என் மலர்
நீங்கள் தேடியது "தூத்துக்குடி"
- பயிற்சி பாசறை கூட்டத்திற்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.
- அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட மாடல் பயிற்சி பாசறை புதுக்கோட்டையில் நடைபெற்றது.
மாநில சுயாட்சி
தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், அனஸ், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மனிதனை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று கொண்டு வந்தது தான் திராவிட இயக்க வரலாறு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி.
இந்தி திணிப்பை அமல் படுத்துவதற்கு அமித்ஷா, ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளார். மற்ற மொழிகளை அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காது.
மாநில சுயாட்சி திராவிட வரலாறு என்ன என்பதை இளைஞர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதை புரிந்து கொண்டு 234 தொகுதிகளிலும் இது போன்ற கருத்துகளை மனதில் ஏற்றிக் கொண்டு நமக்கு எதிராக கருத்துகள் சொல்லுபவர்கள் மத்தியில் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் திராவிட இயக்க வரலாறை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் செல்வகுமார், பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, அணி அமைப்பாளர்கள் அருண்குமார், பேரின்பராஜ் லாசரஸ், ஆனந்த், வீரபாகு, துணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கோபால், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர்கள் பால்ராஜ், ஸ்டாலின், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மற்றும் புதுக்கோட்டை யூனியன் கவுன்சிலர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஜேம்ஸ்ராஜ் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
- இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்ராஜ் (வயது 55). இவர் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று இரவு வழக்கம்போல் தூங்க சென்றார். இன்று காலை உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் ராஜ் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு விருது ஆறுமுகநேரி சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
தேசிய நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு ஆறுமுகநேரி அருகேயுள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு நுகர்வோர் பேரவை சிறப்பு விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நுகர்வோர் பேரவை ஆய்வு குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சுற்றுசூழல், தொழிலாளர்கள் இணக்கம், பொதுமக்கள் நல்லுறவு ஆகியவற்றிற்கான சிறப்பு விருது ஆறுமுகநேரி சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் இந்த விருதை வழங்க அதனை டி.சி.டபிள்யூ. மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது நுகர்வோர் பேரவையின் மாவட்ட சட்ட ஆலோசகர் திலீப்குமார், ஸ்பிக்நகர் உறுப்பினர்கள் சந்திரசேகரன், கீதா சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
- விழாவில் சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
மறுநாள் இரவு 7 மணிக்கு நாடு நலம் பெற வேண்டியும், நல்ல மழை பொழிந்து வறுமை நீங்கி செழுமை வேண்டி பாடல்கள் பாடியும், 108 திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் தெருபவனி நடந்தது.
நேற்று காலை 108 பால்குட ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக மேளதாளத்துடன் பவனி வந்து கோவிலை அடைந்ததும், பின்பு சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது. வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலிபூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜையுடன் சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடந்தது.
இன்று நண்பகல் 1 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்டபூஞ் சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் கொடுத்தல், நாளை 10-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு கலக்கல் கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.
- செல்வலிங்கம் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- பலத்த காயம் அடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் செல்வலிங்கம் ( வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் வழக்கம்போல் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தார்.
லாரி மோதியது
மறவன்மடம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
- பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு யாகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகர் சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரரான சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் அன்னாபிஷேகத்துடன் பழங்களால் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அன்னாபிஷேக வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், உலக மக்கள் யாவரும் நோய் தாக்கம் எதுவுமின்றி நலமுடன் மனநிம்மதியுடன் வாழ்ந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். அன்னாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னாபிஷேக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், சித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- காளிமுத்து பால்பாண்டி நகர் 4 -வது தெருவில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு சாலை ஓரம் அமர்ந்திருந்தார்.
- மொபட்டை கார்த்திக் என்பவர் திருடிச்சென்றது தெரியவந்தது.
தூத்துக்குடி:
புதியம்புத்தூர் புதுச்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 62). விவசாயி. இவர் தூத்துக்குடி பால்பாண்டி நகர் 4 -வது தெருவில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு சாலை ஓரம் அமர்ந்திருந்தார். பின்னர் பார்த்தபோது மொபட்டை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மொபட்டை தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4 -வது தெருவை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சண்முகையா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
- மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.
ஓட்டப்பிடாரம்:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்துதுறை அதிகாரி களுடனான ஆலோசனை கூட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-
டெங்கு, மலேரியா
மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். குளங்கள் உள்ளிட்ட இடங்களில் உடைப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி போதுமான உரங்களை வினியோகிக்கப்படுகிறதா? என வேளாண்மை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாசில்தார்கள் நிஷாந்தினி, செல்வகுமார், ராதாகிருஷ்ணன், யூனியன் ஆணையாளர் பாண்டியராஜன், யூனியன் கூடுதல் ஆணையாளர் வெங்கடாசலம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் ஆணையாளர் சுரேஷ், வேளாண்மை துறை உதவி இயக்குனர்கள் சிவகாமி, சந்திரகலா, தோட்டக்கலை அலுவலர்கள் ஆசிப், ஜெயந்தன், விஜய், மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், சித்தி விநாயகமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.
- முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.இதில் தோல் கழலை நோய் விழிப்புணர்வு முகாமிற்கு நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார்.நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் ஜோசப்ராஜ், கால்நடை உதவி மருத்துவர் வேல்மாணிக்க வள்ளி, கால்நடை ஆய்வாளர்கள் சாந்தி சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் கோமதி லெட் சுமி, பேச்சியம்மை, டி.வி.எஸ். தொண்டு நிறுவனத்தில் இருந்து செல்வி, வார்டு உறுப்பினர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கால்நடை சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டு சத்துமாவுகள் மாத்திரைகள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிப்பவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் நட்டாத்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கால்நடை வளர்க்கும் மக்கள் கால்நடையுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை செபத்தையாபுரம் கால்நடை மருத்துவமனை ஏற்பாடு செய்து இருந்தது.
- சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
- மாணவர்களுக்கு இடையே விளம்பரம் மற்றும் பத்திரிகை தயாரிக்கும் போட்டிகள் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. முள்ளக்காடு சாண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எனது வாக்கு எனது உரிமை,ஒரு வாக்கின் பலம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு இடையே விளம்பரம் மற்றும் பத்திரிகை தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.
கல்லூரியின் நிர்வாக குழு தலைவர்கள் ஸ்டீபன்,வினோத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் நிர்வாக அதிகாரி வீரராஜன், கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- நேற்று 5 -வது நாள் திருவிழாவை முன்னிட்டு இரட்டை திருப்பதி கோவிலில் கருடசேவை நடந்தது.
- மாலையில் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தென்திருப்பேரை:
நவதிருப்பதி தலங்களில் 4-வது தலமான தொலைவில்லிமங்கலத்தின் உள்ள இரட்டை திருப்பதி கோவிலில் பிரமோற்சவ திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 5 -வது நாள் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. காலை 8 மணிக்கு விஸ்வரூபம். யாகசாலை ஹோமம் முடிந்து 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்தம் கூறப்பட்டு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு உற்சவர் செந்தாமரைக் கண்ணன். உற்சவர் தேவர் பிரான் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து 16-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான அலங்காரம் ஏற்பாடுகள் அர்ச்சகர்கள் சுந்தர ராஜன், ரகு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ராமானுஜ சுவாமிகள், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி. உபயதார் திருமலை, சீனிவாச சேவைகள் அறக்கட்டளை முதுநிலை செயல் அலுவலர் கசங்காத்த பெருமாள், கள இயக்குனர் விஜயகுமார், பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கொலை வழக்கில் சுடலை என்ற சுடலை மகாலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
- 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
சாத்தான்குளம் பள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த ரேவந்த்குமார் (வயது27) என்பவர் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுடலை என்ற சுடலை மகாலிங்கம் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.
தாளமுத்துநகர் பூபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த அழகுமுத்து, முருகன் மற்றும் தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சாலையப்பன் (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.
தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ராதாபுரம் பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்ற செல்வம் (34) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்த இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், நாரைக்கிணறு இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தனர்.
அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு எஸ்.பி. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 233 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.