என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட கொரியா"

    • அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
    • டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி.

    விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்று்ம தென் கொரியா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

    ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் மேற்பார்வையிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை சோதனை அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி முகாமின் இறுதநாளில் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து 11 நாட்கள் வரை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டு ராணுவ பயிற்சி குறித்து பேசிய வட கொரிய செய்தி தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

    • கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
    • குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது,

    பியாங்யாங்:

    சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும்.

    இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

    • கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார்.
    • பெயர் மாற்றம் தொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது

    உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா. சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் பல விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. செய்திகள் கூட அரசின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்படும். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் உலக தொழில்நுட்பத்தை அறியாத மக்களாக உள்ளனர்.

    இந்தநிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாருக்கும் வைக்கக்கூடாது என வினோத தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். கிம் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வட கொரிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பெயரை மாற்ற வேண்டிய சூழலில் லட்சக்கணக்கான வடகொரியர்கள் உள்ளனர்.

    வடகொரிய தலைவர் கிம்மின் மூன்று குழந்தைகளில் இந்த மகளை மட்டுமே அவர் பொதுவெளியில் காட்டியிருக்கிறார். கிம் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்றும், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை.
    • வட கொரியாவில் 70,000 கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வட கொரியாவில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் வடகொரிய அரசு நாத்திக அரசாக உள்ளது. மத உரிமைகள், மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன. ஆனால், வட கொரிய அரசு எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை. அதேசமயம், மத தண்டனைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரியா அரசு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

    சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-

    வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அவனது பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    மதப் பழக்கவழக்கங்கள் மற்றும் பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009-ல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளனர். ஷாமனிச ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 90 சதவீத ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பொறுப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை. வட கொரியாவில் நீண்ட காலமாக மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மற்ற நாடுகளுடன் அமெரிக்காவும் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்ட ராக்கெட் நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் விழுந்தது.
    • சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது.

    நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

    அதில், உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.

    வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

    வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், எதிர்பார்த்த சேதம் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

    முன்னதாக வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் தகவலுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான், தனது எல்லைக்குள் ராக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. இந்த தடையை மீறியே வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்து இருக்கிறது.

    • அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
    • இதற்கு பதிலடி கொடுக்கும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    அவ்வகையில், வடகொரியா இன்று கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து விரிவான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இன்று வட கொரிய-தென் கொரிய எல்லைக்கு அருகே மிகப்பெரிய அளவில் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    • கப்பல் மூலம் வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்தும்.
    • நீர்மூழ்கிக் கப்பல், சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

    உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    அவ்வகையில், வடகொரியா நேற்று தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தென் கொரியாவுக்கு சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

    யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது சுமார் 2,500 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டு ஏவுகனை ஏவலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த போர்க்கப்பல் அனுப்பியதன் மூலம், அமெரிக்கா மற்றும் தென் கொரிய கடற்படைகள் தங்களது சிறப்பு செயல்பட்டுத் திறனை மேம்படுத்தவும், வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்துவதற்காகவும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென்கிழக்கு துறைமுக நகரமான பூசானை வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த கப்பல் தென்கொரிய கடற்பரப்பில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

    • உளவு செயற்கைக்கோளை ஏவும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது
    • தோல்விக்கான காரணம் குறித்து அதிபர் ஆலோசனை நடத்தினார்

    உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில பதில் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த மே மாதம், தங்கள் நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை தாங்கிய ராக்கெட் ஒன்றை வட கொரியா செலுத்தியது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த ராக்கெட் செயலிழந்தது.

    அமெரிக்காவையும், தென்கொரியாவையும் உளவு பார்க்கும் முயற்சியாக செயல்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை தோல்வியடைந்தத்து, வட கொரியாவிற்கு இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டதிபரும், சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும் தலைவருமான கிம் ஜாங் உன் இதை மிகப்பெரிய தோல்வி நடவடிக்கையாக உணர்வதாகவும், இதனால் மிகவும் அதிருப்தியிலுள்ளார் எனவும் அங்கிருந்து வரும் செய்தி குறிப்பொன்று தெரிவிக்கிறது.

    இந்த செய்திகளிலிருந்து மேலும் சில விவரங்கள்:-

    அனைத்து உயரதிகாரிகளும் கலந்து கொண்ட ஆளும் கட்சியின் 3-நாள் சந்திப்பில், இந்த தோல்வி விரிவாக அலசப்பட்டிருக்கிறது. இதில் அதிபர் கிம் கலந்து கொண்டிருக்கிறார்.

    ராக்கெட் செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக, இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவும் விமர்சிக்கப்பட்டுள்ளார்கள். தவறுகளுக்கான காரணங்களை கண்டறிந்து, தோல்வியிலிருந்து கற்க வேண்டிய பாடங்களையும் விரைவாக கற்று, மீண்டும் அடுத்த ஒரு ஏவுகணையை செலுத்தியாக வேண்டும் என அவர்கள் நிர்பந்தப்பட்டுள்ளார்கள் என தெரிகிறது.

    இருப்பினும் வடகொரியாவின் உளவுத்துறை, ராக்கெட் தோல்விக்கு காரணம் என்னவென்று கண்டறிவதற்கு சில வாரங்களுக்கு மேல் ஆகலாம் என தெரிவித்திருக்கிறது.

    அடுத்து ராக்கெட் எப்பொழுது விண்ணில் செலுத்தப்படும் என தெரியவில்லை. வட கொரியாவை கண்காணிக்கும் அமைப்புகள், இந்த தோல்விக்காக, எந்த அதிகாரியும் அல்லது விஞ்ஞானியும் பணி நீக்கமோ அல்லது தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கோ ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றன.

    அமெரிக்க தலைமையிலான வட கொரிய விரோத வெறுப்பு நடவடிக்கைகளை சமாளிப்பதற்கான எதிர்வினையாக அதிபர் கிம், பல உயர் தொழில்நுட்ப ராணுவ சொத்துக்களை உருவாக்கவும், ஆயுதங்களை சேமித்து வைத்துக் கொள்ள போவதாக உறுதியளித்துள்ளார்.

    பலமுனை- ஏவுகணைகள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்றும் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகமாக செல்லும், (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகள் ஆகியவை அவர் சேகரிக்க விரும்பும் மற்ற ஆயுத அமைப்புகளாகும்.

    2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, வடகொரியா, 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இவற்றில் சில, உளவு ஏவுகணை சம்பந்தமாகவும், கிம்மின் விருப்பப்பட்டியலில் உள்ள சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்குவது தொடர்பாகவும் உருவாக்கப்பட்டவையாகும்.

    இந்த சந்திப்பின்போது, வடகொரிய அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் வல்லமை கொண்ட பொலிட்பீரோ உறுப்பினர்கள், இந்த பிராந்தியத்தில் வட கொரியாவின் போட்டி நாடுகளின் பொறுப்பற்ற போர் நகர்வுகளால் தென்கொரிய- அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளை குறிப்பிட்டு மிகவும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை விரிவாக ஆய்வு செய்திருக்கின்றனர்.

    அமெரிக்க எதேச்சதிகாரத்தை எதிர்க்கும், வடகொரியாவின் நேச நாடுகளுடன் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் போலிட்பீரோ விவாதித்துள்ளது.

    வட கொரியாவின் அதிகரிக்கும் ராணுவ பலம் பெருக்கும் நடவடிக்கைகளுக்கும், அணுஆயுத பரிசோதனைகளையும் எச்சரிக்கும் விதமாக அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து எதிர்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால், அது வட கொரியாவின் அழிவில் முடியும் என எச்சரித்துள்ளது.

    ரஷிய நாட்டுடன் உறவை வலுப்படுத்த வேண்டி, அந்நாடு உக்ரைனை ஆக்ரமித்ததையும் வட கொரியா ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வர்த்தகம், தொழில்நுட்பம், பிராந்திய முதலிடம் போன்ற விஷயங்களில் அமெரிக்காவோடு எதிர்ப்பை கடைபிடிக்கும் சீனாவோடும் வட கொரியா உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக விளங்கும் சீனாவும், ரஷியாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, வட கொரியாவின் அணுஆயுத பரிசோதனைகளுக்காக அதன் மீது அமெரிக்கா கொண்டு வர நினைக்கும் தடை முயற்சிகளுக்கு முட்டுகட்டை போடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துவதாக தகவல்.
    • வடகொரியாவிற்கு உயர்தர மதுபானங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ.250 கோடி செலவிடுகிறார்.

    ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தான் என படித்திருப்போம்.

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள வடகொரியாவில், மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் நேரத்தில், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தன் வாழ்வில் இன்பங்களை அனுபவிப்பதில் எல்லையற்ற ஈடுபாட்டுடன் உலகிலேயே சிறந்தவற்றை பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தும் அவர் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியைத்தான் உண்கிறார்.

    பிரிட்டனின் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறுகையில், "கிம் ஜாங் உன் ஒரு மது பிரியர். அதுலும் அவர் பிளாக் லேபிள் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஹென்னெஸ்ஸி பிராந்தி ஆகியவற்றையே விரும்பி பருகுகிறார். இதன் விலை, பாட்டில் ஒன்றுக்கு சுமார் ரூ.6 லட்சம் ($7000) ஆகும்" என கூறியிருக்கிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சீன பொது சுங்க நிர்வாகத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட வர்த்தக தரவுகளின்படி, 40 வயதாகும் கிம், வடகொரியாவிற்கு உயர்தர மதுபானங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 250 கோடி ($30 மில்லியன்) செலவிடுகிறார்.

    கிம், மதுவகைகளை தவிர மிகச்சுவையான உணவு வகைகளையும் விரும்பி உண்கிறார். பார்மா ஹாம், (இத்தாலியின் பார்மா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு வகை உணவு) மற்றும் சுவிஸ் எமென்டல் சீஸ் ஆகியவற்றையே ரசித்து உண்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கிம் மற்றும் அவரது தந்தை, இருவருமே கோப் ஸ்டீக்ஸ் (Kobe steaks) எனப்படும் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகவும் விரும்பப்படும் மாட்டிறைச்சி மற்றும் கிறிஸ்டல் ஷாம்பெயின் (Cristal champagne) ஆகியவற்றை விரும்பி எடுத்துக் கொள்வார்கள்," என அவரது முன்னாள் சமையல்காரர் கூறியிருக்கிறார்.

    கிம் குடும்பத்திற்காக பிரத்தியேகமாக பீட்சா தயாரிக்க 1997ல் இத்தாலிய சமையல்காரர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தவிர, விலையுயர்ந்த பிரேசிலியன் காபியைத்தான் கிம் அருந்துகிறார். இதற்காக அவர் ஒரு வருடத்தில் சுமார் ரூ. 8 கோடி ($967,051) செலவழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மென்மையான தங்கப்படலத்தில் மூடப்பட்டிருக்கும் எவ்ஸ் ஸெயின்ட் லாரன்ட் (Yves Saint Laurent) வகை கருப்பு சிகரெட்டுகள்தான் அவர் விரும்பி புகைக்கிறார்.

    2014ம் ஆண்டு யூ.கே. மெட்ரோ (UK Metro) தெரிவித்த ஒரு செய்தியில் கிம் தொடர்ந்து "பாம்பு ஒயின்" உட்கொள்வதாக கூறியது. இது ஆண்மையை அதிகரிக்கும் என்றும் குழந்தைபேறுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.

    வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம், "அதிக மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல்" ஆகியவற்றில் ஈடுபடுவதாகவும், அவரது எடை 136 கிலோ தாண்டியுள்ளது என்றும் தென்கொரிய உளவுத்துறை அறிக்கைகள் வந்த பின்னர் கிம் ஜாங் உன்னின் ஆடம்பரமான உணவுமுறை பற்றிய செய்திகள் வந்துள்ளன.

    மார்ல்போரோ சிகரெட்டுகள் (Marlboro cigarettes) மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சோல்பிடெம் (zolpidem) போன்ற மருந்துகள் உட்பட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கிம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏவப்பட்ட ஏவுகணையின் வகையை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த ஏவுதல் நடப்துள்ளது.

    ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்குக் கடலில் வட கொரியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென் கொரியா தெரிவித்துள்ளது.

    வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அதிகரித்து வரும் பதட்டங்களை எதிர்கொள்ளும் வகையில், சியோல் மற்றும் வாஷிங்டன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானின் கடலோர காவல்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென் கொரியாவின் ராணுவம் ஏவப்பட்ட ஏவுகணை வகையை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
    • இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    சியோல்:

    உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தி வரும் நிலையில், தென் கொரியாவுக்கு சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்க்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும்.

    இந்நிலையில், வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

    • அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது
    • அமெரிக்க அணுஆயுத கப்பல்கள் தென்கொரியா கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன.

    மேலும், அமெரிக்கா- தென்கொரிய ராணுவம் இணைந்து போர் பயிற்சியை கடந்த 21-ந்தேதி தொடங்கியுள்ளது. இந்த போர் பயிற்சி 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. இது வடகொரியாவை கோபத்திற்குள்ளாக்கியது. இதனால் அடிக்கடி ஆயுத தொழிற்சாலைகளில் காணப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நவீன ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என நினைக்கிறார். இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியெடுக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார். கப்பல் படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது உரையாற்றிய கிம் ஜாங் உன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்கா- தென்கொரியா- ஜப்பான் உச்சி மாநாட்டினை தொடர்ந்து, அமெரிக்கா அணு ஆயுதம் தொடர்பான மூலோபாய சொத்துகளை (போர்க்கப்பல் உள்பட) குவித்து, பயிற்சியில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்டார்.

    இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் வடகொரியா, தனது உளவு செயற்கைக்கோளை 2-வது முறையாக ஏவியது. பின்னர், இந்த முறையும் தோல்வியடைந்ததாக தெரிவித்திருந்தது.

    ×