என் மலர்
நீங்கள் தேடியது "நிர்மலா சீதாராமன்"
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
- வங்கித்துறைகளின் செயல்பாடு குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்நிலையில், வங்கித் துறைகளின் செயல்பாடு குறித்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அதிகாரிகளுடன் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
எந்தவொரு நெருக்கடி அல்லது அசாதாரண சூழ்நிலையை கையாளும் வகையில் அனைத்து வங்கிகளும் தயாராக இருக்க வேண்டும்.
குடிமக்களுக்கும், வணிக நிறுவங்களுக்கும் வங்கி மற்றும் நிதி சேவைகள் எந்த இடையூறும் இன்றி தடையின்றி கிடைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
மக்களுக்கு நேரடியாக வங்கி சேவையும், டிஜிட்டல் சேவைகளும் கிடைக்க செய்வதுடன், ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் இருக்க வேண்டும்.
யு.பி.ஐ. மற்றும் இணையதள சேவைகள் தங்கு தடையின்றி தொடர வேண்டும்.
அசாதாரண சூழல்களை சமாளிப்பது குறித்த முன்னெச்சரிகை நடவடிக்கைகளை ஒத்திகை செய்து பார்க்க வேண்டும்.
எல்லைப் பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைப்புகளுடன் வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
- தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது.
- சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது மோடி போடும் வரி இல்லை. எல்லா மாநில நிதியமைச்சர்களும் அடங்கியதுதான் கவுன்சில். நடுத்தர மக்கள் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்ற வாதம் தவறானது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாகவே வரி இருந்தது. முன்னதாக இருந்ததை விட ஜிஎஸ்டி வந்த பின் வரி விகிதம் குறைந்துள்ளது.
* தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது. இன்றும் தமிழ்நாட்டு வீதிகளில் சாதி பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது.
* சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா?. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக-வின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது.
* நிதி ஒதுக்கும்போது மறைமுகமாக எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
* நீதிமன்றம் கண்டித்த பின்னர் அமைச்சர்களை நீக்கும் நிலை யாருக்கு வந்தது? திமுக கூட்டணிக்கா? இல்லை பாஜக கூட்டணிக்காக?
* குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று
* தங்களை விட வளர்ச்சியடையாதவை எனக் கூறும் வட மாநிலங்களில் கூட இத்தகைய அவலம் நிகழவில்லை.
- கொரோனா தொற்று காலத்தின்போது நமது நிதி பற்றாக்குறை அதிகரித்தது.
- இந்த நிதி பற்றாக்குறையை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்பது குறித்து 2021-ல் தெளிவான பார்வையுடன் வந்தோம்
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களிடம் உரையாடினார். அப்போது மோடி அரசு 2047-க்குள் விக்சித் பாரத் என வளர்ச்சி இந்தியாவுக்கான மாற்றத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறது என்றார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
கொரோனா காலத்தின் போதும் இந்தியா நிதி ரீதியாக விவேகமான கொள்கைகளைப் பின்பற்றியது. சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் தேவையற்ற நிதிச் செலவை கட்டுப்படுத்தியது.
கொரோனா தொற்று காலத்தின்போது நமது நிதி பற்றாக்குறை அதிகரித்தது. ஆனால், இந்த நிதி பற்றாக்குறையை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்பது குறித்து 2021-ல் தெளிவான பார்வையுடன் வந்தோம். வருடத்திற்கு வருடம் என்ற இலக்கை நிர்ணயித்தோம். அதன்படி 2026-க்குள் நிதி பற்றாக்குறையை 4.5 சதவீத்திற்கு கீழ் கொண்டு வர உறுதிப்பூண்டோம். நாம் நிர்ணயித்ததுபோன்று தோல்வியின்றி வருடத்திற்கு வருடம் பின்தொடர்ந்து வருகிறோம்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் "2047-க்குள் வளர்ச்சி இந்தியா (விக்சித் பாரத்) என்பதுதான் நம்முடைய அரசின் முக்கிய கவனம். பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய சாதிகளை கவனித்துக் கொள்வதன் மூலம் இதை அடைய முடியும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நமது திறன்களை வளர்ப்பதற்கு முக்கியமான Sunrise Sectors மற்றும் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுத்துள்ள டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) போன்ற துறைகளிலும் இந்தியாவின் கவனம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
- சந்தித்தால் சந்திதேன் என்று சொல்லப்போகிறேன். எனக்கு என்ன பயமா? என்ன தயக்கமா?
- நான் தனித்து போட்டியிட போகிறேன் என்று தெரியும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* சந்தித்தால் சந்திதேன் என்று சொல்லப்போகிறேன். எனக்கு என்ன பயமா? என்ன தயக்கமா?
* நீங்களா சந்தித்தாரா? சந்தித்து இருப்பாரா? என்று சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி?
* ரஜினி என்ன பா.ஜ.க.வா? நான் அவரை அன்பின் நிமித்தமாக, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று சொல்லி விட்டேன்.
* ஒவ்வொன்றையும் நீங்களாக கற்பனை செய்து கொள்கிறீர்கள்.
* நேற்று நீங்கள் தான் சொன்னீர்கள். வேதாரண்யத்தில் வேட்பாளரை அறிவித்ததாக சொன்னீர்கள்.
* நான் தனித்து போட்டியிட போகிறேன் என்று தெரியும். கூட்டணி வைப்பவன் நான் ஏன் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 11 மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
- திடீர் விருந்து நிகழ்ச்சி கட்சியினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னை:
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தார். இரவு சென்னையில் தங்கினார்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் விழுப்புரம் கோட்டத்தில் உள்ளடங்கிய கட்சியின் மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்களுக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது.
அதில், இன்று காலை 8.30 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் காலை விருந்து வழங்குவதாகவும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இன்று காலையில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை மாவட்டத் தலைவர்கள் சஞ்சீவி, பாஸ்கர், லதா சண்முகம், குமார், பாலாஜி, கிரி, நாகராஜ் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், கபிலன், சாய் சத்யன், கிருஷ்ண குமார், தனசேகர், மனோகர் ஆகியோரும் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 11 மாவட்டத் தலைவர்கள் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இவர்களுடன் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கோட்ட பொறுப்பாளர்கள் கரு.நாகராஜன், வினோஜ் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் கட்சியினருடன் அமர்ந்து உணவருந்தி கலந்துரையாடினார்.
இந்த திடீர் விருந்து நிகழ்ச்சி அழைப்பு கட்சியினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, "இன்று கட்சியின் தொடக்க நாள் ஆகும். எனவே அதை யொட்டி விருந்து கொடுப்பதாகவே நினைக்கிறோம்" என்றார்கள்.
கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கட்சியின் ஸ்தாபன நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கட்சி கொடியேற்றினார். கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
- கூட்டணி இல்லை என கூறி வரும் சீமானை கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வருகிறார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிர்மலா சீதாராமன் - சீமான் சந்திப்பு நடந்துள்ளது. தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
கூட்டணி இல்லை என கூறி வரும் சீமானை கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
- கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த மாதம் சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்டோர் அமித்ஷாவை சந்தித்து சென்ற நிலையில் செங்கோட்டையனும் தனியாக சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். சென்னை சோழா ஓட்டலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறப்பட்ட சூழலில் சென்னையில் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் மீண்டும் சந்தித்துள்ளது அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான்.
2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.
பின்னர் அவர் உரையாற்றியதாவது:-
பாராளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடக்கும் தேர்தல் முறையே ஒரே நாடு ஒரே தேர்தல்.
ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான்.
அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்காமல் இருப்பது நல்லது.
2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.
- அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா..." என்று தமிழில் கூறினார்.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
வக்பு மசோதா நிறைவேற்றம் உள்ளிட்டவற்றால் பாராளுமன்றம் கடந்த நாட்களில் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மதிமுக எம்.பி வைகோவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
வக்பு மசோதா மீதான விவாதத்தின்போது உத்தரப்பிரதேச பாஜக எம்பி சுதான்ஷூ திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி இருக்கையில் இருதவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
அப்போது ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார். அவருக்கு ஆதரவாக தமிழக எம்பிக்களும் எழுந்து குரல் எழுப்பினர்.
அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா... என்று தமிழில் கூறிவிட்டு, சபாநாயகரை நோக்கி வைகோ குறித்து முறைப்பாடு வைக்கத் தொடங்கினார்.
அவர் கூறியதாவது, வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர், ஆனால் இப்போது அவர் பயன்படுத்திய மொழியை பொறுத்துக்கொள்ள முடியாது. நீ தமிழ்நாட்டுல கால் வை பாக்குறேன், நீ தமிழ்நாட்டுல நுழஞ்சுடுவியா நான் பாக்குறேன் என்ற அவர் பேசுகிறார். இது ரொம்ப தப்பு என சபாநாயகரிடம் முறையிட்டார்.
மேலும் வைகோ பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அதன்படி வைகோவின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.
டெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த புதன்கிழமை அன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பானது சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கூற மறுத்துவிட்டார்.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
- நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த குணால் கம்ராவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது மத்திய அமைச்சர் குறித்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்கு காவல் நிலையத்தில் விசாராணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறையினர் குணால் கம்ராவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், நேற்று (புதன் கிழமை) குணால் கம்ரா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
அந்த வீடியோவில் 1987ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஹவா ஹவாய்' என்ற பாடலில் பாப்கார்ன் எமோஜிக்கள் இடம்பெற்று இருந்தன. இவை திரையரங்குகளில் வாடிக்கையாக விற்பனை செய்யப்படும் பாப் கார்ன் மீது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த வீடியோவில் சாலைகளில் குழிகள் இருப்பதும், மெட்ரோ பணிகளுக்காக சாலையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மேம்பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்களை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சரிவாலி தீதி மற்றும் நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த சர்ச்சைக்கு காவல் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்த குணால் கம்ரா காவல் நிலையத்தில் ஆஜராக ஒருவார காலம் அவகாசம் கோரியிருந்தார். காவல் துறையினர் குணால் கம்ரா கோரிக்கையை நிராகரித்ததுடன் காவல் நிலையத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் வழங்கியுள்ளனர்.
- அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது.
- மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.
கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கும் சூழலில் குணால் கம்ரா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக குணால் கம்ரா 1 வாரம் அவகாசம் கேட்டிருந்தார்.
காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது கோரிக்கையை மும்பை போலீஸ் நிராகரித்துள்ளது. உடனே அவர் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே சேனா ஆதரவாளர்கள் தனது ஸ்டூடியோவை அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்து அவர்களை கிண்டல் செய்து மேலும் ஒரு நகைச்சுவை பாடலை வெளியிட்டார்.
இந்நிலையில் மத்திய மாநில பாஜக அரசின் சர்வாதிகார செயல்பாடுகள் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம்மானை கிண்டலடித்து மேலும் ஒரு நகைச்சுவை பாடல் வீடியோவை குணால் கம்ரா வெளியிட்டுள்ளார்.
அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது. "உங்கள் வரிப்பணம் வீணாக போகிறது" என்பது இந்த பாடலின் தலைப்பு. "அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், உடைந்துவிழும் பாலங்கள், இது சர்வாதிகாரம்" என்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.
மேலும் நிர்மலா சீதாராமன் குறித்த வரிகளில், "அவர் மக்களின் சம்பாத்தியத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறார், சம்பளத்தைத் திருட வந்திருக்கிறார், நடுத்தர வர்க்கத்தை அடக்கி ஒடுக்க வந்திருக்கிறார், மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
பாஜக அரசு பெருநிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரிச்சுமையையும் வழங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
மேலும் கடந்த வருடம் பாப்கார்னுக்கு மூன்று விதமான வரியை விதித்து அதற்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் கேலிக்கு உள்ளானது. இவற்றை முன்வைத்து குணால் கம்ரா தனது பாடலில் அவரை விமர்சித்துள்ளார்.