search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆத்தூர்"

    சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஆத்தூர் பகுதுகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. மழை, இடிமின்னல்

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஏற்காட்டில் பெய்த மழையால் குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆத்தூர் 19, கெங்கவல்லி 14, பெத்தநாயக்கன்பாளையம் 11, சேலம் 10.6, தம்மம்பட்டி 7,சங்ககிரி 4, வீரகனூர், எடப்பாடி, கரியகோவில் பகுதிகளில் தலா 2, காடையாம்பட்டி, ஓமலூர், ஆனை–மடுவு ஆகிய பகுதிகளில் தலா 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 93.6 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    ஆத்தூர், ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் சென்று எம்.எல்.ஏக்கள் ஆய்வு செய்தனர். #MLAstudy

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமந்துறை, தும்பல், பாப்பிநாயக்கன்பட்டி, செக்கிடிபட்டி, தாண்டானூர், கொட்ட வாடி, குமாரபாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், வைத்தியகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாக்கடைவசதி, கழிப்பிடம், சாலை, மின்விளக்கு, ரேசன்கடை, பஸ்வசதி குறித்து பொதுமக்களிடம் கேட்கப்பட்டது.

    இதில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ சின்னதம்பி, ஏற்காடு எம்.எல். ஏ சித்ரா ஆகியோர் குறைகளை கேட்டனர். அப்போது பெத்தநாயக்கன் பாளையம் தாசில்தார் பிரகாஷ், பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, வட்டாரவளர்ச்சி அலுவலர் சாந்தி, பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், தெற்கு ஒன்றியசெயலர் முருகேசன், நரசிங்கபுரம் நகர செயலர் மணிவண்ணன், ஏத்தாப்பூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் குப்புசாமி, உட்பட பலர் கலந்து கொண்டு மேற்கண்ட அனைத்து ஊர்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து குறைகளை கேட்டு அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

    ×