என் மலர்
நீங்கள் தேடியது "குண்டர் சட்டத்தில் ரவுடி கைது"
கடலூர்:
வடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார் வடலூரில் தனியார் பேக்கரி கடை எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வடலூர், அன்னை சத்யா தெருவை சேர்ந்த அருள்பாண்டி என்கிற அருள்(வயது 29) என்பவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரம்அடைந்த அருள்பாண்டி தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவை வெட்ட முயன்றார். அப்போது அங்கே நின்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பத்மா கொடுத்த புகாரின் பேரில் அருள்பாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது வடலூர், மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி ஆகிய 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து அருள்பாண்டியின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்(பொறுப்பு) கலெக்டர் அன்புசெல்வனுக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் அருள்பாண்டியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.