என் மலர்
நீங்கள் தேடியது "மாவோயிஸ்ட்"
- தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
- அவர்களின் தியாகம் எப்போதும் நினைவுக்கூரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பத்து போலீசார் மற்றும் ஓட்டுனர் பலியாகினர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலை அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
"சத்தீஸ்கர் போலீசார் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் எப்போதும் நினைவுக்கூரப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் டுவிட் செய்துள்ளார்.
- ஒரு வீட்டில் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய நுழைந்த போது போலீஸ் சுற்றி வளைப்பு.
- மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கேரள மாநில காவல்துறையின் சிறப்புப்படைக்கும்- மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இறுதியில் இரண்டு மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.
கோழிக்கோடு மாவட்டம் அருகே மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான நபர் மூலம், தலப்புழா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக புலனாய்வுத்துறை தெரிந்து கொண்டது.
அதன்பேரில் தலப்புழா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையின் சிறப்புப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யவதற்காக ஒரு வீட்டில் ஐந்து நக்சலைட்டுகள் நுழைந்ததை கண்டுபிடித்து, அந்த வீட்டை சுற்றி வளைத்தது.
அப்போது வீட்டில் இருந்த நக்சலைட் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று நக்சலைட் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் ஒரு ஆண், ஒரு பெண் என இரு நக்சலைட்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸ் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- எந்தவொரு தொழிலதிபரும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிப்பார்கள் என்று தெரிவித்தார்
ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸ் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்சத்பூரில் பிரச்சாரப் பேரணியில் பேசிய அவர், "பரம்பரைக் கட்சி அரசியலை ஆதரிக்கும் காங்கிரஸ், மக்களவைத் தொகுதிகளை தங்களின் மூதாதையரின் சொத்துக்களாக கருதுகிறது. எந்தவொரு தொழிலதிபரும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிப்பார்கள். அதற்கு காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) பேசும் தொனி மாவோயிஸ்டுகளின் மொழியாக இருப்பதே ஆகும்.

அதைப் பயன்படுத்தி புதுமையான வழிகளில் தொழிலதிபர்களிடமிருந்து காங்கிரஸ் பணம் பறிக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு, இளவரசரின் (ராகுல் காந்தியின்) தொழில் எதிர்ப்பு மற்றும் தொழிலதிபருக்கு எதிரான மாவோயிஸ்ட் மொழியுடன் அவர்கள் உடன்படுகிறார்களா என்பதற்கு பதிலளிக்க தைரியமாக இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் அங்கு பேசுகையில், மக்களின் அடிப்படை வசதிகளை காங்கிரஸ் மறுத்து வருவதாகவும் ஜார்கண்டில் 18,000 கிராமங்களின் நிலை 18 ஆம் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இருந்தது என்றும் தெரிவித்தார். தற்போது ஜார்கண்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட் ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயன்பூர்- தண்டேவாடா- கொண்டாகவுன் ஆகிய பகுதிகள் சந்திக்கும் எல்லையில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நேற்று ஜூன் 7 ஆம் தேதி இரவு நடந்த மோதலில் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.
இந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் மூவர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் கிழக்கு பஸ்தர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நெடுங்காலமாக சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிலவி வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. அடர் கானகத்துக்குள் இவர்கள் இருப்பு கொண்டுள்ளதால் அவர்களை தேடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
இதற்கிடையில் அவ்வப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையில் நடக்கும் மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது. சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட் ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- பல பகுதிகளை சேர்ந்த கிராமங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டன.
- 36 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர்-தன்டேவாடா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஓர்ச்சா மற்றும் பர்சூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கோவல், நெந்தூர், துள்துளி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேற்று தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இன்று நண்பகல் நெந்தூர் - துள்துளி அருகே உள்ள காடுகளில் என்கவுன்டர் நடந்தது. தீவிர எச்சரிக்கையுடன், காடுகளுக்குள் பின்வாங்கிய சில மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் பின்தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இதுவரை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 36 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது சமீபத்திய என்கவுண்டர்களில் பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றன.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஏ.கே. சீரிஸ் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த என்கவுண்டர் அமைந்துள்ளது.
- சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆண்டில் சுக்மா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 207 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மந்திரி அருண் சாவோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுக்மாவில் பாதுகாப்பு படையினர் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளனர். பாதுகாப்புப் படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு, கடுமையான நிலப்பரப்புகளிலும் பாதுகாப்புப் படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மாவோயிஸ்ட்கள் இல்லாத பகுதியாக பஸ்தார் வெகு விரைவில் மாறி விடும். அங்கு அமைதி மீட்டெடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதைக்கு வரும் என தெரிவித்தார்.
- பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- தேடுதல் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதனை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் தெற்கு அபுஜ்மாத் காட்டில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலில் தலைமைக் காவலர் சன்னு கரம் உயிரிழந்தார். பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சூடு துவங்கியது. நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்ட பின், நான்கு மாவோயிஸ்டுகளின் உடல்கள், ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.
என்கவுன்டரை தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
- சலபதி என்று அழைக்கப்படும் ராமச்சந்திர ரெட்டி இயக்கத்தின் முக்கிய 7 தலைவர்களில் ஒருவர் ஆவார்.
- அதன் பிறகே அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.
சத்தீஸ்கரில் நடந்து வரும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் நேற்று 20 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கரியாபண்ட் மாவட்டத்தில் சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் உள்ள மெயின்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டில் திங்கள்கிழமை இரவும் நேற்றும் [செவ்வாய்க்கிழமை] பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டு இயக்க தலைவர் ஒருவரும் அடங்குவார். அவரது தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. சலபதி என்று அழைக்கப்படும் ராமச்சந்திர ரெட்டி இயக்கத்தின் முக்கிய 7 தலைவர்களில் ஒருவர் ஆவார்.
இராணுவ வியூகம் மற்றும் கொரில்லா போரில் நிபுணராகக் சலபதி கருதப்படுகிறார். 2004 இல், PWG மற்றும் பிற மாவோயிஸ்ட் குழுக்கள் இணைந்தபோது, சலபதி சிபிஐ (மாவோயிஸ்ட்) இல் உறுப்பினராகி இயக்கத்தில் பெரிய இடத்துக்கு வளரத் தொடங்கினார்.
ஒடிசாவின் கந்தமால் மற்றும் காலாஹண்டி மாவட்டங்களில் சலபதி களத்தில் நக்சல் நடவடிக்கைகளைத் தொடங்கினார். 2011ல், கந்தமால் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கில் கொள்ளையடிக்க அவர் மேற்கொண்ட முயற்சி, போலீசாரால் முறியடிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் எல்லையில் செயல்பட்ட சலபதி நக்சல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றினார். 2008 ஆம் ஆண்டு ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் கொல்லப்பட்டனர். இந்தத் ராமகிருஷ்ணா என்ற தலைவர் திட்டமிட்ட இந்த தாக்குதலை களத்தில் வெற்றிகரமாக நடத்தியவர் சலபதி.
10 வருடம் தலைமறைவாக வாழ்ந்த சலபதி தனது மனைவி அருணாவுடன் (சைதன்யா வெங்கட் ரவி) காடுகளில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் கைவிடப்பட்ட ஸ்மார்ட்போனில் அருணா மற்றும் சலபதியின் செல்ஃபி கண்டுபிடிக்கப்பட்டது.

இது 2016 இல் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்த செல்ஃபி அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது.
அதன் பிறகே அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இறுதியில், இந்த செல்ஃபியை ஒரு தடயமாகப் பயன்படுத்தி, சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் சலபதி கொல்லப்பட்டுள்ளார்.