என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகனை கொன்ற தந்தை"

    தன்னை விடுத்து தம்பிக்கு திருமணம் செய்து வைத்ததை தட்டி கேட்டதால் இரும்பு கம்பியால் அடித்து மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் அய்யர்சாமி. இவருக்கு மூவேந்தன்(31), அரவிந்தன்(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூவேந்தன் வேலைக்கு செல்லாமல் ஊதாரிதனமாக சுற்றி வந்துள்ளார். இதனிடையே அரவிந்தன் தனது உறவுக்கார பெண்ணை காதலிப்பதாக தனது தந்தையிடம் கூறிவந்துள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் பேசி முடிவு செய்தனர்.

    நேற்று அரவிந்தனுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் தனது தந்தையிடம் வந்து மூவேந்தன் அண்ணன் இருக்கையில் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்தால் ஊரில் உள்ளவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என தகராறு செய்துள்ளார். தம்பி வேலைக்கு செல்வதாலும், அவன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாலும் அவசரமாக இந்த ஏற்பாடுகள் செய்ததாக அய்யர்சாமி தனது மகனிடம் கூறியுள்ளார்.

    இருந்தபோதும் சமாதானம் அடையாமல் மூவேந்தன் தனது தந்தையிடம் தகராறு செய்தபடி இருந்ததால் அவரை இரும்பு கம்பியால் அடித்து தாக்கினார். பின்னர் மயக்கமடைந்த அவரை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு திருமண மண்டபத்திற்கு சென்றுவிட்டனர். மீண்டும் மாலையில் திரும்பி வந்து அந்த அறையை திறந்து பார்த்தபோது மூவேந்தன் இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மாயனத்திற்கு கொண்டு சென்று எரிக்க முயன்றனர். இந்த தகவல் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சின்னமனூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அங்கு வந்து மூவேந்தன் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை அடித்து கொன்ற தந்தை அய்யர்சாமியை கைது செய்தனர். தம்பிக்கு திருமணம் நடந்த நிலையில் அண்ணன் அடித்து கொலை செய்யப்பட்டதும், தந்தை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா? அல்லது சொத்து பிரச்சினை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • கைதான சவுந்தர பாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இரணியல்:

    இரணியல் அருகே பாளையம் சரல் விளை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 80). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். 4 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2 மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதில் ஒரு மகன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். நாகராஜன் (வயது 40) என்பவரும், அவரது தந்தை சவுந்தர பாண்டியனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நாகராஜன் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.

    தினமும் குடித்துவிட்டு வந்து தனது தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்றும் நாகராஜன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடியதுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை தந்தை சவுந்தரபாண்டியன் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் நாகராஜன் கேட்கவில்லை. தந்தை சவுந்தர பாண்டியனையும் தாக்க முயன்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சவுந்தரபாண்டியன் நாகராஜனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்தார். பின்னர் இரணியல் போலீசில் சவுந்தர பாண்டியன் சரணடைந்தார். போலீசில் மகனை கொலை செய்ததாக கூறியதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு பிணமாக கிடந்த நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா? அல்லது சொத்து பிரச்சினை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைதான சவுந்தர பாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தந்தை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் பத்திரகாளிபுரம் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் ஈஸ்வரன் (வயது36). ஈஸ்வரன் குடி பழக்கத்திற்கு ஆளானதால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. பணம் தர மறுத்தால் போசை கொன்று விடுவதாக ஈஸ்வரன் மிரட்டி உள்ளார். குடி பழக்கத்திற்கு ஆளான மகனால் போஸ் நிம்மதி இழந்தார்.

    சம்பவத்தன்று ஈஸ்வரன், போசிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். தர மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த போஸ் அருகில் இருந்த கல்லை எடுத்து ஈஸ்வரனை கடுமையாக தாக்கினார். படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து போஸ் பூலாநந்தபுரம் வி.ஏ.ஓ. கல்யாணியிடம் ஒப்புதல் வாக்குமுலம் அளித்தார். வி.ஏ.ஓ. புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் போசிடம் விசாரித்து வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் செல்போனில் கேம் விளையாடியதால் மகனை அடித்து கொன்ற தந்தை, இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி மாவட்டம் பரஸ்ராம்பூரைச் சேர்ந்த ராகேஷ். இவரது மகன்கள் ராகுல் (13), ராஜன் (8).

    இந்த நிலையில் சிறுவன் ராகுல் திடீரென மாயமனான். இதுகுறித்து அவனது தாத்தா பால்கோவிந்த் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தபோது தந்தை ராகேஷ் கூறிய தகவல்கள் முன்னுக்கு பின்னாக இருந்தது.

    இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், “தொடர்ந்து செல் போனில் விளையாடியதால் மகனை அடித்து கொன்றதாக” தெரிவித்தார்.

    சிறுவன் ராகுல் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிபடியே இருந்து வந்தான். சாப்பிடாமலும் தொடர்ந்து செல்போனிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறான். இதை தந்தை கண்டித்தும் கேட்கவில்லை.

    சம்பவத்தன்று ராகேஷ், மகனை அழைத்தபோது அவன் செல்போனில் விளையாடியபடி இருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ் மகனை நெஞ்சில் காலால் மிதித்து தள்ளினார்.

    இதில் சிறுவன் ராகுல் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராகேஷ் மகன் உடலை அங்குள்ள காட்டு பகுதியில் புதைத்து விட்டார்.

    இதையடுத்து போலீசார் சிறுவன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews

    ×