என் மலர்
நீங்கள் தேடியது "தலைவர்"
- கன்னியாகுமரியில் நடந்த மாநில மாநாட்டில் முடிவு
- 141 பேர் கொண்ட மாநில குழுவும் தேர்வு செய்யப்பட்டது
கன்னியாகுமரி:
சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில தலைவராக சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று பிரதிநிதிகள் விவாதம் நடந்தது. பின்னர் நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் சவுந்தரராஜன் மீண்டும் தலைவராகவும், சுகுமாறன் பொது செயலாளராகவும், மாலதி சிட்டிபாபு பொருளாளராகவும், உதவி பொது செயலாளர்களாக குமார், திருச்செல்வன், கண்ணன், ஆறுமுக நயினார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக சிங்காரவேலு, விஜயன், சந்தரன், கணேசன், உதயகுமார், கருப்பையன், கிருஷ்ணமூர்த்தி, பொன்முடி, தெய்வராஜ், சிங்காரன், ஜானகிராமன், மகாலட்சுமி, மகேந்திரன், டெய்சி, செண்பகம், ரங்கராஜன், ஐடா ஹெலன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில செயலாளர்களாக முத்துகுமார், ரசல், தங்க மோகனன், திருவேட்டை, ஜெயபால், ராஜேந்திரன், கோபிகுமார், ரங்கராஜ், பாலகிருஷ்ணன், நாகராசன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமி, குமார், சிவாஜி, ஸ்ரீதர், தேவமணி உட்பட 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
நிர்வாகிகளை அறிமுகம் செய்து சி.ஐ.டி.யு. அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.
- காண்டிராக்டர் மீது வழக்கு
- போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி.
இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சில சாலை பணி களை காப்புக்காடு பகுதி கோணத்து விளையை சேர்ந்த பிரிங்கோ ஸ்டான்லி (வயது 35) என்பவர் ஒப்பந்தம் எடுத்து உள்ளார்.
இதில் குறிப்பிட்ட சாலை பணிகளை 2 மாதத்தில் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் சம்மந்தப்பட்ட சாலை பணிகளை முடிக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து சாலை பணிகளை விரைந்து முடிக்காதது குறித்து தலைவர் ராஜேஸ்வரி, ஒப்பந்ததாரரிடம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்ததாரர் ஸ்டான்லி, நேற்று தலை வரின் அறைக்குள் அத்து மீறி நுழைந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் சுனில்குமார், புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை நியமனம்.
- திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவராக, க.கிரீஷ் சரவணன் நியமனம் செய்யப்படுகிறார்.
திருப்பூர்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை நியமனம் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.அதன்படி திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக கிரி சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவராக, க.கிரீஷ் சரவணன் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு பல்லடம், காங்கேயம், தாராபுரம்ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இவருக்கு நமது கட்சியில்பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறுஅந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்
- சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
கன்னியாகுமரி:
தமிழக பா.ஜ.க. தலை வர் அண்ணாமலை வருகிற 12-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதையொட்டி கன்னி யாகுமரிக்கு வரும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோ சிப்பதற்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வ ரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் சுயம்பு லிங்கம், தெற்கு வட்டாரத் தலைவர் சுயம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
கன்னியாகுமரிக்கு வருகிற 12-ந்தேதி வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது.
- புதிய நிர்வாகிகளுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
திருப்பூர் :
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது. தற்போது, தொழில் துறையினர் 84 பேர், உறுப்பினராக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில், சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கிளைக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான புதிய தலைவராக பி.கே.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சங்கீதா; துணை தலைவராக அகில் அப்பேரல் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். புதிய நிர்வாகி களுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
திருப்பூரில் சி.ஐ.ஐ., கிளை துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக தற்போது, ஒரு பெண் தொழில்முனைவோர், கூட்டமைப்பின் தலைவராக நியமிக்க ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
- நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.
அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது.
- விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
அவினாசி :
அவினாசி அருகேயுள்ள கருவலூர் ஊராட்சி அனந்தகிரி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறுஅந்த பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் ஊராட்சி தலைவர்முரு கனிடம் புகார்அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முருகன் முறையான பதில் சொல்லாத காரணத்தால் தங்கமணி மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். சம்பவத்தன்று விசாரணை நடத்தவந்தபெண் அதிகாரி யைபணி செய்யவிடாமல் தடுத்தும் புகார்அளித்த தங்கமணியை தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மீது பெண் அதிகாரி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார். ம.ம.க. மாவட்ட செயலாளர் ஜிப்ரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக த.மு.மு.க. மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா பங்கேற்று பேசினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்த்தன், முத்துப்பட்டினம் பங்குத்தந்தை அற்புத அரசு, வடக்கு பள்ளி தலைவர் சாகுல்அமீது,தெற்கு பள்ளி தலைவர் அப்துல் சலாம், யூனியன் தலைவர்-மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ராதிகா பிரபு, மாநில விவசாய அணி செயலாளர் நல்ல சேதுபதி, ஒன்றிய பொறுப்பாளர் காந்தி, கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன், ஒன்றிய சேர்மன் சேகர்,ஒன்றிய பிரதிநிதி சந்திரசேகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்-கவுன்சிலர் புரோஸ் கான், 3-வது வார்டு கவுன்சிலர் பாண்டி, ராம்கோ மேலாளர் மரியக்கண்ணு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நாசிர் உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாவித் அசாம், மாவட்டத் துணைத் தலைவர் அகமது இப்ராகிம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் உபயத்துல்லா, நிசார், சாகுல் ஹமீது மலேசிய மண்டல செயலர் இர்ஷாத் , ஒன்றிய தலைவர் உமர் அலி, ம.ம.க. ஒன்றிய செயலாளர் முகமது இக்சானுல்லா, த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ரைசுல் இஸ்லாம், திருவாடனை ஒன்றிய ம.ம.க. செயலர் காமராஜ், தொண்டி பேரூர் காதர், ம.ம.க. செயலர் பரக்கத், பொருளாளர் மைதீன் முன்னிலை வகித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க. கிளை தலைவர் ஜம்ரி, ம.ம.க. செயலாளர் இப்ராகிம், த.மு.மு.க. செயலாளர் மஹாதீர் ரகுமான், ம.ம.க. செயலாளர் சுலைமான், துணைச் செயலாளர் மஹாதீர், சபீக் ஆகியோர் செய்திருந்தனர்.
- மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- இதில் மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகர முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது. நகர தலைவர் சேட் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுகனி, பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணை செயலாளர் சல்மான் ரபீக் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இஸ்லாமிய பிரசார பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் தாஹிர் சைபுதீன், துரைப்பாண்டியன், ஆசிரியர் முருகன், காங்கிரஸ் பூவலிங்கம், இமாம் அப்துல் மஜீத், ஓம் சக்தி வழிபாட்டு மன்ற குழு தலைவர் பழனிச்சாமி மற்றும் முஸ்தபாபுரம் ஜமாத்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜமீல் அகமது நன்றி கூறினார்.
- மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் கோரிக்கை
- பிரதமர் தமது உரையில் 450 வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
கன்னியாகுமரி :
மேல சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் பிரதமர் மோடிக்கும், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் சென்னை செல்வதற்கு பேருந்துகளையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் பிரதமர் தமது உரையில் 450 வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தார். தென் மாவட்ட மக்கள் குறிப்பாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்வதற்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களி லேயே 14 மணி நேரம் ஆகிறது. இதனால் அவர்களுடைய அதிகமான நேரத்தை பயணத்திற்கு செலவிட வேண்டி உள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத் தில் அவர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வருவதும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு செல்வதும் இயலாத காரி யமாக இருந்து வருகிறது.
நாட்டில் பல இடங்களில் தற்போது மத்திய அரசு வந்தே பாரத் ரெயில்களை இயக்கி பொதுமக்களின் பயண நேரத்தை மிகவும் குறைத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் நெல்லையில் இருந்து இன்னும் கன்னியாகுமரிக்கு இரட்டை ரெயில் பாதை பணிகளும் முடிவடையாத சூழ்நிலையில் உள்ளது. எனவே தென் மாவட்ட மக்கள் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நலன் கருதி சென்னையி லிருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே மனுவை அவர், மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் அனுப்பி உள்ளார்.
- மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- உடுமலை வட்டாட்சியா் தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது.
உடுமலை :
திருப்பூா் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிா்வாகத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பாக ஊராட்சி மன்ற தலைவா் டி.சௌந்திரராஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக அவா் அளித்த விளக்கம் ஏற்கத் தகுதியில்லாததால் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து உடுமலை வட்டாட்சியா் கண்ணாமணி தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது. இதில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் ஆகியோரிடம் கருத்துக் கேட்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் போடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சௌந்திரராஜனை தகுதி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா்.
- தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
- தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது நான் மரணத்திற்கு பயப்படவில்லை என்றார்.
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் சிராஜுல் ஹக். இவர் பலுசிஸ்தானின் சோப் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருநபர், தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். ஆனால் காருக்குள் இருந்த சிராஜுல் ஹக் உள்பட சிலர் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது, நான் மரணத்திற்கு பயப்படவில்லை. நாட்டின் தொடர்ச்சியான பண வீக்கம் மற்றும் மோசமான பொருளாதார நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் காரணம் என்றார்.
இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கண்டனம் தெரித்துள்ளார். முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துமாறு பலுசிஸ்தான் அரசை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.