என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை"

    • பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படு கிறது.
    • மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் சின்னசேலம் சங்கரா புரம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்க ப்படு கிறது. இந்த மஞ்சள் ஜனவரி மாதம் பொங்க லுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு பகுதி களில் மஞ்சள் கொத்து கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கல்யாணமான பெண்க ளுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொங்கல் சீர் வரிசையில் முக்கியமாக பொருள்களாக விளங்கு வது மஞ்சள், கரும்பு பானை, அரிசி, வெள்ளம் இப்பொருள்களை வைத்து பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொடுப்பார்கள். இதில் முக்கிய பங்காற்றுவது மஞ்சள்.

    இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, வெல்லம், மஞ்சள், இஞ்சி ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. சின்னசேலம் நயினார்பாளையம் கூகையூர் மூங்கில்பாடி, கல்லாநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பொங்கல் பண்டிகையை யொட்டி விற்பனை செய்யும் வகையில் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். தற்போது மஞ்சள் அறு வடைக்கு தயார் நிலை யில் உள்ளது. சென்ற ஆண்டை ப்போல இந்த ஆண்டும் மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம். மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டும் நல்ல விலை கிடை க்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

    • பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம்.
    • ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

    குடிமங்கலம்:

    அறுவடைதிருநாளான பொங்கல் பண்டிகையின் போது விளைந்தும் விளையாத நிலையிலுள்ள பச்சை மஞ்சளை செடியுடன் கொத்தாக பொங்கல் பானையில் கட்டும் பழக்கம் உள்ளது. இதனாலேயே பொங்கல் பண்டிகையின் போது செங்கரும்புக்கு இணையான இடத்தை மஞ்சள் கொத்து பிடிக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து விற்பனை செய்யும் வகையில் மஞ்சள் சாகுபடியில் குடிமங்கலம் பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொங்கலன்று முக்கிய இடம் பிடிக்கும் மங்கலப் பொருளான மஞ்சள் கொத்து சாகுபடி விவசாயிகளுக்கு மன நிறைவைத் தருகிறது. பெரும்பாலும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம். உணவுக்காகவோ மற்ற பயன்பாட்டுக்காகவோ மஞ்சள் உற்பத்தி செய்யும்போது சுமார் 9 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். அதேநேரத்தில் பொங்கலுக்கு மஞ்சள் கொத்து உற்பத்தி செய்வதற்காக ஆடிப்பட்டத்தில் சாகுபடி மேற்கொண்டால் மார்கழி கடைசியில் அறுவடை செய்து விடலாம். வியாபாரிகள் நேரடியாக விளைநிலத்துக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். மனதுக்கு மகிழ்ச்சி தரும் அதேநேரத்தில் நல்ல வருவாயும் தரக்கூடியதாக மஞ்சள் சாகுபடி உள்ளது.இவ்வாறு விவசாயிகள் கூறினார்.

    • திருப்பூரில் பாத்திர உற்பத்தியாளர்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் பானை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தற்போது விலை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை.

    அனுப்பர்பாளையம்:

    ஜனவரி மாதம் 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், வேலம்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாத்திர பட்டறைகளில் பொங்கல் பானை உற்பத்தி சூடு பிடித்துள்ளது. அரை கிலோ முதல் 10 கிலோ வரை அரிசி பொங்கலிடும் வகையில் பானை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    திருப்பூரில் பாத்திர உற்பத்தியாளர்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் பானை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரமான தகடு, துல்லிய வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் ஆர்டரை செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகளால் பலர் இங்கு ஆர்டர் கொடுக்க விரும்புகின்றனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஆர்டர் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பு ஒரு கிலோ பித்தளை தகடு ரூ.270க்கும், கடந்த ஆண்டு ரூ.500 க்கும் விற்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.600 முதல் 650 வரை விற்கிறது. தகடை வெட்டி பானையாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வரும்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது. விலை அதிகம் என்பதால் மக்கள் பானை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். முன்பு மக்கள் பழைய பானை இருந்தாலும் பொங்கலிட புது பானை வாங்குவர்.

    தற்போது விலை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை. பழைய பானையை பாலிஷ் செய்து பயன்படுத்துகின்றனர் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். பொங்கல் பண்டிகைக்கு குறைந்த நாட்களே இருப்பதால் பெற்ற ஆர்டர்களுக்கு உரிய பானைகளை உற்பத்தி செய்து அனுப்பும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முன்பதிவு செய்ய வேண்டும்.
    • tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஜனவரி 15 பொங்கல் பண்டிகையும், 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்பட உள்ளது. தை பொங்கலுக்கு முந்தைய நாள் 14-ந்தேதி போகி கொண்டாடப்படுகிறது. ஆதலால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பே இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதால் அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எல்லா வகுப்புகளிலும் நிரம்பி விட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துவிடும் நிலையில் அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பஸ்களுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் இன்று முதல் அரசு விரைவு பஸ் களுக்கு முன்பதிவுக்கு திட்டமிடலாம்.

    ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முன்பதிவு செய்ய வேண்டும். tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை போல பொங்கலுக்கும் பெருமளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முந்தைய முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. குறைந்த அளவில் தான் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஜனவரி முதல் வாரத்தில் இருந்து புக்கிங் விறுவிறுப்பாக இருக்கும். முன்பதிவுக்கு தேவையான பஸ்கள் படிப்படியாக அதிகரிக்கப்படும். முதலில் அரசு விரைவு பஸ்களுக்கும் பின்னர் போக்குவரத்து கழக பஸ்களுக்கும் முன்பதிவு செய்யப்படும் பொங்கல் சிறப்பு பஸ்கள் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். சென்னை உள்ளிட்ட முக்கிய 3 நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளியை போல பொங்களுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பது பற்றி முடிவு செய்தனர்.
    • வருகிற 18-ந்தேதி (ஞாயிறு) பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ஜனதா உயர்மட்ட குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன், கரு.நாகராஜன் உள்பட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லி தலைமை வகுத்து கொடுத்த செயல்திட்டங்களை செயல்படுத்திய விபரம் பற்றி விவாதித்தனர்.

    மேலும் தொகுதி வாரியாக நிலவும் பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான அணுகுமுறைகள் பற்றியும் விவாதித்தனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பது பற்றி முடிவு செய்தனர். வருகிற 18-ந்தேதி (ஞாயிறு) பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தைப்பொங்கல் பாரம்பரிய விழாவை விவசாய அணி, மகளிர் அணியினர் மண்டல் வாரியாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 1,300 மண்டலங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

    இதில் அந்த பகுதியில் உள்ள சமுதாய பெரியோர்களை அழைத்து கவுரவப்படுத்துதல், இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துதல், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவற்றுக்கு திட்டமிட்டுள்ளனர்.

    • 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை.
    • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்கு பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது.

    சென்னை:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆணையிட்டது. ஆனால், இந்தப் பொருட்கள் தரமற்றவை என்றும், 21 பொருட்கள் என்பதற்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.

    மொத்தத்தில், 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை என்றும், பயனடைந்தவை தனியார் நிறுவனங்கள்தான் என்றும், 1,200 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.

    அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும், முழுமையான பலன் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வண்ணமும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்குப் பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது. இதன்மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும்.

    தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார்.
    • அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத்துறைகளின் செயல்பாடுகள் பற்றி கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி கூடி 3 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முறைப்படி முடித்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் கூடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதே போல் அடுத்த மாதம் பொங்கலுக்கு முன்பே ஜனவரி முதல் வாரத்தில் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    எந்த தேதியில் சட்டசபையை கூட்டுவது என்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து சபாநாயகரி டம் தெரிவிப்பார். பொங்கலுக்கு முன்பு கூட்டுவதா? அல்லது அதற்கு பிறகா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிய வரும்.

    கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். அதில் அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.

    தி.மு.க. அரசின் 1½ ஆண்டு செயல் திட்டம் குறித்தும், மேலும் அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் அதில் கவர்னர் வெளியிடுவார்.

    இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தும் அரசின் நிலைபாடு குறித்தும் கவர்னர் உரையில் இடம் பெறும் என தெரிகிறது.

    கவர்னர் வாசித்து முடித்ததும் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசிப்பார். இதைத் தொடர்ந்து அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து மறுநாளில் இருந்து விவாதம் தொடங்கும். இதில் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பேசுவார்கள்.

    இதற்கு அமைச்சர்களும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் விரிவாக பதில் அளித்து பேசுவார்கள்.

    சமீபத்தில் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அமைச்சர்களின் இருக்கைகளும் சட்டசபையில் மாற்றி அமைக்கப்படுகிறது.

    இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படுகிறது. அவர் 10-வது அமைச்சராக அமருவார். அவருக்கு இடதுபுறம் தங்கம் தென்னரசு, வலது புறம் ரகுபதி அமருவார்கள்.

    கவர்னர் உரை மீதான விவாதத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப உள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை, நெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி பரபரப்பாக பேசுவார்கள் என்பதால் சட்டசபையில் அனல் பறக்கும் விவாதங்கள் இடம் பெறும்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணிகள் என 2 பிரிவாக உள்ளதால் அவர்களுக்கு இடையேயான மோதலும் இந்த கூட்டத்தில் வெளிப்பட வாய்ப்புண்டு.

    மொத்தத்தில் வர இருக்கிற சட்டசபை கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    • சென்னையில் இருந்து புறப்படும் 300 பஸ்களில் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.
    • திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வெளியூர் செல்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது.

    அதன்படி கடந்த 12-ந் தேதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு விரைவு பஸ்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி 13-ந்தேதி பயணம் செய்ய 10 ஆயிரம் பேரும், 12-ந்தேதிக்கு 4 ஆயிரம் பேரும், 14-ந்தேதிக்கு 1000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 800 பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    சென்னையில் இருந்து புறப்படும் 300 பஸ்களில் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.

    திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு நடந்துள்ளது. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். முன்பதிவில் இணைக்கப்பட்டுள்ள விரைவு பஸ்கள் நிரம்பியவுடன் பிற போக்குவரத்து கழக பஸ்கள் இணைக்கப்படும்.

    தீபாவளியை போல பொங்கலுக்கு பஸ் பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுங்கள்.

    பொங்கல் சிறப்பு பஸ்கள் வழக்கம்போல இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அமைச்சர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரேசன் கடைகளில் ஆதாரை இணைக்காத கார்டுதாரரை கண்டறிந்து விண்ணப்பம் கொடுத்து ஆதாரை இணைக்க சொல்லி வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகளில் ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது.

    கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது.

    இந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட வெல்லம் மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சியினர் அரசு மீது குறை கூறினார்கள். மற்ற பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது.

    இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்படுகிறது.

    பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப்பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை கருத்து தெரிவித்து இருந்தது.

    ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேசன் கார்டுகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 கார்டுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தது. இதை பூர்த்தி செய்தால் தான் வங்கிக் கணக்கு மூலம் பணம் போட முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

    இதனால்தான் கூட்டுறவு துறை வெளியிட்ட அறிவிப்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கிக்கணக்கு இருந்தால் அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. ஆனாலும் இன்னும் அந்தப் பணி முழுமையாக முடிவடையவில்லை.

    ரேசன் கடைகளில் ஆதாரை இணைக்காத கார்டுதாரரை கண்டறிந்து விண்ணப்பம் கொடுத்து ஆதாரை இணைக்க சொல்லி வருகின்றனர்.

    இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப்பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

    ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.

    எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

    ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசின் சார்பில் இன்னும் வெளியாகவில்லை.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.
    • பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பல பிரசாத கடை உரிமையாளர்கள் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெல்லம் கொள்முதல் செய்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் அமராவதி பாசன பகுதிகளில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளில் பலர் அமராவதி சர்க்கரை ஆலைக்கு தங்களது கரும்புகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் தாங்களாகவே கரும்பினை அறுவடை செய்து பாகுகாய்ச்சி அவற்றை உருண்டை வெல்லமாகவும் அச்சு வெல்லமாகவும் நாட்டுச்சர்க்கரையாகவும் மாற்றி சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    இதில் பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பல பிரசாத கடை உரிமையாளர்கள் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெல்லம் கொள்முதல் செய்கின்றனர். இது தவிர கேரள மாநிலம் சபரிமலை, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் போன்றவற்றில் வழங்கப்படும் பிரசாதத்திற்கும் உடுமலையிலிருந்து வெல்லம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் வெல்ல விற்பனை சூடுபிடிக்கும். தற்போது உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், மஞ்சள் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, ரவை, கோதுமை மற்றும் மஞ்சப்பை என 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

    கடந்த ஆண்டை போலவே குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி மேலூர் பகுதி விவசாயிகள் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் இன்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளில் பலர் கரும்புடன் போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • கோ-ஆப்டெக்ஸ் குடோனில் கலெக்டர் ஆய்வு
    • டோக்கன் வழங்குவது தொடர்பாக பணிகள் தீவிரம்

    வேலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்திற்கு தேவைப்படும் சுமார் 4,42,000 வேஷ்டிகளும் 4,42,000 சேலைகளும் கோ-ஆப்டெக்ஸ் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

    அப்போது மண்டல மேலாளர் நாகராஜன், மேலாளர் முத்துராஜ், ஆய்வு மைய மேலாளர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    அதை தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்திற்கு தேவையான வேஷ்டி சேலைகள் மாவட்டத்தில் உள்ள மூன்று குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது.

    அவை சரிபார்க்கப்பட்டு தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேதமடைந்த பொருட்கள் தனியாக எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பின்னர் வேஷ்டி சேலைகள் அந்தந்த தாலுகா உட்பட்ட ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது. டோக்கன் வழங்குவது தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து வேஷ்டி சேலைகள் அனுப்பப்படும்.

    வள்ளிமலை பள்ளி வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள மணல் குறித்து புகார் வந்தது அது தொடர்பாக தாசில்தாருக்கு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது யார் அங்கு மணல் கொட்டினார் என்பது குறித்து கண்டறியப்பட்டு அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பரவி வரும் புதிய கொரோனாவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது என்றார்.

    இதைத் தொடர்ந்து மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குடியிருப்புகள் கட்டும் பணி பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இங்கு கட்டப்படும் வீடுகளில் குளியலறை கழிவறை தனித்தனியாக கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டு மார்ச் மாத தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

    ×