search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்மிட்டன்"

    • இந்திய வீரர் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி செல்லாது என ஒலிம்பிக்ஸ் கமிட்டி நீக்கியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
    • இது எந்த விதத்தில் நியாயம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி செல்லாது என ஒலிம்பிக்ஸ் கமிட்டி நீக்கியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    பாட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த சனிக்கிழமை நடந்த குரூப் L போட்டியில் கௌதமாலா வீரர் கெவின் கார்டன் [Kevin Cordon] உடன் விளையாடிய லக்ஷ்யா சென் 21-8, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் கெவின் கார்டன் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்தால் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலிருந்து தற்போது விலகியுள்ள நிலையில் அவருடன் நடந்த போட்டியில் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி நீக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச பேட் மிட்டன் கூட்டமைப்பின் [BWF] விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவே லக்ஷ்யா சென் குருப் L போட்டிகளில் பெறும் வெற்றியைப் பொறுத்தே அவரது ராங்கிங் தரவரிசை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. இது எந்த விதத்தில் நியாயம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • பி.வி.சிந்து ஏற்கனவே 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நண்பகல் 12.50 மணிக்கு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா உடன் மோதினார்.

    இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

    ஜூலை 31 ஆம் தேதி பி.வி.சிந்து தனது இரண்டாவது ஆட்டத்தில் எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார்.

    பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநில அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டி நடந்தது.
    • கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை ஸ்டீபன் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    மதுரை

    திண்டுக்கல்லில் மாநில அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டி நடந்தது. இதில் மதுரை ெரயில்வே சிக்னல் ஊழியர் ஸ்டீபன்பிரகாஷ் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு 3 கோப்பைகளை வென்றார். . இதன் மூலம் அவர் இந்தோனேசியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார். கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை ஸ்டீபன் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    வியட்னாமில் நடைபெற்று வரும் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் ரஷ்டவிடோவிடம் தோல்வியை தழுவினார் அஜய் ஜெயராம். #VietnamOpen #AjayJayaram
    ஹனோய்:

    வியட்னாமில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், இந்தோனேஷியாவின் ஷேசர் ஹிரன் ரஷ்டவிடோவுடன் மோதினார்.

    நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் இக்ராஷியை வீழ்த்திய ஜெயராம், இன்றைய போட்டியில் அதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார்.

    இதனால், 14-21, 10-21 என்ற கணக்கில் ஜெயராமை எளிதில் வீழ்த்தி ரஷ்டவிடோ தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய ஜெயராம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதே ரஷ்டவிடோவை கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தாய்லாந்து ஓப்பன் பேட்மிட்டன் தொடரில் 21-11, 19-21, 21-9 என்ற கணக்கில் அஜய் ஜெயராம் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #VietnamOpen #AjayJayaram
    வியட்னாமில் நடைபெற்று வரும் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் அஜய் ஜெயராமன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். #VietnamOpen #AjayJayaram
    ஹனோய்:

    வியட்னாமில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரை இறுதி போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், உலக பேட்மிட்டன் தரவரிசையில் 7-ம் இடத்தில் உள்ள ஜப்பானின் யூ இக்ராஷியுடன் இன்று மோதினார். 

    விருவிருப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெயராமன் மற்றும் இக்ராஷி இடையே கடும் போட்டி நடந்து வந்தது. இதில், 21-14,  21-19 என்ற கணக்கில் இக்ராஷியை வீழ்த்தி அஜய் ஜெயராமன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    சமீப காலமாக ஜெயராமன் தசைபிடிப்பு காரணமாக ஓய்வு பெற்றிருந்த நிலையில் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் உலக பேட்மிட்டன் தரவரிசையில் 13-ம் இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #VietnamOpen #AjayJayaram
    ×