search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரியர்"

    • கொரியரில் உடைந்த டி.வி.க்கு விற்பனை நிறுவனம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
    • நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    மண்டபம் மறவர் தெருவை சேர்ந்தவர் வசந்த். இவர் கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந்தேதி கோவை இசூசா எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் இரண்டு எல்.இ.டி. டி.வி.கள் வாங்கியுள்ளார். அவை கொரியரில் வந்த போது ஒரு டி.வி. உடைந்திருந்தது. இது குறித்து விற்பனை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வசந்த் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். அவர்களது வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் குட்வின் சாலமன் ராஜ், நமச்சிவாயம் ஆகியோர் விற்பனை நிறுவனம் உடைந்த டி.வி.க்கான தொகை ரூபாய் 14 ஆயிரத்து 700 மற்றும் 6 சதவீதம் வட்டியுடன் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவு ரூ, 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.

    • காலை 8.30 மணிக்கு கொரியர் நிறுவனத்தை திறந்த போது அங்கியிருந்து புகை வந்தது
    • பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் தனியார் கொரியர் நிறுவனம் உள்ளது.

    இந்த கொரியர் நிறுவனத்தின் மேலாளராக நாகர்கோவில் கலை நகரை சேர்ந்த தனேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலையில் 7 மணிக்கு வழக்கம் போல் கொரியர் நிறுவனத்தை தனேஷ் திறந்து உள்ளார்.

    கொரியர் நிறுவனத்தில் வெளியூரில் இருந்து வந்த ஏராளமான பொருட்கள் இருந்தது. மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கு அனுப்ப பொருட்களும் வாங்கி வைக்கப்பட்டு இருந்தது.

    தனேஷ் சிறிது நேரம் கொரியர் நிறுவனத்தை திறந்து வைத்துவிட்டு மீண்டும் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை 8.30 மணிக்கு கொரியர் நிறுவனத்தை திறந்த போது அங்கியிருந்து புகை வந்தது.

    அங்கிருந்த பொருட்கள் எரிந்து கொண்டிருந்தன, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொரியர் நிறுவனத்தில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் கொரியர் நிறுவனத்தில் இருந்த பொருட்களை அனைத்தும் எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கொரியர் நிறுவனம் முன்பு திரண்டு இருந்தனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர்.

    முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொரியர் நிறுவனத்தில் வேறு ஊர்களுக்கு அனுப்ப வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.


    • போலீசார் தீவிர விசாரணை
    • குமரி மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு வெளியூரிலிருந்து கஞ்சா பார்சல்கள் வந்திருப்பதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோட்டார் போலீசார் சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் கொரியர் நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அதன் உரிமையாளரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கொரியர் நிறுவனத்தை திறந்து சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பணியில் பிஸியாக இருந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத மகள், அஸ்தியை கொரியரில் கேட்டு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக இறுதிச்சடங்கை பார்த்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அருகே உள்ள மனோர் கிராமத்தை சேர்ந்த நீராபாய் படேலின் மனைவி தீரஜ் படேல் உடல்நலக்குறைவால் சமீபத்தில் இறந்துள்ளார். தாய் இறந்த செய்தியை குஜராத்தில் வசிக்கும் மகளிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

    அதற்கு தான் வேலையில் ரொம்ப பிஸியாக இருப்பதால் ஊருக்கு வர முடியாது என மகள் பதில் கூறியுள்ளார். அதோடு வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தாயின் முகத்தை காட்டுமாறும் ஊரில் இருப்பவர்களிடம் கேட்டுள்ளார். அதே போல தாய்க்கு நடந்த இறுதிச் சடங்கை அவர் வாட்ஸ் அப்பிலேயே பார்த்தார்.

    அவரது இந்த நடவடிக்கையால், ஊர் மக்கள் கடும் கோபமடைந்தனர். இதனிடையே, இறுதிச் சடங்கில் தான் பங்கேற்க முடியவில்லை, அஸ்தி கரைப்பதற்காக வர வேண்டும் என்று அவர்கள் அழைத்துள்ளனர். அதற்கு அவர், அஸ்தியை கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று பதில் கூறியுள்ளார்.

    இதனை அடுத்து தாயின் உடலை தகனம் செய்த கிராம மக்களே, அவரது அஸ்தியையும் மகளுக்கு கேட்டதுபோல கொரியரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
    உலக அளவில் பிரபலமான டப்பாவாலாக்கள் சாப்பாடு மட்டுமல்ல கொரியர், பார்சல் ஆகியவையும் வீடு வீடாக டெலிவரி செய்ய அதிரடி திட்டமிட்டுள்ளனர். #Dabbawalas
    மும்பை:

    சுடச்சுட நமது மனைவி அல்லது தாயார் கைகளால் அன்பொழுக சமைக்கப்பட்ட சாப்பாட்டை வீடு தேடி வந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சேர்ப்பதுதான் டப்பாவாலாக்களின் வேலை. இதற்காக மாதாமாதம் ஒரு தொகையை இவர்கள் சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்.

    இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிகளவில் இயங்கி வரும் டப்பாவாலாக்களுக்கு தனியாக சங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.ஏ. பாடங்களில் கூட ‘பொருளை துல்லியமாக கொண்டு போய் சேர்ப்பது மற்றும் நேரம் தவறாமை’ ஆகிய தலைப்புகளில் டப்பாவாலாக்கள் உதாரணமாக கூறப்பட்டுள்ளனர்.

    அந்த நபர், ரெயில், பஸ், ஆட்டோ மற்றும் சைக்கிள் என எந்த வழியிலாவது சென்று மதியத்திற்குள் ‘டிங் டாங்’ என சேர வேண்டிய இடத்தில் சாப்பாடு கேரியர்களை சேர்க்கின்றார்.

    கேரியரை உரியவரிடம் சேர்ப்பதோடு அவர்களின் பணி முடியவில்லை. வாடிக்கையாளர் சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் கேரியரை பெற்றுக்கொண்டு அவர்கள் வீட்டில் ஒப்படைக்கிறார்கள். போக்குவத்து நெரிசல், மழை, வெள்ளம் என எந்த இடர்பாடுகள் வந்தாலும் டப்பாவாலாக்கள் சேவையில் சோர்ந்து போனதே கிடையாது.


    சுமார் 60 கி.மீ சுற்றளவில் இயங்கும் டப்பாவாலாக்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லட்சம் சாப்பாடு கேரியர்களில் கையாளுகின்றனர்.

    “அடேங்கப்பா! 2 லட்சமா, கேரியர் மாறி வேறு ஆட்களிடம் சேர்ந்து விடாதா?” என கேட்கிறீர்களா. அதற்கு வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அடையாளம் என ரகசிய குறியீடுகளை சாப்பாடு கேரியரின் எழுதி வைத்துள்ளனர்.

    தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்து விட்ட இந்நாட்களில் அடையாள அட்டை, செல்போன், எஸ்.எம்.எஸ். என தங்களை அப்டேட் செய்து கொண்ட டப்பாவாலாக்கள் ஆரம்ப காலம் முதல் கொண்ட செயல் முறையை இன்னும் மாற்றவே இல்லை.
    எல்லாவற்றிலும் புகுந்துள்ள புதுமை யோசனைகள் இந்த டப்பாவாலாக்களின் செயல் முறையையிலும் ஒரு புரட்சியை தற்போது கொண்டு வந்துள்ளது.

    சாப்பாடு மட்டுமல்ல பார்சல் மற்றும் கொரியர் டெலிவரி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் சங்கம் மூலமாக நடந்து வருவதாகவும், விரைவில் சேவை தொடங்கப்படும் என டப்பாவாலாக்கள் தெரிவித்துள்ளனர்.
    ×