search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கின்னஸ்"

    • 1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.
    • 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார்.

    உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவர் ஆவார்.

     

    மரியா பிரான்யாஸ் கடந்த 1907 ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அதன்பின் அவரது குடும்பம் சொந்த நாடான ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது.

    1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரான்யாஸ் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 20] காலமானார். மரியா அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியான முறையில் வலியில்லாமல் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    உலவகின் மிக வயதான பெண்மணியாக மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா [Tomiko Itooka] உலகின் மிக வயதான பெண்மையாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இதூக்கா ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அசியா [Ashiya] நகரின் வசித்து வருகிறார்.   

     

    • டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
    • உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார்.

    அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இதற்கு முன்பு 16.5 வினாடிகளில் 1 லிட்டர் (4.2 கப்) லெமன் ஜூஸை 16.5 வினாடிகளில் வேகமாகக் குடித்தவர் என்ற பட்டத்தை டேவிட் தன்வசம் வைத்திருந்தார்.

    ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தொடர் சாதனையாளர் ஆண்ட்ரே ஆர்டோல்ஃப் 16 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜுஸை குடித்து டேவிட்டின் பட்டதைத் தட்டிச் சென்றார். அதை முறியடிக்கும் முயற்சியில் இறங்கிய டேவிட் தற்போது இந்த சாதனையைப் படைத்துள்ளார். 13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸ் அருந்திய அனுபவம் குறித்து டேவிட் கூறுகையில், இந்த அனுபவம் இனிமையானதாக இல்லை என்றும் இதனால் கடுமையான வயிற்றுவலிக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

    எப்போதும் புதுமையான விஷயங்களை முயற்சி டேவிட் பார்க்கும் இதுவரை 250க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் தற்போது அவர் நிகழ்த்திக்காட்டியுள்ள சாதனையையும் சேர்ந்து 165 பட்டங்களை டேவிட் ரஷ் தன்வசம் வைத்துள்ளார். உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார். 

    • பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி மாணவிகள் கின்னஸ் சாதனை படைத்தனர்
    • மாவட்ட போலீஸ் எஸ்.பி.ஷ்யாம்ளாதேவி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டினை அமைக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். கல்லீரல் புற்று நோய்க்கான எமரால்டு பச்சை நிறமும் நுரையீரல் புற்றுநோய்க்கு வெள்ளை நிறமும் மார்பகப் புற்றுநோய்க்கு இளஞ்சிவப்பு நிறமும் எலும்பு புற்றுநோய்க்கு மஞ்சள் நிறமும் என பல்வேறு வகையான புற்றுநோய்களை குறிக்கும் வகையில் 12 வகையான நிறங்களில் டி-சர்ட்களை மாணவிகள் அணிந்துகொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு வாசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பேரணியைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டின் மூலம் புதிய கின்னஸ் சாதனைப் படைத்தனர். டாக்டர்.ஜெட்லியின் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிக்கான பதக்கங்கள் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டியது. இந்நிறுவனம் இந்நிகழ்வினை உலக சாதனை புத்தகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இந்த கேடயம் மற்றும் விருது, சான்றிதழ் ஆகியவற்றை எஸ்பி ஷ்யாம்ளாதேவி வழங்கி பாராட்டினார். விழிப்புணர்வு பேரணியில்தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.


    பன்னா புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 100 வயதாகும் பெண் யானைக்கு கின்னஸ் அங்கீகாரம் பெறும் முயற்சியில் சரணாலய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
    போபால் :

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் கிட்டத்தட்ட 100 வயதாகும் வட்சலா எனும் பெயரிடப்பட்ட பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பொதுவாக யானைகளின் சராசரி ஆயுட்காலம் 85 முதல் 90 ஆண்டுகள் ஆகும், ஆனால் வட்சலா 100 வயதுடன் வாழ்ந்து வருவதால் பூமியில் வாழ்ந்து  வரும் யானைகளிலேயே மிகவும் வயதான யானை என வட்சலாவுக்கு கின்னஸ் அங்கீகாரம் வழங்க வேண்டும் என சரணாலய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆனால், யானையின் உண்மையான வயதை கண்டறிய உரிய ஆவணங்கள் தேவை என்பதால், வட்சலா பிறந்த இடமான கேரளவில் உள்ள நீலாம்பூர் வன சரகத்தில் அதற்குறிய ஆவணங்களை கோரியுள்ளனர்.

    நீலாம்பூர் வன சரகத்தில் இருந்து ஹோசாங்காபாத் சராணாலயத்திற்கு கடந்த 1972-ம் ஆண்டு மாற்றப்பட்ட வட்சலா, பன்னா புலிகள் சரணாலயத்திற்கு கடந்த 1992-ம் ஆண்டு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் , வட்சலாவை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் எஸ்.கே.குப்தா கூறுகையில், கடந்த 2003 மற்றும்  2008 ஆண்டுகளில் வட்சலா இருவேறு யானைகளால் தாக்கப்பட்டதால்,  அதன் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டது, இருப்பினும் தகுந்த சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரது கவனத்தையும் வட்சலா ஈர்த்து வருவதாக அவர் தெரிவித்தார்.
    ×