search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாளவாடி"

    தாளவாடி அருகே மொபட்-வேன் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள பிகினாரை என்ற ஊரை சேர்ந்தவர்கள் மாதேவப்பா (வயது 50), பசுவண்ணப்பா (52). கூலி தொழிலாளர்கள்.

    அவர்கள் 2 பேரும் இன்று காலை கோடிபுரத்தில் உள்ள கோவிலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    தர்மபுரம் அருகே சென்ற போது தாளவாடியில் இருந்து பிகினாரை நோக்கி வந்த வேனும், மொபட்டும் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் மொபட்டில் வந்த மாதேவப்பா, பசுவண்ணப்பா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மாதேவப்பா பரிதாபமாக இறந்தார். பசுவண்ணப்பாவின் கால் முறிந்தது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. ஆனால் முட்டைகோஸ் விலை குறைவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்தில் தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதி நகர், கெட்டவாடி அருள்வாடி போன்ற 40 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

    இங்கு கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.

    இந்த பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. உள்ளதாகவும் இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோசுக்கு ரூ.1 முதல் ரூ.2 மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்

    3 மாத பயிரான முட்டைகோஸ் 1ஏக்கர்க்கு நாற்று, களைஎடுத்தல், உரம் மருந்து என 50 வரை செலவு ஆகிறது.

    இந்த முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்துள்ளது. வெளி மார்க்கட்டில் தற்போது கிலோ ரூ.15க்கு முட்டைகோஸ் விற்றாலும் விவசாயிகளிடம் இருந்து 1 ரூபாய் முதல் 2 ரூபாய் மட்டுமே வியாபாரிகள் கேட்கின்றனர்.

    குறைந்தபட்சம் ரூ.10க்கு விற்றால் தான் ஓரளவு கட்டுபடியாகும். ஆனால் விளைச்சல் அதிகம் எனக் காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்பதால், முட்டைகோசை அறுவடை செய்வதா? இல்லை அப்படியே பூமியிலேயே விட்டு விடுவதா? என்று புரிய வில்லை.

    இவ்வாறு வேதனையுடன் கூறினர்.

    கடந்த 6 மாதமாக இதே நிலை நீடிப்பதால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினர்.

    ×