என் மலர்
நீங்கள் தேடியது "பாலக்காடு"
- தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
உடுமலை :
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு -திருச்செந்தூர் ரெயில் மற்றும் திருச்செந்தூர்- பாலக்காடு ரெயில் வரும் 12-ந் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் ரெயில் திண்டுக்கல்- திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும். திருச்செந்தூர்- பாலக்காடு ரெயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பாலக்காடு வரை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- கடும் வெப்பம் காரணமாக மாநிலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
- மின்நுகர்வுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. கேரள மாநிலத்திலும் அதிக வெப்பம் காணப்படுவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக மாநிலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து மண்டல வாரியாக மின் கட்டுப்பாடு நடவடிக்கையை கேரள மாநில மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி மின் நுகர்வு அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள், இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
வணிக நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு பிறகு அலங்கார விளக்குகள் மற்றும் விளம்பர பலகைகளை அணைக்க வேண்டும். வீட்டு உபயோகிப்பாளர்கள் 26 டிகிரிக்கு மேல் ஏ.சி.களை அமைக்க வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக பாலக்காடு மின்வட்டத் திற்குபட்ட பகுதிகளில் இரவு 7 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மின்சாரம் ஒழுங்குபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிரிப்பாலா, ஓட்டப்பாலம், ஷோரனூர், செர்புளச்சேரி துணை மின் நிலையங்களில் மின் விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நேரத்தில் மின் நுகர்வுகளை முடிந்தவரை தவிர்த்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேரள மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.
- காட்டு யானை ஒன்று அவர்களது ஜூப்பை வழிமறித்தது.
- 2 மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுப்பகுதிக்கு சென்றது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாரா அருகே உள்ள நெல்லியம்பதி பகுதியை சேர்ந்தவர் சுஜய் சர்தார். இவரது மனைவி சாம்பா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்தநிலையில் அவருக்கு இரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரசவத்துக்காக நெல்லியம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை கணவர் சுஜய் வீட்டில் இருந்து ஜீப்பில் அழைத்துச் சென்றார். காட்டு வழியில் அவர்கள் ஜீப்பில் பயணித்தனர்.
அப்போது சாம்பாவுக்கு பிரசவ வலி அதிகமானது. ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜீப்பிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதே நேரத்தில் உடல் நலம் பாதிப்பால் சாம்பாவை ஜூப்பில் இருந்து இறங்க முடிய வில்லை. இதனால் பிரசவத்துக்கு பின் அவருக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் எதுவும் செய்ய முடிய வில்லை.
இதையடுத்து அந்த இடத்துக்கு சுதினா, ஜானகி என்ற 2 நர்சுகள் வந்தனர். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த இடத்தில் ஜீப்பில் வைத்தே தொப்புள் கொடியே அறுத்தனர். மேலும் சாம்பாவுக்கு தேவையான முதல்கட்ட சிகிச்சைகளும் அளித்தனர்.
அதன்பிறகு அருகில் உள்ள நென்மாரா சமூக நல மையத்திற்கு சம்பாவை அழைத்துச் செல்வதற்காக ஜீப்பில் புறப்பட்டனர்.
அந்த நேரத்தில் காட்டு யானை ஒன்று அவர்களது ஜூப்பை வழிமறித்தது. காட்டு யானை நிற்பதை பார்த்த சுஜய், அவரது மனைவி மற்றும் நர்சுகள் பீதியில் உறைந்தனர். வாகன செயல்பாட்டை நிறுத்தி விட்டு அனைவரும் ஜீப்புக்கு உள்ளேயே அமர்ந்திருந்தனர்.
யானையிடம் பிரசவமான பெண், அவரது கணவர் மற்றும் நர்சுகள் சிக்கியிருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். இருந்தபோதிலும் யானை வழியை விட்டு விலகிச் செல்லாமல் அங்கேயே நின்றது.
பெற்றெடுத்த குழந்தையுடன் சாம்பா தவித்தபடி இருந்தார். பின்பு 2 மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுப்பகுதிக்கு சென்றது. அதன்பிறகு சாம்பா, அவர் பெற்றெடுத்த குழந்தை, கணவர் சுஜய் மற்றும் நர்சுகள் ஆகிய அனவரையும் வனத்துறை யினர் காட்டுப் பகுதியில் இருந்து பாது காப்பாக வெளியே அழைத்து வந்தனர்.
பின்பு சாம்பா மற்றும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஆகிய இருவரும் நென்மாரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து பாலக்காடு பெண்கள் மற்றும் குழந்தை கள் மருத்துவமனைக்கு தாய் மற்றும் சேய் இருவரும் மாற்றப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- கோவை-சேலம், பாலக்காடு, சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த 3 ெரயில்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.
கோவை:
கோவை-சேலம், பாலக்காடு, சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சொர்ணூர்-கோவை இடையிலான முன்பதி வில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06804), சொர்ணூர் ெரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு கோவை ெரயில்நிலையம் வந்தடையும்.
இதேபோன்று கோவை-சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெழு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்:06805), கோவை ெரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு சொர்ணூர் சென்றடையும்.
பாலக்காடு-கோவை முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்:06806), பாலக்காடு ெரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, காலை 9 மணிக்கு கோவை ெரயில் நிலையம் வந்தடையும்.
கோவை-பாலக்காடு இடையிலான முன்பதிவில்லா மெழு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06807), கோவை ெரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.55 மணிக்கு பாலக்காட்டை சென்றடையும்.
கோவை-சேலம் இடையி லான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்:06802), கோவை ெரயில் நிலையத்தில் இருந்து இன்றுமுதல் காலை 9 மணிக்கு புறப்பட்டு. மதியம் 1 மணிக்கு சேலம் ெரயில் நிலையம் சென்றடையும்.
இதேபோன்று சேலம்-கோவை இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்:06803) சேலம் ெரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு கோவை வந்தடையும். இந்த 3 ெரயில்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.