என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் நடால்"

    • நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது
    • தொடர்ந்து டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பதாக நடால் பேட்டி

    பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர் 22 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உள்ளார். இதற்கிடையே யுனைடெட் கோப்பை கலப்பு அணி போட்டியில் ரபேல் நடால், இங்கிலாந்தின் கேமரூன் நோரியிடம் தோல்வி அடைந்தார். இதனால் நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது. ஆனால் அதை நடால் மறுத்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, 'நான் என் போட்டியில் தோற்றேன். ஒவ்வொரு முறையும் நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வரும்போது நான் ஓய்வு பெறவேண்டும் என்று தோன்றுகிறது. இதனால் என் ஓய்வு பற்றி நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள். ஆனால் ஓய்வு பெறுவது பற்றி இன்னும் என் மனதில் தோன்றவில்லை. அந்த நாள் வரும்போது உங்களிடம் தெரிவிப்பேன். எனவே அதைப்பற்றி கேட்கவேண்டாம். ஏனென்றால் இங்கு நான் டென்னிஸ் விளையாடி கொண்டே இருக்கிறேன்' என்றார்.

    • முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் ஜேக் ட்ரேப்பரை நடால் வீழ்த்தினார்.
    • ஆடவர் ஒற்றையர் போட்டியில் இதுவரை 20 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளார்

    ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரிட்டன் வீரர் ஜேக் ட்ரேப்பரை எதிர்கொண்டார். மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இப்போட்டியில் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆடவர் ஒற்றையர் போட்டியில் இதுவரை 20 சாம்பியன் பட்டங்கள் வென்று நோவக் ஜோகோவிச், ரோஜர் பெடரர் ஆகியோரின் சாதனையுடன் இணைந்துள்ள நடால், ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்லும் முனைப்புடன் வெற்றிக் கணக்கை தொடங்கி உள்ளார்.

    • பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் என புகார் கூறியுள்ளார்.
    • பொறுமை இழந்த நடால் எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என கூறுகிறார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தின்போது, நடப்பு சாம்பியனான ரபேல் நடால், தனது விருப்பத்திற்குரிய பேட் காணாமல் போய் விட்டது என்றும் பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் எனவும் புகாராக கூறியுள்ளார்.

    இதனால், போட்டி தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அது சர்வதேச பரபரப்பு செய்தியாகவும் மாறியது. போட்டி பாதிக்கப்பட்டது பற்றி ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், பொறுமை இழந்த நடால் தனது டென்னிஸ் பேட்டை தேடி பார்க்கிறார். எனக்கு, எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என நடுவரிடம் கூறுகிறார்.

    தனது பேட் கிடைக்காமல் போகவே, வழியின்றி வேறொரு டென்னிஸ் பேட்டை எடுத்து கொண்டு நடால் விளையாட சென்றார். அதன்பின் போட்டி தொடர்ந்தது. எனினும், போட்டியில் ஜாக் டிரேப்பருக்கு எதிராக கடுமையாக போராடி 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மூன்றரை மணிநேரம் நீடித்த இந்த போட்டியில் பெற்ற வெற்றியானது, நடப்பு ஆண்டில் நடாலுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

    நடால் பயன்படுத்திய பேட்டை, பந்து எடுத்து போடும் சிறுவன் தவறுதலாக எடுத்தது பின்னர் தெரியவந்தது. ரிப்பேர் செய்யவேண்டும் என நினைத்து எடுத்துச் சென்றிருக்கிறான். பின்னர் நடாலிடம் பேட்டை ஒப்படைத்ததும் குழப்பம் தீர்ந்தது.



    • ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அடுத்த வாரம் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது.
    • ரபேல் நடால் இந்தப் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அடுத்த வாரம் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள ரபேல் நடால் இந்தப் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார்.

    ஆனால், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி முதலே காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடால், இந்தப் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    அவர் ஏற்கெனவே இண்டியன் வெல்ஸ், மியாமி, மான்டி கார்லோ டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் காயம் காரணமாக விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால்.
    • நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை என்றார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 28ம் தேதி பாரீசில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) விலகி இருக்கிறார்.

    கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.

    36 வயதான ரபேல் நடால் நேற்று அளித்த பேட்டியில், "விஷயங்கள் எப்படி மாறும் என்பது தெரியாது. ஆனால் அடுத்த ஆண்டு எனது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் தற்போது பயிற்சி பெறுவதற்கு தயாராக இல்லை. நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை' என்று தெரிவித்தார்.

    ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14 முறை வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 4 வீரரான மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் நடால் 7-6 (8-6), 6-3 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்துவருகிறது.
    • இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரேசில் வீரர் தியாகோவுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதினார். இதில் நடால் முதல் செட்டையும், பெட்ரோ 2வது செட்டையும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை நடால் வென்றார்.

    இறுதியில், நடால் 6-1, 6-7 (5-7), 6-3 என்ற செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 5 வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மேட்ரிட்:

    மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நேற்று நடந்தன. இதில் நம்பர் 5 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோவுடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், செக் வீரர் ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் நடால் 5-7, 4-6 என்ற நேர் செட்களில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நாடல், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    14 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    முன்னதாக ரபேல் நடால் தனது 19 ஆண்டுகால பிரெஞ்சு ஓபன் வாழ்க்கையை இந்த சீசனுடன் முடித்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பிரெஞ்சு ஓபனில் அவர் புரிந்த சாதனை மற்றும் நற்பெயரை ஒருபோதும் ஒப்பிட முடியாது. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பிரெஞ்சு ஓபனில் வென்றுள்ளார். களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

    22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்பெயின் வீரர் நடால், 2005 ம் ஆண்டில் ரோலண்ட் கரோசில் தனது முதல் பட்டத்தை வென்றார். இன்னும் ஒரு வாரத்தில் ( வரும் திங்கட்கிழமை) அவர் தனது 38-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என நடால் கூறியுள்ளார்.

    இது குறித்து ரசிகர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-

    முந்தைய போட்டிகளை விட இந்த போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று உணர்ந்தேன். ஆனால் எனக்கு முன்னால் ஒரு கடினமான எதிரி இருந்தார். அவர் நன்றாக விளையாடினார்.

    உங்கள் முன் நான் விளையாடிய கடைசி பிரெஞ்சு ஓபன் இதுவா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான். இன்று என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் இதே மைதானத்தில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். மேலும் எனக்கு நிறைய விளையாடுவது மற்றும் எனது குடும்பத்துடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.

    என்று நடால் கூறினார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் நடால், ரூட் ஜோடி வென்றது.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட், ஸ்பெயினின் ரபேல் நடால் ஜோடி, பிரான்சின் தியோ ஆரிபேஜ், ரஷியாவின் ரோமன் சப்யூலின் ஜோடியுடன் மோதியது.

    இதில் ரூட்-நடால் ஜோடி 6-4, 3-6, 12-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் வென்றார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    இதில் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் அரையிறுதியில் நுழைந்தார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், -அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை நவோன் 7-6 (7-2) என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2-வது செட்டை நடால் 7-5 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை நடால் 7-5 என கைப்பற்றினார்.

    இறுதியில் நடால் 6-7 (2-7), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    ×