search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி- தென் கொரியாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா
    X

    வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி- தென் கொரியாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா

    • கப்பல் மூலம் வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்தும்.
    • நீர்மூழ்கிக் கப்பல், சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

    உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    அவ்வகையில், வடகொரியா நேற்று தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தென் கொரியாவுக்கு சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

    யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது சுமார் 2,500 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டு ஏவுகனை ஏவலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த போர்க்கப்பல் அனுப்பியதன் மூலம், அமெரிக்கா மற்றும் தென் கொரிய கடற்படைகள் தங்களது சிறப்பு செயல்பட்டுத் திறனை மேம்படுத்தவும், வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்துவதற்காகவும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென்கிழக்கு துறைமுக நகரமான பூசானை வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த கப்பல் தென்கொரிய கடற்பரப்பில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

    Next Story
    ×