என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜார்கண்ட்"
- 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
- 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது.
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீருக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களை நடந்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில் பண்டிகை காலத்துக்கு பின்னர் தேர்தலை நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையைதேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது வெளியிடுகிறது
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.
- அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பால் பாஜக கலக்கத்தில் உள்ளது
- மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை விமர்சித்து வந்த பாஜக தற்போது ரூட்டை மாற்றியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.கடைசியாகக் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றிய ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சியமைத்தது. 25 தொகுதிகளை பாஜகவும், 16 தொகுதிகளைக் காங்கிரசும் கைப்பற்றியிருந்தன.
இந்நிலையில் நடந்து முடித்த பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காதது, தற்போது நடந்த அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வெளிவந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் உள்ளிட்டவற்றால் பாஜக கலக்கத்தில் உள்ளது.
முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கியத் தலைவர் சம்பாய் சோரனை தங்கள் பக்கம் இழுத்தும் வெற்றி கிடைக்குமா என்பதில் சந்தேகத்துடன் உள்ள பாஜக வர உள்ள தேர்தலுக்கு இலவசங்களை அள்ளி வீசி வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை விமர்சித்து வந்த பாஜக தற்போது தங்கள் கொள்கையையும் தளர்த்தி ரூட்டை மாற்றியுள்ளது.
ஜார்கண்ட்டில் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே பாஜக முந்திக்கொண்டு வெளியிட்ட இலவச அறிவிப்பு வாக்குறுதிகள் கீழ்வருமாறு,
➼18 வயதுக்கு மேலான மகளிருக்கு மாதம் ரூ. 2100 வழங்கும் திட்டம்
➼1 சிலிண்டர் ரூ.500 க்கு வழங்கப்படும்
➼பண்டிகை காலங்களில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர்கள்
➼5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
➼போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை
➼வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம்
உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது.
- ஊருக்குள் புகுந்து மக்களை பிளவுபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த முயலும் அத்தகு தீய சக்திகளை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்
- கோவில்கள் மற்றும் மசூதிகள் மீது இறைச்சித் துண்டுகள் வீசப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மும்முரம் காட்டி வரும் வேலையில் பாஜக தேசிய தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்துக்கு விசிட் அடிக்கத் தொடங்கியுள்ளனர். ஹேமந்த் சோரன் பக்கம் இருந்த சம்பாய் சோரன் சமீபத்தில் பாஜக பக்கம் சாய்ந்தது ஜேஎம்எம் கட்சிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நடக்க உள்ள பிரச்சாரமே வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படும். எனவே எதிரணிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்துது டிஜிட்டல் திரை மூலம் பேரணியில் பேசிய ஹேமந்த் சோரன், பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஜார்கண்டில் பிரச்சாரம் செய்து வருவதை சுட்டிக்காட்டி பாஜக அங்குள்ள இந்து முஸ்லீம் சமூகங்களிடையே சண்டை மூட்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் பெருச்சாளிகளை போல் மாநிலத்துக்கும் ஊடுருவி அழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ஹந்தியா[handia] தாறு [daru] [உள்ளூர் மது வகைகள் ] உடன் ஊருக்குள் புகுந்து மக்களை மயக்கி பிளவுபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த முயலும் அத்தகு தீய சக்திகளை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் அம்மாநிலத்தில் பல பகுதிகளில் கோவில்கள் மற்றும் மசூதிகள் மீது இறைச்சித் துண்டுகள் வீசப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். வியாபாரிகளும் தொழிலதிபர்களும் நடத்தும் பாஜக கட்சி தனது பண பாலத்தின் மூலம் அரசியல் தலைவர்களையும் விலைக்கு வாங்குகிறது என்று சம்பாய் சோரன் பாஜக பக்கம் சென்றதையும் மறைமுகமாக சாடியுள்ளார்.
- ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றினார்
- அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுரை இணை அமைச்சர் சதீஸ் சந்திர தூபேவின் ஷூவை கழற்றி அவரின் கால் சட்டையை மற்றொருவர் சரி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர் சதீஸ் சந்திர தூபே தன்பாத் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றை பார்வையிட சிறப்பு உபகரணங்கள் அணிந்து தயாராகியுள்ளார்.
பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) என்ற அரசின் நிலக்கரி நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றி அவர் அணிந்திருந்த பைஜாமா கால் சட்டையின் கயிறை அட்ஜஸ்ட் செய்து பணிவிடை ஆற்றியுள்ளார்.
அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டங்களை குவித்து வருகிறது. பிசிசிஎல் அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காக இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதாக தன்பாத் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
- சிறுவனின் பெயர் அமித் சிங் என அடையாளம் காணப்பட்டார்.
- பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் சிங்பூமில் நேற்று வீட்டில் தனது படுக்கையில் சென்போனில் கேம் விளையாடியபடி, ரசகுல்லா (இனிப்பு) சாப்பிட்ட 17 வயது சிறுவன் இனிப்புதொண்டையில் அடைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வெளியான தகவல்களின்படி, சம்பவத்திற்குப் பிறகு சிறுவன் சில நிமிடங்களுக்கு மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான். பிறகு, உயிர் இழந்துள்ளான். அந்த சிறுவனின் பெயர் அமித் சிங் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெளி ஊரில் வேலைசெய்துவிட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் மாமா ரசகுல்லா வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
சிறுவன் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே ரசகுல்லாவை சாப்பிட்டுள்ளான். அப்போது, ரசகுல்லா சிறுவனின் தொண்டையை அடைத்துள்ளது. அப்போது, சிறுவன் மூச்சுவிட சிரமப்படுவதைப் பார்த்த அமித் சிங்கின் மாமா ரஸ்குல்லாவை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை.
அதன்பிறகு, சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு மீட்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ரசகுல்லா சாப்பிட்டு உயிரிழந்த சிறுவனின் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்படப் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இந்த தருணத்தை பாஜக அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்பாக ஹேமந்த் சோரன் பயன்படுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வராக இருந்த , ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவர் ஹேமந்த் சோரன் கடத்த ஜனவரி 31-ந்தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இருப்பினும் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் கடந்த ஜூலை 3 அன்று வெளியில் வந்தார். அதனைதொடர்ந்து மீண்டும் அவர் ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று [ஆகஸ்ட் 10] ஹேமந்த் சோரன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படப் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தருணத்தை பாஜக அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்பாக ஹேமந்த் சோரன் பயன்படுத்தியுள்ளார்.
அதாவது, சிறையில் இருந்து வெளிவரும்போது, அதிகாரிகள் தனது கையில் குத்திய கைதி முத்திரையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஹேமந்த் சோரன், இது எனக்கு இடப்பட்ட முத்திரை மட்டுமல்ல, இது தற்போது நமது ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள சவால்களைக் குறிக்கும் முத்திரை என்று பதிவிட்டுள்ளார்.
आज अपने जन्मदिन के मौक़े पर बीते एक साल की स्मृति मेरे मन में अंकित है - वह है यह कैदी का निशान - जो जेल से रिहा होते वक्त मुझे लगाया गया। यह निशान केवल मेरा नहीं, बल्कि हमारे लोकतंत्र की वर्तमान चुनौतियों का प्रतीक है।जब एक चुने हुए मुख्यमंत्री को बिना किसी सबूत, बिना कोई… pic.twitter.com/TsKovjS1HY
— Hemant Soren (@HemantSorenJMM) August 10, 2024
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலரை அரசியல் ஆதாயங்களுக்காக பலரை தேர்தலின்போது திட்டமிட்டு சிறையில் அடைந்ததாகவும் இதற்கு ஜனநாயக அமைப்பின் அங்கங்களுக்கான அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றைத் தவறாக பயன்படுத்தியாகவும் ஆளும் மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.
- 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது. இந்த ரெயிலானது இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இந்த ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் இந்த விபத்து நடந்து இருப்பது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 6 நபர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சிக்கிய 80 சதவீத பயணிகள் அருகில் உள்ள சக்கரதர்பூர் ரெயில் நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்க ரயில் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயிலின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. 5 ரெயிலின் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விவரங்கள்
1 - 22861 ஹவுரா - தித்லாகார்க்- கண்டாபஞ்சி எக்ஸ்பிரஸ்
2- 08015/ 18019 கராக்பூர்- ஜார்கிராம்- தன்பந்த் எக்ஸ்பிரஸ்
3- 12021/ 12022 ஹவுரா- பர்பில் - ஜன் ஷடப்தி எக்ஸ்பிரஸ்
4 -18109 டாடாநகர் - இத்வாரி எக்ஸ்பிரஸ்
5- 18030 ஷலிமார் - LTT எக்ஸ்பிரஸ்
- ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.
- விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.
இந்த ரெயிலானது இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இந்த ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் இந்த விபத்து நடந்து இருப்பது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 6 நபர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமுற்றவர்களை மீட்ட அதிகாரிகள் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் ரெயிலின் பத்து பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
- நாட்டின் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கூறியுள்ளது கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
- நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியை கூட ராஜினாமா செய்துவிடுகிறேன்
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நேற்று பீகார் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கூறியுள்ளது கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நேற்று நடந்த மக்களவை பட்ஜெட் கூட்டத்தில் பேசிய அவர், வங்காளதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களால், ஜார்கண்ட்,மேற்கு வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.
வங்காளதேசத்தில் இருந்து வந்து பழங்குடியின சமூகங்கள் அதிகம் வாழும் குடியேறிய இஸ்லாமியர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து கொள்வதால் , இந்து மதத்தினர் வாழும் கிராமங்கள் முற்றிலுமாக காலியாகும் சூழல் உள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம்.
நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியை கூட ராஜினாமா செய்துவிடுகிறேன். எனவே வங்க தேசத்தினர் நாட்டுக்குள் நுழையும் பகுதிகளான மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா, முருஷிதாபாத் மாவட்டங்களையும், பிகாரில் உள்ள கிஷன்கஞ்ச், ஆராரியா, கதிஹார் மாவட்டங்களையும், ஜார்கண்ட் பகுதிகளையும் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றால் இந்துக்கள் மறைந்துபோவார்கள். மேலும் வெளிநாட்டினர் ஊடுருவலைத் தடுக்கும் தேசிய குடிமைகள் பதிவேடான NRC யை நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
- கூடுதல் செயலாளர்கள் ரூ.30,000 வரை மொபைல் போன்கள் வாங்கலாம்.
- மாதத்திற்கு ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மொத்தம் 30 புதிய முன்மொழிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதில், ஜார்கண்ட் அரசின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ரூ.60,000 வரையிலான மொபைல் போன்களை வாங்கலாம் என்றும் மாதத்திற்கு ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற முன்மொழிவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்பு செயலாளர் நிலை அதிகாரிகள் ரூ.45,000 வரை மொபைல் போன்களை வாங்கலாம் மற்றும் மாதம் ரூ 2,000 வரை ரீசார்ஜ் செய்யலாம் என்றும் கூடுதல் செயலாளர்கள், கூடுதல் இயக்குநர்கள் ரூ.30,000 வரை மொபைல் போன்கள் மற்றும் 750 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்யலாம் என்று அமைச்சரவை செயலாளர் வந்தனா தாடெல் கூறினார்.
- பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
- ஜார்கண்டில் ஒரு பாலமும் இடிந்து விழுந்துள்ளது.
நாடு முழுவதும் பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் தற்போது தொடர்கதையாகியுள்ளது.
பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. ஜார்கண்டில் ஒரு பாலமும் இடிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் மேலும் ஒரு பாலம் இடிந்து விழும் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த வெள்ளிக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
உத்தரகாண்டில் பெய்துவரும் கனமழையால் கங்கை, அலக்நந்தா, பாகீரதி, சாரதா, மந்தாகினி, கோசி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் உத்தரகாண்டில் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை முதலவர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.
- முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரனையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் கட்சியின் இந்த முடிவில் முதலமைச்சர் சாம்பை சோரனுக்கு உடன்பாடு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்