என் மலர்
நீங்கள் தேடியது "இறப்பு சான்றிதழ்"
- ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
- நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சுமார் 6 மாத விசாரணைக்குப் பிறகு கடந்த ஜனவரி 20-ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் டெத் சர்டிபிகேட் அவரது பெற்றோரிடம் இன்று அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், அவர்களுக்கு அசல் இறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டது. இன்று, நான் இங்கு வந்து அதை அவர்களிடம் ஒப்படைத்தேன். எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என தெரிவித்தனர்.
- அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை பாபுராம் நாடியுள்ளார்.
- அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.
ராஜஸ்தானில் அரசால் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாபுராம் என்பவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க பல முறை அலைந்தும், முடியாததால் குற்றங்களில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிதோரா கிராமத்தில் வசிக்கும் பாபுராம் பில்லுக்கு ராஜஸ்தான் அரசு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் தனது அடையாளத்தையும், சொத்துக்களுக்கான உரிமையையும் பாபுராம் இழந்துள்ளார்.
அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை பாபுராம் நாடியுள்ளார். ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.
இதனால் விரக்தியடைந்த பாபுராம் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதற்கு வித்தியாசமான வழிமுறையை கண்டறிந்தார்.
அதன்படி, சமீபத்தில் பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் பள்ளி வளாகத்தில் புகுந்து பலரையும் பாபுராம் தாக்கியுள்ளார். பின்னர் போலீசார் விரைந்து வந்து பாபுராமை கைது செய்தனர். போலீசாரிடம் பிடிபட்ட போது, "போலீசார் என்னை கைது செய்தால்தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க முடியும்" என்று பாபுராம் கூறியுள்ளார்
பின்னர் போலீசாரின் விசாரணையில், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க செல்போன் டவரில் ஏறி மிரட்டிய பாபுராம் கடைசியாக பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.
பாபுராம் கூறிய விவரங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை
- குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது.
கர்நாடக பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் தனது இறப்பு சான்றிதழுடன் துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெலகாவி துணை ஆணையர் முகமது ரோஷனின் அலுவலகத்திற்கு தனது இறப்புச் சான்றிதழுடன் சென்ற கணபதி ககட்கர் என்ற அந்த நபர் சென்றுள்ளார்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் செய்த சிறு பிழையால் கணபதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கணபதி அவர் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பல்வேறு அரசாங்க சலுகைகளை இழந்தார்.
கணபதியும் அவரது சகோதரர்களும் 1976 ஆம் ஆண்டு காலமான தங்கள் தாத்தா விட்டுச் சென்ற நிலத்திற்கு வாரிசுச் சான்றிதழுக்காக விண்ணப்பித்தபோது இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது.

அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை, மேலும் அவரது மூன்று மகன்களும் இறுதியில் கணபதி உட்பட அவரது எட்டு பேரன்களுக்கு சொத்தை விட்டுச் சென்றனர்.
நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றும் முயற்சியில், பேரன்கள் தங்கள் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் காணாமல் போனதால் தாமதத்தை எதிர்கொண்டனர். அதன்பின் நீதிமன்றத்தை அணுகினர். புதிய இறப்பு சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், ஹிண்டல்காவில் உள்ள வருவாய் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டர் ஒருவர் மறைந்த தாத்தாவின் ஆதார் எண்ணுக்குப் பதிலாக கணபதியின் ஆதார் எண்ணை தவறுதலாக பதிவுசெய்துள்ளார்.
இதனால், குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றும் பலமுறை முயற்சி செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடத்த 2023 இல் கணபதி அந்த எழுத்தர் செய்த பிழையை கண்டுபிடித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திங்களன்று, அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருடன் கணபதி, துணை கமிஷனர் ரோஷனை அணுகினார். அவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
- பொதுமக்கள் எளிதில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
- மாநில அரசு விரைவில் வாட்ஸ்-அப் நிர்வாக சேவைகளை வழங்க உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வாட்ஸ்-அப் மூலம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் விஜயானந்த் கூறுகையில், `முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் படி மாநில அரசு விரைவில் வாட்ஸ்-அப் நிர்வாக சேவைகளை வழங்க உள்ளது.
இதன் ஒரு பகுதியாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் எளிதில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, சுகாதார அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
சென்னை:
சட்டசபையில் இன்று தோப்பு வெங்கடாசலம் (அ.தி.மு.க.), நேரு (தி.மு.க.) பேசும்போது, வீட்டில் மாரடைப்பால் உயிரிழப் போருக்கு இறப்பு சான்றிதழ் உடனடியாக கிடைக் காததால் பல்வேறு பிரச்சினை ஏற்படுகிறது. உடலை எரிப்பதற்கு கூட இடுகாட்டில் சான்றிதழ் கேட்பதால் சிக்கல் ஏற்படுகிறது. எனவே விரைவாக இறப்பு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:- தற்போது பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதுபோல் வீட்டில் இறப்பவர்கள் மாரடைப்பால் இறந்தால் சட்ட பிரச்சினைகள் வரும் என்பதால் தான் தாமதமாகிறது. அதற்கு நல்ல தீர்வு காணும் வகையில் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். #ministervijayabaskar #deathcertificate
முரசொலி பத்திரிகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி கடந்த 2015-ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார்.
4 ஆண்டு ஆட்சியில் ஜெயலலிதா சாதித்தது என்ன? என்ற தலைப்பில் எழுதிய அந்த கட்டுரையில் ஜெயலலிதா குறித்து சில விமர்சனங்களை செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது ஜெயலலிதா சென்னை மாவட்ட கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தபோது வக்கீல் குமரேசன் ஆஜராகி, கருணாநிதியின் இறப்பு சான்றிழை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருணாநிதி மீது நிலுவையில் உள்ள 13 அவதூறு வழக்குகளையும் வருகிற அக்டோபர் 1-ந்தேதி விசாரணைக்கு எடுப்பதாக கூறினார். அன்று அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். #Karunanidhi