என் மலர்
நீங்கள் தேடியது "slug 166982"
- ஆதார் கார்டில் ஆதார் கைரேகை புதுப்பித்தல், தொலைபேசி எண் மாற்றம் ஆகியவை செய்யப்பட்டன.
- புதிதாக ஆதார் கார்டு எடுக்கப்பட்டன.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் உள்ள சாமளாபுரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம், ஆதார் கைரேகை புதுப்பித்தல், தொலைபேசி எண் மாற்றம், புதிதாக ஆதார் கார்டு எடுத்தல் ஆகியவை செய்யப்பட்டன.
சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான பட்டீஸ்வரன், நித்யா ஆரோக்கியமேரி, மைதிலி, வேலுச்சாமி, மேனகா, கிருஷ்ணவேணி, பூங்கொடி, மகாலட்சுமி, கனகசபாபதி, தமாளன்வினோஜ்குமார், பிரியா, பெரியசாமி,துளசிமணி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாளை மறுநாள் தொடங்குகிறது
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படி வாக்காளர் பட்டி யலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தக வல்களை உறுதிப்படுத்திட வும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதி யில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடங்க உத்தர விடப்பட் டுள்ளது.
அதன்படி, குமரி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அடங்கி உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலோ அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூல மாகவோ அல்லது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6-பியை பூர்த்தி செய்து கொடுத்தோ, தங்கள் பகுதிக் குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையத்தினை அணுகியோ தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டி யலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
- அவினாசி, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், மடத்துக்குளம், பல்லடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நன்மைக்காக நாளை 9-நதேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது.
அதன்படி அவினாசி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும், தாராபுரம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், காங்கயம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம், மடத்துக்குளம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், பல்லடம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர் வடக்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், தொட்டிப்பாளையம் மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், நல்லூர் மண்டல அலுவலகம், மாநகராட்சி மைய அலுவலகம், உடுமலை தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், உடுமலை நகராட்சி அலுவலகம், ஊத்துக்குளி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் பங்கேற்று ஆதார் கார்டில் கைரேகை பதிவை புதுப்பித்து, சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- பணியாற்றக்கூடிய பெண்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை
- பொதுமக்கள் பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றம்
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம் அருகே ஆதார் மையம் செயல்படுகிறது.
இங்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். தினமும் ஏராள மானவர்களுக்கு ஆதார் பதிவு, முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணியாற்றக்கூடிய பெண்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக இன்றைய தினம் இந்த ஆதார் மையத்தை திறக்காமல் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் ஆதார் மையத்திற்கு வந்த பொதுமக்கள் பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இது குறித்து அறிந்ததும் தாசில்தார் சேகர் , கிராம நிர்வாக அதிகாரி மோகன் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். கலெக்டர் கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகா ரிகள் உறுதி அளித்தனர்.
இதே போல் தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டாறு தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மைய பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- முகாமை நகராட்சித்தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன் மற்றும் கவுன்சிலர்கள் துவக்கி வைத்தனர்.
- கை ரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் தொடங்கியது. வார்டு வாரியாக வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலும், அஞ்சல் துறையுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது.ருத்ரப்ப நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 26, 27, 28, 29, 30, 31, 32 மற்றும் 33வது வார்டுகளுக்கு நடந்தது. இங்கு நாளை வரை முகாம் நடக்கிறது.
முகாமை நகராட்சித்தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன் மற்றும் கவுன்சிலர்கள் துவக்கி வைத்தனர். 14-ந் தேதி முதல், 17-ந் தேதி வரை சதாசிவம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில்15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25வது வார்டு மக்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.
தாராபுரம் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 18 முதல் 21-ந் தேதி வரை, 1, 2, 3, 4, 5, 13 மற்றும் 14வது வார்டு மக்களுக்கு நடக்கிறது. பார்க் நகராட்சி பள்ளியில்வரும் 22 முதல் 25-ந் தேதி வரை 10, 11, 12, 13, 18 மற்றும் 24வது வார்டுகளுக்கும், ராஜலட்சுமி நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில் வரும் 26 முதல், 30-ந் தேதி வரை 6, 7, 8 மற்றும் 9வது வார்டு மக்களுக்கும் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது. இதில்முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், கை ரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தூன்கன்பாரா பகுதியைச் சேர்ந்த பாஷி என்ற 80 வயது முதியவர் சில நாட்களுக்கு தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவர் அரசு பேருந்தில் ஏறி அருகில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் டிக்கெட் எடுத்துள்ளார்.
ஆனால் அப்பகுதியில் இறங்காமல் இருந்த அவரை விசாரித்த போது அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. மறதி நோயால் பாதிக்கப்பட்ட அந்த முதியவரிடம் பஸ் கண்டக்டர் கேட்ட போது, அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற பதிலை மட்டும் மீண்டும், மீண்டும் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் போலீசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரிடம் விசாரித்தனர். அவர் சரிவர பதில் அளிக்காததால், அவரை அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு அழைத்துச் சென்றனர். கண்டிப்பாக இவர் ஆதார் அட்டை வாங்கியிருப்பார் என்ற நம்பிக்கையில் அவர் கைரேகையை சோதனை செய்தனர். இதன் மூலம் முதியவரின் வீட்டு முகவரி மற்றும் போன் நம்பர் கிடைத்தது.
இதையடுத்து, பாஷியின் வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர் தனது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார். ஆதார் மூலம் முதியவர் தனது குடும்பத்துடன் இணைக்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #aadhaar #kerala
வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் முதல் விசாரித்து வந்தது.
ஒவ்வொரு முறை விசாரணையின் போதும் சில இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. #Aadhaar