளியேற்றினார். கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். அப்போது ஆஸ்திரேலியா 79 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை விக்கெட் எடுக்க விடாமல் தடுத்து விளையாடியது. இதனால் ஆஸ்திரேலியாவின் அல்அவுட் தாமதமாகிக் கொண்டிருந்தது.
இறுதியாக ஹர்ஷித் ராணா இந்த ஜோடியை பிரித்தது. இதனால் ஆஸ்திரேலியா 104 ரன்கள் எடுத்து ஆல்அவட் ஆனது. ஸ்டார்க்-ஹேசில்வுட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கடைசி விக்கெட்டாக ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும் ஹர்சித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 10 ஆண்டுக்கு பிறகு ஸ்மித் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.
- முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோல்டன் டக் அவுட் ஆனார்.
முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 150 ரன்னில் சுருண்டது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பும்ரா பந்து வீச்சில் கவாஜா 8 ரன்னில் ஆட்டமிழந்த போது ஸ்மித் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தை கோல்டன் டக் அவுட் முறையில் வீழ்த்திய 2-வது வீரர் பும்ரா ஆவார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஸ்டெய்ன் பந்து வீச்சில் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் தான் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார் ஸ்மித். இரண்டு அவுட்டுமே எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தப்பட்டது.
- இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் இன்று தொடங்கியது.
- இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
பெர்த்:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா இல்லாத சூழலில் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார்.
இந்த போட்டிக்கு முன்னதாக நேற்று இரு அணிகளின் கேப்டகளும் ஒன்றாக இணைந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். அதன்பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அதில் ஆஸ்திரேலியா பத்திரிகையாளர் ஒருவர், ஒரு மித வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியை வழிநடத்துவது எப்படி இருக்கிறது? என்று பும்ராவை கிண்டலடிக்கும் வகையில் கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பும்ரா, "என்னால் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்ய முடியும். குறைந்தபட்சம் என்னை வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் என்றாவது அழைக்கலாம்" என்று பதிலடி கொடுத்தார்.
- ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுகிறார்.
- வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறிவருகிறேன்.
இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக நுழைய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் வெல்ல வேண்டும். இது மிகவும் சவாலானதாகும்.
ரோகித் சர்மா தலைமையிலான அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. எதிர்பாராத இந்த தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதிலிருந்து மீண்டு ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடுவது முக்கியமானது.
ஆஸ்திரேலியாவில் கடைசி 2 டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. தற்போது 3-வது தடவையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்து கொள்ளாததால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஏற்றுள்ளார்.
கேப்டன் பொறுப்பை ஏற்றபின்பு பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கேப்டனாக அணியை வழிநடத்துவது கவுரமான விஷயம். இது ஒரு பாக்கியம். இதை நான் ஒரு பதவியாக எடுத்துக்கொள்ளவில்லை. பொறுப்பாக எடுத்து கொள்கிறேன். விராட் கோலி, ரோகித் போல எனக்கும் தனியாக ஒரு ஸ்டைல் இருக்கிறது. எனக்கென்று ஒரு தனி வழி இருக்கிறது. ரோகித் வந்தபிறகு தான் கேப்டனாக அணியை வழி நடத்துவது தொடர்பாக எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்தது.
வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறிவருகிறேன். அவர்களால் சிறப்பாக அணியை வழி நடத்தமுடியும். வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் கேப்டனாக ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். கடந்த காலங்களிலும் வேகப்பந்து வீச்சாளர்களில் கபில் தேவ் மாதிரியான சிறந்த கேப்டன்கள் இருந்துள்ளனர். இந்த நம்பிக்கையுடன் ஒரு ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்" என்று தெரிவித்தார்.
- ரோகித் சர்மா இடம் பெறாததால் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்கிறார்.
- நிதிஷ் ரெட்டி அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. ஒரு சுழந்பந்துடன் இந்தியா களம் இறங்கும்.
இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக நுழைய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் வெல்ல வேண்டும். இது மிகவும் சவாலானதாகும்.
ரோகித் சர்மா தலைமையிலான அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. எதிர்பாராத இந்த தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடுவது முக்கியமானது.
ஆஸ்திரேலியாவில் கடைசி 2 டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. தற்போது 3-வது தடவையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.
டெஸ்டுக்கு முன் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடும். ஆனால் இந்த முறை அவ்வாறு நடக்கவில்லை. இந்திய அணிகளை உருவாக்கி தங்களுக்குள் போட்டிகளில் விளையாடி பயிற்சி செய்தது. எந்த பயிற்சி ஆட்டத்திலும் ஆடவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் பெர்த்தில் தொடங்குகிறது. வேகப்பந்து வீரர் பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். ரோகித் சர்மாவின் மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. அவர் இந்த டெஸ்டில் ஆடவில்லை. பும்ரா இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்டுக்கு 2022-ம் ஆண்டு கேப்டனாக பணியாற்றி இருக்கிறார்.
கே.எல். ராகுலும், ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக விளையாடுகிறார்கள். சுப்மன் கில் காயம் அடைந்ததால் பெர்த் டெஸ்டில் ஆடுவது சந்தேகம். போட்டி நடைபெறும் தினத்தில்தான் அவரது நிலை குறித்து முடிவு செய்யப்படும். அவர் ஆட முடியாத பட்சத்தில் தேவ்தத் படிக்கல் 3-வது வரிசையில் ஆடுவார்.
விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக துருவ் ஜூரல் சிறப்பாக ஆடியதால் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பெறுவார். சர்பரஸ் கான் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.
பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இடம் பெறுவார். இதில் அஸ்வின், ஜடேஜா இடையே போட்டி நிலவுகிறது. வேகப்பந்து வீரர்களில் ஆகாஷ் இடம் பெறுவார். முகமது சிராஜ், ஹர்சித் ரானா இடையே போட்டி இருக்கும்.
நிதிஷ் குமார் ரெட்டியும், ஹர்சித் ரானாவும் டெஸ்டில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் நெருக்கடியில் இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கலாம். அவர் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடியவர். கடந்த காலங்களில் இதை பார்த்து இருக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சராசரி 47.83 ஆகும்.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக பிப்ரவரி- மார்ச் மாதம் நியூசிலாந்துடன் டெஸ்டில் விளையாடியது. 2 டெஸ்டிலும் வென்று முத்திரை பதித்தது. இதனால் இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.
அந்த அணியில் உஸ் மான் கவாஜா, ஸ்டீவ் சுமித், லபுஷேன், டிரெவிஸ் ஹெட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ், ஹாசல்வுட், லயன் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். புதுமுக வீரர் நாதன் மெக்ஸ் வீனி டெஸ்டில் அறிமுகமா கிறார்.
நாளை டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது கே.எல். ராகுல் ஓபனிங்.
- பும்ரா கேப்டனாக செயல்படுவார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுத் கம்பீர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கவுதம் கம்பீர் கூறியதாவது:-
தற்போது வரை ரோகித் சர்மா இடம் பெறுவாரா? இல்லையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் முதல் டெஸ்டில் இடம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ரோகித் சர்மா இல்லை என்றால் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் முடிவு எடுப்போம்.
கே.எல். ராகுல் உள்ளார். அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளார். சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்து விளையாட முயற்சிப்போம். பும்ரா தற்போது துணை கேப்டனாக உள்ளார். ரோகித் சர்மா இல்லை என்றால், பும்ரா கேப்டனாக செயல்படுவார்.
இவ்வாறு கம்பீர் தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோகித் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
- பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்-ல் வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விளையாடுவது சந்தேகம் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா விளையாடவில்லையெனில் அவருக்கு பதிலாக துணை கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதில், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விளையாடுவது முக்கியம். காயம்பட்டால் அது வேறு, ஆனால் அவர் வரவே இல்லை என்றால், துணை கேப்டன் தலைமையில் அணி களமிறங்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்