என் மலர்
நீங்கள் தேடியது "புகையிலைப்பொருட்கள்"
- மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ராகவன் தலைமையில் போடி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் பூதிப்புரம், மீனாட்சிபுரம் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு விடுதிகள் டீக்க டைகள், பெட்டிக்கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு கைப்பற்ற ப்பட்டது.
சுமார் 1½ கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்ற ப்பட்டது. மேலும் சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இது மட்டுமின்றி பல்வேறு பெட்டிக்கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் தரமற்ற எண்ணையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டு காலம் முடிந்து விற்பனைக்கு தரமற்ற நிலையில் வைக்கப்பட்டி ருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
இதுபோன்ற பொரு ட்களை விற்ற வியாபாரி களிடம் இனியும் இது போன்று தொடர்ந்து நடந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து ரூ.9 ஆயிரத்து 500 வரை அபராதம் வசூலித்தனர்.
கோவை செல்வபுரம் ராஜேந்திரா நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். குறிப்பிட்ட இடத்தை சோதனை செய்தபோது 2 ஆயிரத்து 400 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் இருந்தன.
இதனை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த செல்வபுரத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 49), திண்டுக்கல் வேடச்சந்தூரை சேர்ந்த சரவணன் (35). ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சின்னதம்பி (46), சிவக்குமார் (36) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2,400 கிலோ புகையிலைப்பொருள் மற்றும் அதை கடத்த பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.