என் மலர்
நீங்கள் தேடியது "கவாஸ்கர்"
- சர்பராஸ் கான் இந்திய அணியில் நீட்டிக்கப்பட்டுள்ளார்.
- கே.எல். ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அணியில் இருந்து நீக்கம்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் விளையாடாத சுப்மன் கில் 2-வது போட்டியில் இந்திய அணியில் இடம் பெறுவது உறுதியானது. இதனால் சர்பராஸ் கான் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணியில் குல்தீப் யாதவ், கே.எல். ராகுல், முகமது சிராஜ் ஆகிய மூன்று பேர் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டதை கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "காயம் தொடர்பான கவலையைத் தவிர்த்து மற்றபடி பெரும்பாலான அணிகள் மூன்று மாற்றங்கள் செய்யும் என பார்க்கவில்லை.
வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டது, இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலைப்படுவதை சொல்கிறது. அவருடைய பந்து வீச்சை தவிர்த்து, பின்கள பேட்டிங் வரிசையை வசதியாக்க அவருடைய பேட்டிங் தேவைப்படுகிறது. நியூசிலாந்தின் இடது கை பேட்டிங் வரிசை குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது. ஆனால் நான் குல்தீப் யாதவை தேர்வு செய்திருப்பேன். இடது கை பேட்ஸ்மேன்களை அவரால் கட்டுப்படுத்த முடியும்.
- குல்தீப் யாதவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.
- முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று புனேயில் தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கே.எல். ராகுல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு சுப்மன் கில், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மூன்று மாற்றங்கள், குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டதை சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருந்தார்.
வாஷிங்டன் சுந்தர் தேர்வு இந்திய அணியின் கடைநிலை பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை காட்டுகிறது. குல்தீப் யாதவை நீக்கியிருக்கக் கூடாது. நான் அவரை அணியில் வைத்திருப்பேன் என கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
ஆனால் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசி ஏழு விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் "என்ன ஒரு ஈர்க்கக்கூடிய வகையிலான ஆடும் லெவன் தேர்வு. வாஷிங்டன் சுந்தரால் கொஞ்சம் கூடுதலாக பேட்டிங் செய்யவும் முடியும். பந்து வீசவும் முடியும்" என்றார்.
ரஞ்சி டிராபி போட்டியில் டெல்லி அணிக்கெதிராக வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாடு அணிக்காக சதம் விளாசியிருந்தார். இதனால் உடனடியாக 2-வது போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
- இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.
- உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.
மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது ரிஷப் பண்ட் 28 ரன்னில் அவுட் ஆனார். அந்த சமயத்தில் அவர் தேவையற்ற ஷாட் அடித்து அவுட் ஆனதாக விமர்சனம் எழுந்துள்ளது.
போலண்ட் வீசிய 56வது ஓவரில் 3-வது பந்தை ரிஷப் பண்ட் லாப் ஷாட் அடிக்க முயன்று தடுமாறி கீழே விழுந்தார். அடுத்த பந்திலும் அவர் அதே போலத் தான் ஆடுவார் என போலண்ட் பந்து வீசினார். அது போலவே ரிஷப் பண்ட் கீழே குனிந்து ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார். ஆனால், பேட்டில் டாப் எட்ஜ் ஆன பந்து தேர்டு மேன் திசையில் நின்று இருந்த நாதன் லயனிடம் கேட்ச் ஆனது.

இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும்போது, ரிஷப் பண்ட் அவுட் ஆன விதம் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பிட்ட 2 பீல்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த இடத்தில் ரிஷப் பண்ட் பந்தை அடித்தார். இது முட்டாள்தனமானது. அந்த சமயத்தில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.
இது உங்கள் இயல்பான விளையாட்டு அல்ல. அது ஒரு முட்டாள் ஷாட். இது உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியது.
- கவாஸ்கர் பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்திருந்தார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துகிறது. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அணி கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது கருத்துக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் அணி முன்னாள் பயிற்சியாளருமான ஜேசன் கில்லஸ்பி கண்டனம் தெரிவித்தள்ளார்.
இது தொடர்பாக கில்லஸ்பி கூறுகையில் "நான் கவாஸ்கரின் வார்த்தை ஜாலங்களை ஏற்கவில்லை. சுனில் கவாஸ்கர் இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் எனக் கூறியதை நான் பார்த்தேன். இது முட்டாள் தனமானது. முற்றிலும் முட்டாள்தனமானது" என்றார்.
- டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது.
- ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்பின் காம்பினேஷன், வேகப் பந்துவீச்சு என அனைத்தும் உறுதியாகிவிட்டது.
சூர்யகுமார் யாதவ் - ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரிடையே 4ம் வரிசை பேட்டிங்கிற்கான போட்டி நிலவுகிறது.
மேலும், ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவரும் வேளையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிவருவதால் விக்கெட் கீப்பர் யார் என்பதும் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், தொடக்க வீரரான ஷிகர் தவானுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானை எடுப்பதாக இருந்திருந்தால் இங்கிலாந்து தொடரிலாவது அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை. எனவே டி20 உலக கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் இருக்காது. என்னைப் பொறுத்தமட்டில் ரோகித்தும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது, ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் வெற்றிக்கு மிக அருகாமையில் சென்று பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் தோல்வியை பரிசாக பெற்றது.
இந்த தொடரில் கேப்டன் விராட் கோலியை தவிற மற்றவர்கள் சிறப்பாக விளையாடவில்லை, புஜாரா மற்றும் ரகானே மட்டும் ஒரு சில இன்னிங்ஸ்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் மற்ற வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், கோலியின் கேப்டன்ஷிப் மற்றும் ரவி சாஸ்திரி குறித்தும் சமூக வளைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஷேவாக், முன்னாள் கேப்டன் கங்குலி ஆகியோர் ரவிசாஸ்திரியை நேரிடையாகவே விமர்சனம் செய்தனர்.
இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய்பாங்கர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கங்குலி சாடி இருந்தார்.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ரவிசாஸ்திரி கூறுகையில், ‘ நம் வீரர்கள் முடிந்த அளவிற்கு போராடியும் இங்கிலாந்து அணி ஒருபடி மேல் இருந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 9 போட்டிகள் உள்பட 3 தொடர்களை வென்றுள்ளோம்.
குறிப்பாக சொல்லப்போனால் கடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த இந்திய அணியை விட இப்போது உள்ள அணி தான் சிறந்த அணி, முந்தைய அணிகளில் சிறந்த வீரர்கள் இருந்தும் குறுகிய காலத்தில் இதுபோன்று ரன்களை அடித்தது இல்லை’ என விமர்சனங்களுக்கு பதிலளித்தும் முன்னாள் வீரர்களை வெறுப்பேற்றும் விதமாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
1993-ம் ஆண்டுக்கு பிறகு 2015-ம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக இலங்கையில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றவில்லை, ஆனால் அந்த காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொடரை இந்தியா கைப்பற்றியது.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் 80-களின் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்தில் தொடரை வென்றுள்ளது. கடைசியாக இங்கிலாந்து தொடரை கடந்த 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா கைப்பற்றியது. அதே டிராவிட் தலைமையில் 2005-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா, வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்த தொடர் வெற்றிகளுக்கு ஒரு கேப்டனாக டிராவிடின் பங்களிப்பு குறைவு என்றாலும், வெளிநாடுகளில் தொடரை வெல்லும் வலிமையுடைய வீரர்கள் அப்போதைய அணியில் இருந்தனர். இதை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #RaviShastri #SunilGavaskar #RahulDravid
