என் மலர்
நீங்கள் தேடியது "நக்சல்"
- நக்சல் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதில் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளோம்.
- பிரதமர் மோடி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினர் பல நக்சலைட்டுகளை சுட்டுக்கொலை செய்தனர்.
நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்படுவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நக்சல் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதில் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளோம். நாட்டில் தீவிரவாதத்தால் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 12இல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது. பிரதமர் மோடி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 2026 மார்ச் 31க்குள் நாட்டில் நக்சலிஸம் நிரந்தரமாக ஒழிக்கப்படும்
- ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.
- முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது
சத்தீஸ்கர் பயணப்பட்டுள்ள பிரதமர் மோடி பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹபத்தா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், காங்கிரசின் கொள்கைகளால், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக நக்சலிசம் ஊக்கம் பெற்றது. வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் நக்சலிசம் செழித்தது, ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி என்ன செய்தது? அத்தகைய மாவட்டங்களை பின்தங்கியதாக அறிவித்து அதன் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றது.
மாவோயிஸ்ட் வன்முறையில் பல தாய்மார்கள் தங்கள் அன்புக்குரிய மகன்களை இழந்தனர், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்களை இழந்தனர்.
முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஏழை பழங்குடியினரின் வசதிகளை ஒருபோதும் கவனித்துக் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், பாஜக அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் காரணமாக நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதியின் புதிய சகாப்தம் காணப்படுகிறது. காங்கிரஸின் கொள்கைகளால் நக்சலிசம் அதிகரித்தது. ஆனால் பாஜக அரசு மக்களுக்கு வீடுகளை கட்டுவது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
- மண்டிமர்கா காட்டுப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
- காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 ஜவான்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு ஜவான்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த மாநில காவல் பணிக்குழு மூத்த கான்ஸ்டபில் பரத் லால் சாஹூ மற்றும் கான்ஸ்டபில் சதெர் சிங் தாக்குதலில் உயிரிழந்தனர். தரெம் காவல் எல்லைக்கு உட்பட்ட மண்டிமர்கா காட்டுப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
இந்த தாக்குதலில் காயமுற்ற புருஷோத்தமன் நாக், கோமல் யாதவ், சியாராம் சொரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோபருக்கு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
- ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
ராஞ்சியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், சதாரா மாவட்டத்தின் சிமாரியா பகுதியில் நடைபெற்ற பேரணியில் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளில் பாஜக கூட்டணி 52 இடங்களில் வெற்றி பெறும்.
அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக நக்சலிசத்தை தூண்டிவிடுகின்றனர்.
ஜார்க்கண்டில் இருந்து தலித், பழங்குடியினர், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான ஹேமந்த் சோரன் அரசை அகற்ற வேண்டிய நேரம் இது.
கடந்த 5 ஆண்டுகளில் ஜார்க்கண்டில் இருந்து அச்சுறுத்தலை நாங்கள் அகற்றிவிட்டோம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மார்ச் 2026க்குள் இந்தியாவில் இருந்து நக்சலிசத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என ஆவேசமாக தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம், ரஜ்னாண்ட்கோன் பகுதியை சேர்ந்தவர் பகத் சிங், இவர், நக்சல் அமைப்பின் மூத்த தலைவர்களுல் ஒருவராக இருந்து வருகிறார்.
இவருக்கு நக்சலைட் அமைப்பு தொடர்பான பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதால், இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். மேலும், இவரது தலைக்கு ரூ.47 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில போலீசார் கூட்டாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், சரணடையும் நக்சல்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் போலீசாரிடம் நேற்று பகத் சிங் சரணடைந்தார்.
பழங்குடியின மக்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய நக்சல் இயக்கத்தில் சேர்ந்த பகத் சிங் மீது நக்சல் இயக்க முக்கிய தலைவர்கள் நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்துடன் இருந்ததாலும், நக்சல் அமைப்பில் உள்ள பழங்குடி இனத்தவர்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டதாலும் அவர் அமைப்பில் இருந்து விலகி சரணடைந்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம், கோண்டகோன் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில், நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த பிசாந்தி நீதம் என்ற பெண் அம்மாவட்டத்தின் கூடுதல் எஸ்.பி மகேஷ்வர் நாக் முன்னிலையில் இன்று சரணடைந்தார்.
நக்சல் இயக்கத்தில் கொரில்லா படைப்பிரிவில் இருந்த பிசாந்தி நீதமின் தலைக்கு போலீசார் 3 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தனர். ஆனால், பிசாந்தி போலீசாரிடம் சரணடைந்ததால் அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பரிசு தொகையான ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை போலீசார் அவரிடம் அளித்தனர்.
சரண்டர் ஆகும் நபர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் மாநில அரசின் திட்டத்தால் கவரப்பட்டு, போலீசாரிடம் சரணடைந்ததாக பிசாந்தி தெரிவித்தார். அவருக்கு திருந்தி வாழ தேவையான அரசின் மறுவாழ்வு நலத்திட்டங்கள் அனைத்தும் ஏற்படுத்தி தரப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #Naxal