என் மலர்
நீங்கள் தேடியது "உத்தரப்பிரதேசம்"
- செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
- பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளனர்.
அந்த பெண் வீடியோ எடுக்கும்போது, செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. செயின் பறிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்று நடந்த செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர்
- பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்
உத்தரப்பிரதேசம் மாநிலம் லகிம்பூர் கேரி பகுதியில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த 17 வயது சிறுமியை கடத்தி 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அமன் என்கிற 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர்.
- சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார் போலே பாபா
- போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக 88,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட நிகழ்ச்சியில் 2.5 லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேற மற்றோரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க எதிர்புறமாக முன்னேறியதால் இந்த விபத்து நிகழ்ச்த்துள்ளது என்று தெரியவந்தது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா தனது காரில் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுக்கர் என்ற நபர் இன்று போலீசிடம் சரணடைந்துள்ளார். போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
- இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது.
- இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலெ பாபா ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர் போன்றோர் தங்கள் வறுமையையும் மற்ற அனைத்துத் துன்பங்களையும் போக்குவதற்கு, ஹத்ராஸின் போலே பாபா போன்ற பல பாபாக்களின் மூடநம்பிக்கையால் தவறாக வழிநடத்தப்பட்டு, தங்கள் துயரத்தையும் துன்பத்தையும் அதிகரிக்கக் கூடாது.
மாறாக, பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காட்டிய பாதையில் ஆட்சியைப் பிடித்து தங்கள் தலைவிதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது. ஹத்ராஸ் சம்பவத்தில், குற்றவாளியான போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலே பாபா மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிறகு போலே பாபா தலைமறைவாக இருந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
"ஹத்ராஸ் ஆன்மிக கூட்டத்தில், தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, "ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல. சமூக விரோதிகளின் சதி செயல்" என போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
- இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்.
- இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் - மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக்கூறி மணப்பெண் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
- ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பில்பூர் அருகே ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் வெளியே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொராதாபாத் கோட்டத்தின் கீழ் வரும் பில்பூர் நிலையத்திற்கு அருகே ஹவுரா- அமிர்தசரஸ் மெயிலின் பொதுப் பெட்டியில் இன்று சிலர் தீயை அணைக்கும் கருவியை இயக்கியுள்ளனர்.
இதனால், அந்த பெட்டி முழுவதும் புகை கிளம்பியுள்ளது. புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, பயணிகள் சிலர் பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர். இதில், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
பயணிகள் அவசரகால நிறுத்தத்திற்கான சங்கிலியை இழுத்துவிட்டு குதித்ததால், ரெயில் மெதுவாக செல்லும்போது பயணிகள் பீதியில் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உத்தரப்பிரதேசத்தில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் செனறனர்.
- உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல.
பிரேக் டவுன் ஆகிவிட்ட பேருந்தை பயணிகள் பலரும் தள்ளி செல்லும் காட்சியை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் பழுதாகி நின்ற ரெயிலை யாரவது தள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல. இந்தாண்டு மார்ச் மாதம் அமேதி மாவட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கான ரெயில் சென்றுகொண்டிருக்கும்போது நடுவழியிலேயே பழுதாகி நின்றதால் தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரெயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்றுள்ளனர்.
- சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
- திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் வரதட்சணை தராததால் மீனா என்ற இப்பெண்ணை, அவரது கணவர் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பைகேடா கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், அப்பாச்சி பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். ஆனால் மீனாவின் குடும்பத்தினரால் இந்த வரதட்சணையை கொடுக்க முடியவில்லை.
வரதட்சணை தொடர்பாக கணவன் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் கோவத்தில் மீனா அப்பா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்த சுந்தர் மனைவியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இறுதியாக மீனா சமாதானம் ஆனதால் நேற்று இரவு தனது வீட்டிற்கு மனைவியை அவர் அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் மீண்டும் வரதட்சணை தொடர்பாக மனைவியிடம் சுந்தர் சண்டையிட்டுள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் மனைவியின் தலையை கட்டையால் தாக்கி கழுத்தை நெரித்து சுந்தர் கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுந்தர் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுந்தரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், மீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.
ஆக்ராவில் நமையில் பெய்த கனமழையால் தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தாஜ்மகாலின் மேற்கூரையில் செடி வளர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றுலா பயனை ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து, உலக அதிசயமான தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல், "கடந்த ஆகஸ்ட் மாதமே தூணில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது. இந்த செடி 15 நாட்களுக்கு முன்பு உருவாகியுள்ளது. இது விரைவில் நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்
- இந்த வைரல் வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது சட்டை இல்லாமல் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒன்று ஒலிக்கிறது.
இந்த வைரல் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமேதி போலீசார் தெரிவித்தனர்.
- பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும்.
- வேலைவாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி இன்று சுமார் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மேலும், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2,870 கோடி மதிப்பில் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் புதிய முனைய கட்டிடம் மற்றும் தொடர்புடைய பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும். அவ்வாறு அதிகாரம் பெறும்போது, சமூகமும் வளர்ச்சியடையும்.
பெண்களுக்கு பாஜக அரசு புதிய பலத்தை அளித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்த பாடுபடுகிறோம்.
மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளோம். நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களே அரசின் முதன்மையான முன்னுரிமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.