என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெல்ஜியம்"
- பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
- இந்தப் போட்டியில் இந்தியா 3 கோல்கள் அடித்தது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அபிஷேக் மற்றும் ஹர்மன்பிரித் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இரண்டாவது பாதியில் ஹர்மன்பிரித் மேலும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன்மூலம் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடம்பிடித்தது.
ஏற்கனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர்கொண்டது.
- இந்தப் போட்டியில் இந்தியா ஒரு கோல் மட்டுமே அடித்தது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை அபிஷேக் அடித்தார்.
இரண்டாவது பாதியில் பெல்ஜியம் வீரர்கள் சிறப்பாக விளையாடி 2 கோல்கள் அடித்தனர். இதனால் பெல்ஜியம் அணி இந்தியாவை 2-1 என வீழ்த்தியது.
இதன்மூலம் 4 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
- பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் இரண்டாவது பாதியில் எந்த அணி கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் போராட்டத்தில் தீவிரம் காட்டினர்.
போட்டி முடிய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், பெல்ஜியம் வீரர்களின் ஓன் கோல் காரணமாக பிரான்ஸ் அணி போட்டியில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், போட்டி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது.
- நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
- நாக் அவுட்டான 2-வது சுற்று 29-ந் தேதி தொடங்குகிறது.
ஹம்பர்க்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. குரூப் எப் பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.
ஒரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 0-2 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. அந்த அணிக்காக குவரட்ஸ் கெலியா (2-வது நிமிடம்), மிகுடாட்ஸ் (57-வது நிமிடம், பெனால்டி) கோல் அடித்தார். இந்த வெற்றி மூலம் ஜார்ஜியா 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுக்கல் ஏற்கனவே தகுதி சுற்று இருந்தது. அந்த அணி 6 புள்ளியுடன் எப் பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.
இதே பிரிவில் ஹம்பர்க்கில் நடந்த மற்றொரு போட்டியில் துருக்கி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசுவை வீழ்த்தியது. துருக்கி அணிக்காக சல்ஹா னோக்லு (51-வது நிமிடம்) டாசுன் (94-வது நிமிடம்) ஆகியோரும், செக் குடியரசு அணியில் தாமஸ் சவுசக்கும் (66-வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த வெற்றி மூலம் துருக்கி 6 புள்ளிகளு டன் 2-வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. செக் குடியரசு 1 புள்ளியுடன் வெளியேறியது.
முன்னதாக இ பிரிவில் ருமேனியா- சுலோவாக்கியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெல்ஜியம்- உக்ரைன் அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
'இ' பிரிவில் 4 அணிகளும் 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் ருமேனியா, பெல்ஜியம், சுலோவாக்கியா முறையே முதல் 3 இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறின. உக்ரைன் வெளியேற்றப்பட்டது.
நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நாக் அவுட்டான 2-வது சுற்று 29-ந் தேதி தொடங்குகிறது.
- துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.
- பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.
யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று போட்டிகளில் பெல்ஜியம் மற்றும் ரோமானியா அணிகள் மோதின. இந்த தொடரின் முதல் போட்டியில் ஸ்லோவேகியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த பெல்ஜியம் அணி இந்த போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.
இந்த போட்டியில் பெல்ஜியம் வீரர் 73 நொடியில் அடித்த கோல் அந்த அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெல்ஜியம் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
மறுமுனையில், பெல்ஜியம் அடித்த கோலுக்கு பதில் கோல் அடிக்க ரோமானிய வீரர்கள் முனைப்பு காட்டினர். எனினும், இவர்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் அணி அதிரடியாக ஆடியது.
போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சூழலில் பெல்ஜியம் அணியின் டெ ப்ரூன் மற்றொரு கோல் அடித்தார். இதன் மூலம் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலையை தொடர்ந்தது. போட்டி முடிவில் ரோமானியா அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதன் காரணமாக பெல்ஜியம் அணி 2-0 என வெற்றி பெற்றது.
- ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் இ பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாகியா அணி மோதின. போட்டியில் முதல் கோலை ஸ்லோவேகியா அணி 56 நிமிடத்தில் அடித்தது.
இதையடுத்து பெல்ஜியம் அணியால் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இந்த போட்டியில் ஸ்லோவேகியா அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் க்ரூப் இ பிரிவில் ஸ்லோவேகியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத வெற்றியாகும்.ஸ்டனீஸ்லாவ் ரொபொட் ஆட்ட நாய்கனாக் தேர்வு செய்யப்பட்டார்.
- முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
- இதே மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
லண்டன்:
9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஹாக்கி லீக் போட்டி தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐரோப்பிய சுற்று ஆட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.
இந்த சுற்றில் முதலாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியான பெல்ஜியம், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தன. 17-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் திபாயு ஸ்டாக்புரோக்ஸ் பந்தை கோல் வலைக்குள் திணித்தார்.
21-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மன்தீப் சிங் கோல் திருப்பினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
இதைத்தொடர்ந்து பெல்ஜியம் அணியினர் அடிக்கடி இந்திய அணியின் கோல் எல்லையை நோக்கி படையெடுத்து கடும் குடைச்சல் கொடுத்தனர். இதன் பலனாக அந்த அணிக்கு பல பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. இதனை கோலாக்க அவர்கள் எடுத்த முயற்சியை இந்திய அணியின் பின்கள வீரர்கள் மற்றும் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் அபாரமாக தடுத்து முறியடித்தனர்.
கடைசி 2 நிமிடம் இருக்கையில் பெல்ஜியம் அணியின் எல்லா வீரர்களும் இந்திய அணியின் கோல் எல்லைப்பகுதியை சுற்றி வளைத்து நெருக்கினர். அந்த சமயத்தில் பெல்ஜியம் வீரர் அடித்த பந்தை இந்திய வீரர் ஜர்மன்பிரீத் சிங் மட்டையின் பின்பகுதியை வைத்து தடுத்ததாக நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதனை ஆய்வு செய்த நடுவர் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் (59-வது நிமிடம்) வாய்ப்பை வழங்கினார். இதனை கச்சிதமாக பயன்படுத்தி அந்த அணியின் நெல்சன் ஒனானா கோலடித்தார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது.
முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய பெல்ஜியம் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்