என் மலர்
நீங்கள் தேடியது "செயலி"
- வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
- புது அம்சம் பற்றிய விவரங்கள் செயலியின் பீட்டா வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன் 2.22.23.14/15 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புது அப்டேட்டில் மல்டி டிவைஸ்-க்கான லாக்-அவுட் ஸ்கிரீன், புகைப்படம், வீடியோ, ஜிஃப் மற்றும் டாக்யுமெண்ட் உள்ளிட்டவைகளை கேப்ஷனுடன் ஃபார்வேர்டு செய்யும் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
லாக்-அவுட் ஸ்கிரீனை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. புதிய லாக்-அவுட் பகுதி வாட்ஸ்அப்-இல் இருந்து லாக்-அவுட் செய்ததும் காண்பிக்கும். செயலியின் செட்டிங்ஸ்-இல் இருந்தபடி இரண்டாவது சாதனத்தில் இருந்து லாக்-அவுட் செய்ய முடியும்.

வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- லின்க்டு டிவைசஸ் ஆப்ஷன் மூலம் பிரைமரி போனில் இருந்து டேப்லெட் செஷனை விட்டு வெளியேற முடியும். மேலும் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் ஆப்ஷன்களில் இருந்து நம்பரை மாற்றுவதற்கான "சேஞ்ச் நம்பர்" அம்சம் இடம்பெற்று இருக்கிறது.
இத்துடன் புகைப்படம், ஜிஃப், வீடியோ உள்ளிட்டவைகளை ஃபார்வேர்டு செய்யும் போது அவற்றுக்கு தலைப்பிடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தரவுகளை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் தலைப்பை பார்க்க முடியும். இதே வசதி டாக்யுமெண்ட்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு அம்சங்களில் லாக்-அவுட் ஸ்கிரீன் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான வெர்ஷனில் வெளியாகும் முன் இந்த அம்சம் தொடர் சோதனை செய்யப்படும். ஃபார்வேர்டு மீடியா வித் கேப்ஷன் அம்சம் பீட்டா பயனர்களில் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
Photo Courtesy: WABetaInfo
- வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்டறிந்து நேரடியாக பொருட்களை வாங்கும் வசதி வழங்கப்படுகிறது.
- முதற்கட்டமாக இந்த வசதி தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், தனது பிஸ்னஸ் ப்ரோஃபைல் பயனர்களுக்கு புது அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தளத்தினுள் பிஸ்னஸ்களை தேடி, அவர்களிடம் சாட் செய்து பொருட்களை வாங்க முடியும். வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்கள் பிஸ்னஸ்களை - வங்கி, பயணம் என குறிப்பிட்ட பிரிவுகளில் தேட முடியும்.
எனினும், முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பிஸ்னஸ் ப்ரோஃபைல் பயனர்கள் வியாபாரங்களை குறுந்தகவல் செயலிக்குள் எளிதில் கண்டறிய வழி செய்யும். இவ்வாறு செய்யும் போது காண்டாக்ட்களை சேவ் செய்ய வேண்டிய அவசியமோ, வியாபாரங்களின் விவரங்களை வலைதளங்களில் தேட வேண்டிய அவசியம் இல்லை.
வியாபாரங்களை தேடுவதோடு வாட்ஸ்அப் மூலம் நேரடியாக பொருட்களை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது ஷாப்பிங் வலைதளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. பேமண்ட் வசதிக்காக வாட்ஸ்அப் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இந்த வசதியை வழங்கி இருக்கிறது. இந்த அம்சம் ஜியோமார்ட் சேவையை போன்றே செயல்படுகிறது.
இந்த அம்சம் பாதுகாப்பானது என்பதோடு, பயனர்களின் தனியுரிமையை காக்கும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது. மேலும் பயனர்கள் தங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பாதுகாப்பான பண பரிமாற்றத்தை செய்ய முடியும். இந்த அம்சம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு வியாபாரங்கள் வாட்ஸ்அப் மூலம் பொருட்களை விற்க வழி செய்கிறது.
- வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் வழங்குவதற்கான சோதனைகள் அதன் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது.
- சமீபத்தில் தான் வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருந்தது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது மெசேஜிங் செயலியில் ஏராளமான புது அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது அம்சங்கள் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் முன்பே பீட்டா வெர்ஷனில் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டு விடும். அந்த வகையில் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய தகவல்களை WABetaInfo வெளியிட்டு இருக்கிறது. இதில் புது அம்சம் எப்படி காட்சியளிக்கும் என்ற ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி பயனர்கள் அதிகபட்சம் 30 நொடிகள் கொண்ட வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பதிவிட முடியும் என தெரியவந்துள்ளது. மற்றவர்கள் திரையின் கீழ்புறம் வலதுபக்கமாக இருக்கும் மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்து வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியும்.

இதுவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பாரில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது. தற்போது வாய்ஸ் ஸ்டேட்டஸ் இந்த பட்டியலில் புதிதாக இணைய இருக்கிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்கு மட்டுமே காண்பிக்கும். இதே போன்ற நிலையை புதிய வாய்ஸ் ஸ்டேட்டஸ்-இலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.21.5 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது. இது மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் சில அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இவை எப்போது செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Photo Courtesy: WABetaInfo
- உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது.
- தற்போது வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக உள்ளது. தினந்தோரும் கோடிக்கணக்கானோர் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் முக்கிய பாலமாக திகழ்கிறது. இத்தனை பிரபலமாக இருக்கும் வாட்ஸ்அப் செயலி அதே அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறது.
இந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு சுமார் 500 மில்லியன் பயனர் விவரங்கள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஒருவர் சுமார் 487 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர் விவரங்களை ஹேக்கிங் கம்யுனிட்டியில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார் என சைபர்நியூஸ் தெரிவித்து இருக்கிறது.

இதில் உலகம் முழுக்க 84 நாடுகளை சேரந்த பயனர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் 32 மில்லியன் பயனர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் துருக்கியை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர் விவரங்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் 7 ஆயிரம் டாலர்கள் எனும் விலைக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. லண்டன் டேட்டாபேஸ் விவரங்களின் விலை 2 ஆயிரத்து 500 டாலர்களும், ஜெர்மனி விவரங்களின் விலை 2 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் லீக் ஆகி இருக்கும் மொபைல் போன் நம்பர்களை கொண்டு ஏராளமான மோசடிகளை செய்ய முடியும் என்ற வாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.
- வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வந்த சூப்பர் அம்சம் தற்போது ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படுகிறது.
- புது அம்சம் கொணஅடு பயனர்கள் தங்களுக்கு முக்கியமான தகவல்களை வாட்ஸ்அப் செயலியிலேயே குறித்து வைத்துக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்டு வந்த மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) அம்சம் தற்போது வெளியாகிறது. புதிய 1:1 அம்சம் கொண்டு உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக் கொள்ள முடியும். இந்த அம்சம் மூலம் குறிப்புகளை உங்களுக்கே அனுப்பிக் கொள்வதோடு, நினைவூட்டிகள் மற்றும் மிக முக்கிய தகவல்களையும் அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பணி சார்ந்த விவரங்களை குறித்துக் கொள்ள உதவும். இந்த அம்சத்தில் ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியல், ரிமைண்டர் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்ட போது, வாட்ஸ்அப் உங்களின் போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்வதை குறிக்கும் வகையில் தனி கேப்ஷனை வழங்கியது.

மேலும் சிலருக்கு தங்களின் சாட் பாக்ஸ்-இல் சொந்த மொபைல் நம்பர் சிறிது காலத்திற்கு தெரிந்தது. மல்டி டிவைஸ் வசதி இருப்பதால் உங்களது மொபைல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் போது, அந்த மெசேஜ் நீங்கள் சின்க் செய்திருக்கும் மற்ற சாதனங்களிலும் காண்பிக்கப்படும்.
புதிய மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சத்தை இயக்குவது எப்படி?
வாட்ஸ்அப்-ஐ திறக்கவும்
புதிய சாட்-ஐ உருவாக்க வேண்டும்
பட்டியலில் உங்களின் காண்டாக்ட் முதலில் காண்பிக்கப்படும்
நம்பர் மீது க்ளிக் செய்து மெசேஜ் செய்ய துவங்கலாம்
வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். இதுதவிர மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி, வாய்ஸ் ஸ்டேட்டஸ் அப்டேட் என ஏராளமான புது அம்சங்கள் வாட்ஸ்அப்-இல் வழங்கப்பட இருக்கிறது.
- வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் வழங்கப்பட்ட அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
- இதே அம்சம் விரைவில் ஐஒஎஸ் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
வாட்ஸ்அப் செயலியில் பயனர் குறுந்தகவல்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு "View Once" எனும் வசதியை வழங்கி இருக்கிறது. இந்த வசதி கொண்டு அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒரு முறை பார்க்கப்பட்டதும் அவை அழிந்து விடும். வாட்ஸ்அப்-இன் "View Once" அம்சம் தற்போது குறுந்தகவல்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த அம்சம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதால், இதனை மற்றவர்கள் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக குறுந்தகவல்களுக்கான "View Once" அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.25.20 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் பயனர்கள் மெசேஜ்களுக்கு "View Once" வசதியை பயன்படுத்தலாம்.

புது வசதியை வழங்குவதற்காக வாட்ஸ்அப் சாட் பார் அருகில் விசேஷ பட்டனை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவவதாக கூறப்படுகிறது. பயனர்கள் "View Once" மெசேஜ் அனுப்பும் முன் இந்த பட்டனை க்ளிக் செய்து அதன் பின் அனுப்ப வேண்டி இருக்கும். மெசேஜை அனுப்புவதற்கான ஐகான் மீது லாக் இடம்பெற்று இருக்கிறது.
வாட்ஸ்அப் தற்போது "View Once" முறையில் அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தடுக்கும் வசதியை வழங்கி வருகிறது. இதே போன்று "View Once" போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர், ஃபார்வேர்டு, காப்பி அல்லது சேவ் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை. இதே போன்ற வசதிகள் மெசேஜ்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: WABetaInfo
- வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் மெசேஜ்களை ஒரு முறை பார்த்ததும் அழிந்து போக செய்யும் வசதி உள்ளது.
- தற்போது வாட்ஸ்அப்-இல் Kept Messages பெயரில் புது வசதி வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது.
L செயலியில் மறைந்து போக செய்யும் குறுந்தகவல்களை பயனர்கள் சேமித்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான வசதியை வழங்கும் புது அம்சம் "Kept Messages" பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் disappearing messages மூலம் வரும் குறுந்தகவல்களை பயனர்கள் தற்காலிகமாக சேமித்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. அதன்படி disappearing messages வடிவில் வரும் குறுந்தகவல்களை சாதாரனமானவை போன்றே வைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல் மற்ற மெசேஜ்களை விட தனித்து காண்பிக்கப்படுகிறது. disappearing messages மூலம் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் தானாக அழிக்கப்பட்டு விடும். இந்த அம்சம் வாட்ஸ்அப் இணைக்கப்பட்டு இருக்கும் அனைத்து சாதனங்களிலும் குறிப்பிட்ட குறுந்தகவலை அழித்துவிடும். இந்த நிலையில், வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் புது வசதி disappearing messages-களை சேமித்துக் கொள்ள வழி செய்கிறது.

இவ்வாறு Kept Messages ஆக சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல் தானாக அழிக்கப்படாது. இவை மற்ற குறுந்தகவல்களை போன்றே சாட் பாக்ஸ்-இல் தோன்றும். பயனர் விரும்பும்பட்சத்தில் இவற்றை un-keep செய்யக்கோரும் போது தான் அழிக்கப்படும். சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல்களில் தனியே புக்மார்க் ஐகான் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் தற்போது ஆரம்ப கால சோதனை கட்டத்தில் உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் எப்போது பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் அப்டேட்களில் இந்த அம்சம் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Photo Courtesy: WABetaInfo
- பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம்.
- பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை, சொத்து வரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது குறைகளையும் மனுக்களையும் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த புதிய செயலியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடியே குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம்.
குப்பைகள் இருந்தாலோ, கழிவு நீர் தேங்கி இருந்தாலோ, கால்நடைகளால் தொல்லை ஏற்பட்டாலோ புகைப்படங்களுடன் தெரிவி த்தால் உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
செயலியில் பதிவான குறைகளை அனைத்து பிரிவு அதிகாரிகளும் கண்காணிப்பதால் உடனடியாக பிரச்சனையை தீர்வு செய்ய முடியும்.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் தான் இந்த புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலி மூலம் பொது மக்களுக்கு தேவையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையையும் கொண்டு வந்துள்ளோம்.
விரைவில் இந்த செயலி மூலம் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை, சொத்து வரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த புதிய செயலி மூலம் குறைகள், மனுக்களை எவ்வாறு தெரிவிப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்களின் தரம் கம்ப்ரெஸ் செய்வதால் குறைந்துவிடுகிறது.
- விரைவில், இந்த நிலை மாறி படங்களை அதன் ஒரிஜினல் தரத்தில் அனுப்பலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு விரைவில் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த வசதியை கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜினல் தரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். எதிர்கால அப்டேட்களில் இதுபோன்ற வசதி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்கப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் தான், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இந்த வசதி வழங்கப்படுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற சோஷியல்-ஷேரிங் செயலிகளை எதிர்கொள்ளும் வகையில், வாட்ஸ்அப் புதிய வசதியை வழங்க இருக்கிறது. முதற்கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வெப் வெர்ஷன்களின் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வசதியை கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜினல் ரெசல்யூஷனில் ஷேர் செய்ய முடியும்.

இவ்வாறு செய்வதால், புகைப்படங்களை அச்சடிக்க அனுப்பும் போதும் அதன் தரம் குறையாமல் இருக்கும். எனினும், அப்லோடு நேரத்தை குறைக்கவும், அதிக ஸ்பேஸ் எடுக்கப்படுவதை தவிர்க்கவும், தற்போது இருக்கும் கம்ப்ரெஸ்டு வெர்ஷன் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்படுகிறது. செயலியின் புதிய அப்டேட்களில் இந்த வசதி வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.2.11 அப்டேட்டில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் ஏராளமான புதிய அம்சங்கள் மற்றும் வசதிகளை இந்த ஆண்டு வழங்க திட்டமிட்டு வருகிறது. டெலிகிராம், டிஸ்கார்டு மற்றும் சிக்னல் போன்ற போட்டி நிறுவன செயலிகளை எதிர்கொள்ளும் நோக்கில் வாட்ஸ்அப் புதிய வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
Photo Courtesy: WABetaInfo
- பரமத்திவேலூர் வெங்க–மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
- இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.82-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.66-க்கும், சராசரியாக ரூ.78.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 464-க்கு ஏலம் போனது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்க–மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 521கிலோ தேங்காயை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15.10-க்கும், சராசரியாக ரூ.18.56-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.98ஆயிரத்து 326-க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 2 ஆயிரத்து 90 கிலோ தேங்காயை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
இதில் அதிகபட்சமாக தேங்காய் கிலோ ஒன்று ரூ.25.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.00- க்கும், சராசரியாக ரூ.23.00-க்கும் ஏலம் நடைபெற்றது.
மொத்தம் ரூ.50 ஆயிரத்து 98- க்கு ஏலம் நடைபெற்றது. ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.19- க்கும், சராசரியாக ரூ.78.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 749-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 10 ஆயிரத்து550 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.82-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.66-க்கும், சராசரியாக ரூ.78.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 464-க்கு ஏலம் போனது. விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வேளாண் பொருள் விற்பனைக்கான பணத்தை நேரடியாக செலுத்தினர்.
- வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஐபோனில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதியை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களின் வாய்ஸ் நோட்-களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். இந்த அம்சம் தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது.
வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.5.77 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் வாய்ஸ் நோட்-ஐ ஸ்டேட்டஸ் ஆக வைக்க செய்கிறது. புதிய அம்சத்தை பெற ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து, அப்டேட் செய்ய வேண்டும். செயலியை அப்டேட் செய்ததும் இந்த வசதி வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

பயன்படுத்துவது எப்படி?
- ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்
- ஸ்கிரீனின் கீழ்புறம் இருக்கும் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
- கீழ்புறத்தில் வலதுபுறமாக இருக்கும் பென்சில் ஐகானை கிளிக் செய்யவும்
- வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்ய மைக்ரோபோனை கிளிக் செய்யவும்
- மைக்ரோபோன் ஐகானை கிளிக் செய்த படி மெசேஜை ரெக்கார்ட் செய்யவும். அதிகபட்சம் 30 நொடிகளுக்கு வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்யவும்
- மெசேஜை ரெக்கார்ட் செய்து முடித்தபின் அழுத்தி பிடித்திருக்கும் மைக்ரோபோன் ஐகானை விட்டுவிட வேண்டும்
- ரெக்கார்ட் செய்த மெசேஜை ரிவியூ செய்த பின், அனுப்புவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்
இவ்வாறு செய்தபின் உங்களின் வாய்ஸ் மெசேஜ் வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு தெரியும்..
ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் தளத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் ஐஒஎஸ் பயனர்கள் வாட்ஸ்அப் வீடியோ காலில் இருந்தபடி பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ள செய்கிறது.
- உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
- வாட்ஸ்அப் க்ரூப்களில் புதிய வசதியை வழங்கும் அப்டேட் வெளியாகி வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் அட்மின்கள் நிர்வாகம் மற்றும் நேவிகேட் செய்வதை எளிமையாக்கும் க்ரூப் அப்டேட்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. புதிய அப்டேட் க்ரூப்-இல் யார் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்துவதோடு, நீங்கள் எந்த க்ரூப்களுடன் பகிர்ந்து கொள்கின்றீர்கள் என்பதை எளிமையாக்குகிறது.
கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் க்ரூப்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களுடன் புதிய அப்டேட்கள் இணைகின்றன. இதில் க்ரூப் அளவு உயர்த்தியது, மெசேஞ்ச் டெலீட் செய்யும் அம்சம் உள்ளிட்டவை அடங்கும்.

அட்மின்களுக்கு கூடுதல் கண்ட்ரோல்:
புதிய அப்டேட் மூலம் அட்மின்கள் யார் க்ரூப்-இல் இணைய முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். இன்வைட் லின்க் அல்லது கம்யுனிட்டியுடன் க்ரூப்-ஐ இணைக்க செய்யும் போது, யார் க்ரூப்-இல் இணைய வேண்டும் என்பதை அட்மின்கள் தீர்மாணிக்கலாம்.
இதோடு ஏதேனும் காண்டாக்ட் பெயரை க்ளிக் செய்தால், எந்த க்ரூப்-இல் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் கொண்டு மற்றவர்களுடன் நீங்கள் இருக்கும் க்ரூப்களை எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.
புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்பட இருக்கிறது. இதுதவிர க்ரூப்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்ற தொடர்ந்து புதிய அப்டேட்கள் வழங்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.