என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சச்சின் டெண்டுல்கர்"

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது.

    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் நேற்று நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தது.

    இதற்கிடையே, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி மீண்டும் குஜராத் வீரரான சாய் சுதர்சன் வசமானது.

    இந்த ஆட்டத்தில் 48 ரன் எடுத்த சாய் சுதர்சனின் ரன் எண்ணிக்கை 504-ஆக உயர்ந்தது. அவர் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவிடம் இருந்து (475 ரன்) ஆரஞ்சு தொப்பியை தட்டிப் பறித்துள்ளார்.

    இந்நிலையில், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நேற்று 54 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்தார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்சுக்குப் பிறகு இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரராக சாய் சுதர்சன் திகழ்கிறார்.

    இந்திய வீரர்களில் இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 59 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்ததே அதிவேகமாக இருந்தது. அதனை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.

    • ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்தார்.
    • பெங்களூரு அணிக்காக கோலி, படிக்கலுக்கு அடுத்தபடியாக படிதார் 1000 ரன்களை கடந்தார்.

    ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 28 ரன்கள் அடித்த பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்தார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை படிதார் முறியடித்துள்ளார். 30 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை படிதார் அடைந்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் 31 போட்டிகளில் 1000 ரன்களை அடித்திருந்தார் .

    ஐபிஎல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் தமிழக வீரர் சாய் சுதர்சன் (25 போட்டிகளில்) முதல் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பெங்களூரு அணிக்காக கோலி, படிக்கலுக்கு அடுத்தபடியாக 1000 ரன்களை கடந்த 3 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படிதார் படைத்துள்ளார். 

    • தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.
    • கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானாக கருதப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்றார்.

    தற்போது இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.

     இதற்காக அவர் கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார். அப்போது அவர் பெலகாவி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.

    மேலும், அவரது ரசிகரான கடை உரிமையாளருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.
    • இந்திய அணியுடன் நாங்கள் உடன் நிற்கிறோம்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்த வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடும் போது, நம் அணியின் தோல்வியையும் நாம் ஏற்று கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கான் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இந்திய அணி முழு தேசத்திற்கும் உண்மையில் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்து வருகிறது. இருந்தாலும் உங்கள் இறுதிப் போட்டிக்கான பயணம் விரைவில் முடிந்து போனது.

    எனினும் அணியின் ஒவ்வொரு விளையாட்டையும் நாங்கள் ரசித்தோம். வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம். இரண்டு முடிவுகளும் தவிர்க்க முடியாதவை. அதனால் நாங்கள் உங்கள் உடன் நிற்கிறோம். சிறந்த அணியுடன் நிற்க நாங்கள் இங்கு இருக்கிறோம். முன்னெப்போதையும் விட வலுவாகவும் சிறப்பாகவும் திரும்பி வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்தது.
    • இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இன்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்திய அணியின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்பது எனக்குத் தெரியும்.

    நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை இலக்காக வைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வோம். அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 168 ரன்கள் போதுமானதல்ல.

    விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் நாம் தோல்வி அடைந்தோம். இது எங்களுக்கு கடினமான ஆட்டம், மோசமான மற்றும் ஏமாற்றம் தரும் தோல்வி.

    நம்பர் 1 இடத்தைப் பெறுவது என்பது ஒரே இரவில் நடக்காது. அந்த அணி குறிப்பிட்ட காலத்தில் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், இந்திய அணி அதைச் செய்திருக்கிறது.

    ஒரு தோல்வியின் அடிப்படையில் வைத்து இந்திய அணியை மதிப்பிட வேண்டாம். வீரர்களும் வெளியே சென்று தோல்வியடைய விரும்பவில்லை. விளையாட்டுகளில் இந்த ஏற்றத் தாழ்வுகள் உண்டு. நாம் அதில் ஒன்றாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • கோவா அணிக்கு இடம் பெயர்ந்த அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

    கோவா:

    ரஞ்சி கிரிக்கெட்டில் கோவா- ராஜஸ்தான் அணிகள் (சி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் கோவாவில் உள்ள போவாரிம் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த கோவா அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கோவா 8 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்தது. சுயாஷ் பிரபுதேசாய் இரட்டை சதமும் (212 ரன், 416 பந்து, 29 பவுண்டரி), அர்ஜூன் தெண்டுல்கர் சதமும் (120 ரன், 207 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

    இதில் 7-வது வரிசையில் ஆடிய அர்ஜூன் தெண்டுல்கரின் பேட்டிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த சாதனையாளரான ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார்.

    கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கோவா அணிக்கு இடம் பெயர்ந்த 23 வயதான அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

    இவரது தந்தை சச்சின் தெண்டுல்கரும் தனது அறிமுக முதல்தர போட்டியிலேயே சதம் அடித்தது நினைவு கூரத்தக்கது. அதாவது 1988-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த குஜராத்துக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்தில் மும்பை அணிக்காக 15-வது வயதில் களம் கண்ட தெண்டுல்கர் 100 ரன்கள் எடுத்தார். இப்போது அவரை போன்று அவருடைய மகனும் சாதித்துள்ளார்.

    • அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார்.

    கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய கோஷங்களுடன் மகுடத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா அணி. நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்த இப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.

    இந்த போட்டியில் அர்ஜெண்டினா கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததை விட, எப்படியாவது லியோனல் மெஸ்சி வென்றுவிட வேண்டும் என்று தான் கடும் பிரார்த்தனையில் இருந்தனர். இதற்கு காரணம் மெஸ்சி விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது இருந்திருப்பது தான். இதனை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

    சுமார் 18 ஆண்டுகளாக கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் மெஸ்சிக்கு இந்த உலகக்கோப்பையில் சாதனைகளும் குவிந்தன. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் மெஸ்சியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்கோப்பை என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும் அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையின் போது லட்சியம் நிறைவேறியிருந்தது. இதே போன்ற சூழல் தான் இன்று மெஸ்சிக்கும் நிறைவேறியுள்ளது.

    இந்தியாவின் 28 வருட உலகக்கோப்பை கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, இன்று அர்ஜெண்டினாவின் 36 ஆண்டு கால கனவு லியோனல் மெஸ்சிக்காக நிறைவேறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு, மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை இந்திய வீரர் சச்சின் பெற்றுள்ளார்.
    • அவர் 19 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அஸ்வின் நெருங்கி விட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்திய வீரர் சச்சின் என்பதும் அவர் 19 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் அஸ்வின் இதுவரை 18 ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளார். இன்னும் ஒரே ஒரு ஆட்டநாயகன் விருதை அவர் பெற்றுவிட்டால் சச்சினுக்கு இணையாக 19 ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை விரைவில் அவர் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 45 சதத்தை பதிவு செய்தார்.
    • இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் சேர்த்தது.

    அதிரடியாக விளையாடிய விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 45 சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்கள் (9 சதம்) அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். சச்சின் 8 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    இன்றைய சதத்தின் மூலம் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த சச்சின் சாதனையை இவர் சமன் (20 சதங்கள்) செய்துள்ளார்.

    சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி இன்னும் 5 சதங்கள் எடுத்தால் ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.

    • அப்போதைய காலத்தை இப்போதுடன் ஒப்பிட முடியாது.
    • நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விட அதிக சதங்கள் அடிப்பார்.

    இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது.

    அதை தொடர்ந்து 374 ரன்களை துரத்திய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்றார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் 45 சதங்களையும் ஒட்டுமொத்தமாக 73 சதங்களையும் அடித்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனையை விரைவில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் எவ்வளவு சதங்கள் அடித்தாலும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட முடியாது என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது சாதனையை பொறுத்ததல்ல. நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விட அதிக சதங்கள் அடிப்பார். ஏனெனில் இப்போது விதிமுறைகள் மாறிவிட்டன.

    அப்போதைய காலத்தை இப்போதுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அப்போது ஒரு இன்னிங்ஸில் 1 புதிய பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 2 புதிய பந்து பயன்படுத்தப்படுவதுடன் உள்வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.

    இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்து விளங்குவதால் இந்த சாதனையை நிச்சயம் முறியடிப்பார்.

    என்று அவர் கூறினார்.

    • விராட் கோலி 166 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
    • விராட் கோலி 46வது சதமடித்து அசத்தினார்.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி 166 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷுப்மன் கில் 116 ரன் எடுத்தார். ரோகித் சர்மா 42 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்னில் அவுட்டாகினர்.

    இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய இலங்கை 73 ரன்னில் சுருண்டது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.

    சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார்.

    சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46-வது சதத்தை 452- வது இனனிங்சில் தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

    மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்தார்.

    • நியூசிலாந்து அணிக்கு எதிராக தனிநபர்கள் எடுத்த அதிகபட்ச ரன்னாக 186 ரன்கள் இருந்தது.
    • 24 வருடங்களுக்கு பிறகு சச்சினினின் இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 208 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 24 வருட சாதனையை சுப்மன் கில் தகர்த்துள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக தனிநபர்கள் எடுத்த அதிகபட்ச ரன்னாக 186 ரன்கள் இருந்தது. இதனை 1999-ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார்.

    இந்நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு சச்சினினின் இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஹேடன் 181 ரன்களும், கேலகன் 169 ரன்களும் முன்னாக எடுத்திருந்தனர். இவை அனைத்தையும் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

    ×