என் மலர்
நீங்கள் தேடியது "கிரண் ரிஜிஜு"
- 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம்.
- வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும்.
நேற்று முன்தினம் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. மதியம் தொடங்கிய விவாதம், நள்ளிரவு வரை நடைபெற்று அதன்பின் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதேபோன்று மாநிலங்களவையிலும் நேற்று மதியம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. நேற்று 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடைபெற்றதாக சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரிண் ரிஜிஜு கூறியதாவது:-
நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நாம் ஒரு முக்கியமாக சாதனைப் படைத்துள்ளோம். 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம். இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.
இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த மசோதாவிற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவளித்தன.
புதுடெல்லி:
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மசோதாவிற்கு பா.ஜ.க,வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
இந்நிலையில், மாநிலங்களவையில் சிறுபான்மை நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:
வக்பு மசோதாவால் நாங்கள் முஸ்லிம்களை பயமுறுத்தவில்லை, அது எதிர்க்கட்சிகள்.
வக்பு திருத்த மசோதாவில் மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்த மசோதா கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பயனளிக்கும்.
வக்பு திருத்த மசோதா முதலில் வரைவு செய்யப்பட்டபோதும், இப்போது நாம் நிறைவேற்றும் மசோதாவிலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. யாருடைய பரிந்துரைகளையும் நாங்கள் ஏற்கவில்லை என்றால் மசோதா முற்றிலும் வேறுபட்டிருக்கும்.
வக்பு வாரியம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. ஏன் முஸ்லிம்கள் மட்டுமே சட்டப்பூர்வ அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு தகராறு இருந்தால், அந்த தகராறு எவ்வாறு தீர்க்கப்படும்?
வக்பு வாரியத்திலும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் தகராறுகள் இருக்கலாம். சட்டப்பூர்வ அமைப்பு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், மேலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.
- திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கோரினார்.
தாக்கல் செய்து கிரண் ரிஜிஜு பேசியதாவது:-
* வக்பு வாரியத்தின் கீழ் 2004-ல் 4.9 லட்சம் சொத்துகள் இருந்தனர். இன்று 8.72 லட்சம் சொத்துகள் உள்ளன.
* முந்தைய அரசுகளின் நிறைவேற்றப்படாத பணிகளை நிறைவேற்றுவதே வக்பு மசோதாவின் நோக்கமாகும்.
* நாங்கள் யாருடைய மத உணர்வையும் புண்படுத்த விரும்பவில்லை.
* வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.
* திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.
* வக்பு மசோதா கோடிக்கணக்கான ஏழை முஸ்லிம்களுக்கு பயனளிக்கும், வக்ஃப் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.
இவ்வாறு கிரிண் ரிஜிஜு தெரிவித்தார்.
- இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சிலர் கூறினர்.
- ஆனால் இந்தக் கூற்று முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், பாராளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு விவாதத்துக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் உலகில் இல்லை. பெரும்பான்மையினர் முற்றிலும் மதச்சார்பற்றவர்கள் என்பதால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
பார்சிகள் போன்ற சிறிய சிறுபான்மை சமூகங்கள் கூட இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளன. இங்குள்ள அனைத்து சிறுபான்மையினரும் பெருமையுடன் வாழ்கிறார்கள்.
இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சில உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது.
சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. நானும் ஒரு சிறுபான்மையினர், நாம் அனைவரும் இங்கு எந்த பயமும் இல்லாமல் பெருமையுடன் வாழ்கிறோம்.
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினர் அந்தந்த நாடுகளில் மத துன்புறுத்தலை எதிர்கொண்ட பிறகு இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். இதைச் சொல்வது மிக, மிக தவறு.
வரும் தலைமுறை உங்களை ஒருபோதும் மன்னிக்காது. நாட்டின் பெரும்பான்மையினர் முழுமையாக மதச்சார்பற்றவர்கள் என்பதால் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இது இல்லை. ஆனாலும், நீங்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினரையும் ஒன்றிணைக்கப் போகிறது. வக்பு தீர்ப்பாயங்களில் ஏராளமான தகராறுகள் நிலுவையில் உள்ளன. சட்டத்தின் மூலம் இந்த வழக்குகளை விரைவுபடுத்த அரசாங்கம் விரும்புகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
- வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்ஃப் மசோதா தேவை.
- 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்.
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் இன்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து பேசினார். இந்த திருத்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளன. ஒடிசா மாநிலம் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கும். எங்களுடைய கோரிக்கைகள் பாராளுமன்ற கூட்டுக்குழுவால் நிராகரிக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இனிமேல் வக்ஃபு மசோதா, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு (Unified Waqf Management Empowerment, Efficiency and Development- UMEED) மசோதா என மறுபெயரிடப்படும் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களவையில் பேசும்போது "வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்ஃப் மசோதா தேவை. 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்; நீங்கள் எவ்வளவு காலம் அவர்களை தவறாக வழிநடத்த விரும்புகிறீர்கள்?.
வக்ஃப் மசோதாவை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பவர்களையும் நாடு பல நூற்றாண்டுகளாக நினைவில் வைத்திருக்கும். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வக்ஃப் சொத்துக்கள் இந்தியாவில்தான் உள்ளன. வக்ஃப் சொத்துக்கள் தனியார் இயல்புடையவை, ரயில்வே, ஆயுதப்படைகளின் நிலங்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது" என்றார்.
- வக்பு சட்டத்திருத்த மசோதா எந்த மத அமைப்பிலும், எந்த மத நிறுவனத்திலும் தலையிடவில்லை.
- 284 பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் குழுவின் முன் முன்வைத்துள்ளனர்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார்
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதம், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை என்பதை இரு அவைகளின் கூட்டுக் குழுவிலும் கூற விரும்புகிறேன். கூட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... இதுவரை, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 284 பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் குழுவின் முன் முன்வைத்துள்ளனர். 25 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்களும் தங்கள் சமர்ப்பிப்புகளை முன்வைத்துள்ளன.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைவரும் இந்த மசோதாவை ஆதரிப்பார்கள்.
நாடாளுமன்ற கட்டிடம் உட்பட பல இடங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று டெல்லி வக்ஃப் வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இன்று இந்த சட்ட திருத்தத்தை நாம் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால், நாம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கூட வக்பு சொத்து என்று உரிமை கோரப்பட்டிருக்கும்.
2013 ஆம் ஆண்டில், சீக்கியர்கள், இந்துக்கள், பார்சிகள் ஆகியோர் வக்பு போர்டில் இருக்க அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது.
2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இருந்த 123 பிரதான சொத்துக்களை காங்கிரஸ் அரசாங்கம் டெல்லி வக்பு வாரியத்திற்கு அதற்காக மாற்றியது? இது தேர்தலில் வெற்றி பெற உதவும் என நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் தோல்வி தான் உங்களுக்கு கிடைத்தது.
வக்பு சட்டத்திருத்த மசோதா எந்த மத அமைப்பிலும், எந்த மத நிறுவனத்திலும், எந்த மத நடைமுறையிலும் எந்த வகையிலும் தலையிடவில்லை.
இந்த மசோதாவில் சில முரண்பாடுகள் இருந்தன, எனவே அதைத் திருத்துவது அவசியம். எந்தவொரு இந்தியரும் வக்பு போர்டை உருவாக்க முடியும் என்று நான் முன்பு குறிப்பிட்டிருந்தேன், ஆனால் 1995 இல் அப்படி இல்லை. 2013 இல், நீங்கள் அதில் மாற்றங்களைச் செய்தீர்கள், இப்போது 1995 ஆம் ஆண்டின் விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளோம், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றிய ஒருவர் மட்டுமே வக்பு போர்டை உருவாக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறோம்" என்று தெரிவித்தார்.
- சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்கின்றன.
- விதிகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தவும் முற்சிக்கின்றன.
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு "வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசாங்கம் முழுமையாக நிலையில் தயாராக உள்ளது. சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தவும், அதன் விதிகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தவும் முயல்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் விடுமுறை முடிவடைந்து நாளை பாராளுமன்றம் கூடுகிறது. இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சட்ட திருத்த மசோதா சட்டமாக வேண்டுமென்றால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
மசோதா தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்த மசோதா முதலில் மக்களவையில் அறிமுக்கப்படுத்தப்படும்.
இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, முஸ்லிம்களுக்கு நலனுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
மக்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா முன்மொழியப்பட்டது. பின்னர் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக்குழு பல்வேறு திருத்தங்கள் செய்தது. திருத்தம் செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
ரம்ஜான் பண்டிகையான இன்று இந்த மசோதாவில் உள்ள பரிந்துரைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் கருப்புப் பட்டை அணிய வேண்டும் என தூண்டுவது நாட்டிற்கு நல்லதல்ல.
எதிர்க்கட்சிகள் இந்த மனுவில் உள்ள விவரங்களை ஆய்வு செய்து, அரசுடன் விவாதங்களில் ஈடுபட வேண்டும். என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளில் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியில் உள்ள பல எம்.பி.க்களும், இந்த மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளளனர்.
இந்த மசோதா பெரும்பாலான முஸ்லிம்களின் நலத்திற்கானது. வக்ஃபு வாரிய சொத்துகளை சுய நலத்திற்காக சுரண்டும் சில தலைவர்களுக்கு எதிரானது. கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இவ்வா கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து ஏற்கனவே பேசியுள்ளேன்.
- ஒரு மொழியை மட்டும் திணிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன்.
நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்12வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் கூறியுள்ளதாவது:
(பொதுமக்கள்) நீதித்துறையை எளிதாக அணுகுவதற்கு, பிராந்திய மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருப்பது காலத்தின் கட்டாயம். நமது பிரதமர் நமது கலாச்சாரம் மற்றும் நமது மொழியுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்.
நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையில் எதிர்காலத்தில் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் ஏற்கனவே நான் பேசியுள்ளேன்.
உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் (எதிர்காலத்தில்) தமிழ் மொழி முக்கிய இடம் பெறுவதைக் கண்டு நாம் அனைவரும் பெருமைப்படுவோம். தமிழ் மிகச் சிறந்த மொழி, ஒரு மொழியை மட்டும் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நீதிபதிகளுக்கான சவால்கள் குறித்தும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
- இந்தியாவில் நீதிபதிகள் ஒவ்வொரு நாளும் 50-60 வழக்குகளைக் கையாள்கின்றனர்.
மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.
விழாவில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-
இந்தியாவில் மக்கள் தொகை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு சவால்கள் நம் முன்பாக உள்ளன. நீதிபதிகளுக்கான சவால்கள் குறித்தும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிற நாடுகளில் நீதிபதிகள் மிகவும் சவுகரியமாக வாழ்கின்றனர். நாளொன்றுக்கு 5,6 வழக்குகளை விசாரிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் நீதிபதிகள் ஒவ்வொரு நாளும் 50-60 வழக்குகளைக் கையாள்கின்றனர்.
அதனால் ஏற்படும் மன அழுத்தம் அதிகம். சமூக வலைதளங்களில் ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. வழக்குகள் முடியும் அதே நேரத்தில் இரு மடங்கு வழக்குகள் புதிதாக தாக்கலாகின்றன. அதனால் தான் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உரிய நீதி வழங்கப்படும் போது, நீதிமன்றங்கள் மீதான சாமானியரின் நம்பிக்கை உயர்கிறது.
நீதிமன்றத்தில் மொழி, மிகப்பெரும் சவாலாக உள்ளது. தமிழ் பழம்பெரும் மொழி. உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடு மொழியாக்க கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால், வருங்காலத்தில் உச்சநீதி மன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும். இந்திய மொழிகள் நீதி மன்றங்களில் பயன்பாட்டில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடித்தட்டு மக்களும் எளிதாக அணுகும் வகையில் நீதிமன்ற கட்டமைப்பு விரைவில் அமையும்.
பொதுமக்கள் காவலர்களை பார்த்தால் அச்சப்படும் விதமாக இருக்கக் கூடாது. பாதுகாப்பாக உணர வேண்டும். அதே போல் பொதுமக்கள் நீதி மன்றத்தை எளிதில் அணுகும்படி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராகுல் காந்திக்காக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர்.
- கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின. பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே கூட்டாக போராட்டங்களை நடத்தினர். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்.பி.க்கள் எதிர்முழக்கங்கள் எழுப்பினர். அதாவது, லண்டனில் இந்திய பாராளுமன்றம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக இருந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளிலும் பணிகள் முடங்கின. கடைசி நாளான இன்றும் மக்களவையில் எந்த பணியும் நடக்காமல் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற முடக்கம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். கடைசி நாளிலும் அவையை சீர்குலைத்தனர். கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்தனர்.
பாராளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஒரு எம்.பி. ராகுல் காந்திக்காக, காங்கிரசும், அவர்களின் ஆதரவாளர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
காங்கிரசும் அதன் கும்பல்களும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சூரத் நீதிமன்றத்திற்கு எப்படி சென்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜம்மு காஷ்மீரில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு பயணம் செய்தார்.
- அவர் சென்ற கார் மீது லாரி மோதியதில் மத்திய மந்திரி உயிர் தப்பினார்.
ஜம்மு:
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு சாலை மார்க்கமாக இன்று ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.
ராம்பான் அருகே சென்று கொண்டிருந்தபோது லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதியது. இதையடுத்து பாதுகாப்பு போலீசார் மந்திரியை காரிலிருந்து பத்திரமாக வெளியேற்றினர்.
இந்த விபத்தில் மந்திரி கிரண் ரிஜிஜு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
மத்திய மந்திரி சென்ற கார் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
- உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாஜக அரசு மீதும் பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-
உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது.
எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்தால் உங்கள் கூட்டணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ. என்று பெயர் வைப்பது கைகொடுக்காது.
நாட்டை ஆளும் அதிகாரத்தை அரசாங்கம் இழக்கும்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்பதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். தவறான நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் வருத்தம் தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.