search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்பநிலை"

    • ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே உள்ளது. மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் பகுதிகளில் இருந்து வறண்ட காற்றின் வருகையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெப்பநிலை ஒரு டிகிரி உயரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயரும் மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்து உள்ளதே இதற்கு காரணம். ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.

    சென்னை மண்டல வானிலையும் பெரும்பாலும் வறண்டதாகவே உள்ளது என்று இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

    ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் வானிலையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடமேற்கு பகுதிகள் கடல் காற்றுடன் ஒன்றிணைந்து வெப்ப சலனத்தை தூண்டும் என்பதால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.
    • ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.

    உலகளவில் நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் நடந்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்லஸ் டார்வின் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடந்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.




     


    முக்கியமாக மத்திய ரஷியா, வடக்கு சீனா மற்றும் வட அமெரிக்கா, அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழ்தலுக்கு நிலத்தடி நீர் இன்றியமையாததாக உள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.


     



    நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வரும் நிலையில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு அதன் பாதுகாப்பு தன்மையை சீர்குலைக்கக்கூடும். 2099 வாக்கில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 59 முதல் 588 மில்லியன் மக்கள் அருந்தும் நிலத்தடி நீர் அதிக வெப்பநிலை கொண்டதாக மாறியிருக்கும். அதிக வெப்பம் கொண்ட நிலத்தடி நீரில் நோய்க்கிருமிகள் வளரும் சாத்தியக்கூறுகளும் இருப்பதால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும்.

    ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவை பாதிக்கப்படும். அதிக வெப்பநிலை கொண்ட நீரில் கரைந்தநிலை ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டுள்ள நதிகளில் உள்ள மீன்கள் உயிர்வாழமுடியாது.

    இதுபோன்ற பல்வேறு ஆபத்துகளை உள்ளடக்கிய நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிப்பு புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்ற விளைவுகளை மனிதர்கள் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்துகிறது. 

    • வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.
    • சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெப்ப தாக்கத்தை தாங்க முடியவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை வீசி வருகிறது. வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.

    கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் அதாவது 110.3 பாரன்ஷீட்டர் டிகிரி வெயில் பதிவானது. ஈரோடு, திருச்சி, வேலூர், திருத்தணி, திருப்பத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் 104, 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் உள்ளது.

    வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை தருகிறது. ஆனால் தொடர்ந்து வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அநேக இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் ஓரிரு இடங்களில் மிக மிக அதிமாகவும் வெயில் பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    நாளை ஒரு சில இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கோடை மழை ஒரு சில பகுதிகளில் பெய்ய தொடங்கியதால் நாளை முதல் 10-ந் தேதி வரை வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.

    அதேநேரத்தில் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக வெப்பநிலை இருக்கும். இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் சுட்டெரித்தது.

    பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. அதிலும் கடலோர மாவட்டங்களில் அறவே மழை இல்லாததால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெப்ப தாக்கத்தை தாங்க முடியவில்லை.

    • அடுத்த 3 நாட்களில் 40 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம்.
    • பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அதனை மிஞ்சும் வகையில் நாட்டின் பல இடங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கேரளாவிலும் வழக்கத்தை விட வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்த வெயிலின் காரணமாக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது மாநிலம் முழுவதும் சுருண்டு விழுந்து 9 பேர் பலியானார்கள். இந்த நிலையில் நேற்று மேலும் ஓருவர் வெயிலின் கோரப் பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதனால் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த சூழலில் வெப்பத் தின் தாக்கம் வரும் நாட்க ளில் இன்னும் அதிகமாக இருக்கும் என மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெப்பச் சலனம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் 40 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். பாலக்காட்டில் வெப்பநிலை 41 டிகிரியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெப்ப அலையின்போது சூரிய ஓளி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மரணம் கூட ஏற்படலாம் என்பதால் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம்.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி, மதுரை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 4 நாட்கள் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். மேலும் இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெயிலின் அளவு அதிக ரிக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரிக்கு மேல் இருக்கும். சேலம், ஈரோடு, தர்மபுரி, மதுரை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்கும் பழங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி, கிர்னி பழம், வெள்ளரி, நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வந்து குவிந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தர்பூசணி ஒரு கிலோ ரூ. 10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கிர்ணி பழம் கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையும், சில்ல ரையில் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளரி பிஞ்சு ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படு கிறது. 2 நுங்கு ரூ.10-க்கு விற்கப்படுகிறது. மேலும் கடைகளில் பழச்சாறுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    • உறைபனியால் வாகனங்களை இயக்குவதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
    • பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது.

    இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை பகல் நேரமே இரவாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    மாலையில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. இப்படி தினந்தோறும் காணப்படும் உறைபனியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான உறைபனி காணப்பட்டது. காந்தல், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    உறைபனி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரைகள், குதிரை பந்தய சாலையில் உள்ள புல் தரைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், புல் தரைகள் மீதும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புற்கள் இருந்த தடமே மறைந்து வெள்ளை கம்பளிஆடை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளித்தன. இதுதவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்கள் மீதும் உறைபனி கொட்டியிருந்தது. இதனை வாகன உரிமையாளர்கள் அகற்றினர். உறைபனியால் வாகனங்களை இயக்கு வதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.

    காஷ்மீரில் தான் அதிகளவு குளிர் காணப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊட்டியிலும் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டி தற்போது மினி காஷ்மீராகவே மாறி காணப்பட்டது. பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் கடும் குளிரும் காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பொதுமக்கள் வீட்டிற்கு ள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள்ளும் குளிர் வாட்டியதால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்ட பணிக்கு செல்வோர் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர். சில இடங்களில் பொது மக்கள், ஆட்டோ, சுற்றுலா வாகன டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

    மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதலே பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கின்றனர். தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், தேயிலை, மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
    • வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் நீர்பனியின் தாக்கம் தொடங்கி, பின்பு உறைபனியின் தாக்கம் தலைதூக்க ஆரம்பிக்கும்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் உறைபனி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூரில் பனியின் தாக்கம் வெகுவாக அதிகரித்து உள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று காலை 2.5 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீர்ப்பனி மற்றும் உறைபனியின் தாக்குதல் ஒருபக்கம் நீடித்து வரும் நிலையில் இன்னொருபுறம் பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக உள்ளது. இதனால் உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

    எனவே ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல்தரைகளிலும் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியே தற்போது வெள்ளை கம்பளி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்தது. மேலும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து காணப்படுகிறது.

    எனவே வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா, லவ்டேல் பட்பயர், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் பச்சைபசேல் என காணப்படும் புற்கள் மீதும் உறை பனி படர்ந்து காணப்பட்டது.

    குன்னூரில் வழக்கத்தை விட தற்போது கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ள தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    குன்னூரில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து உள்ளனர். இதனால் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    அதிகாலை நேரத்தில் தேயிலை பறிப்பதற்காக தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    நீலகிரிக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் நடு நடுங்க வைக்கும் உறைபனி காரணமாக ஹோட்டல் மற்றும் காட்டேஜ்களில் முடங்கிப் போய் உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் நீர்ப்பனி, உறைபனி என சீதோசன நிலை மாறி மாறி காணப்படுவதால் உள்ளூர் வாசிகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    • உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
    • சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த மாதங்களில் நீர்ப்பனிப்பொழிவு அதிகரித்து, பின்னர் உறைபனியின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டும்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதன்படி தற்போது ஊட்டியில் உறைபனி மற்றும் நீர்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    இன்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி தீர்த்தது. இதனால் தாவரவியல் பூங்காவில் பிரதானமாக அமைந்து உள்ள புல்தரைகள் மற்றும் ஊட்டி குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் இருக்கும் புல்தரைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தற்போது வெள்ளை கம்பளி போர்த்தியது போல வெண்மையாக காட்சி அளிக்கிறது.

    மேலும் சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டியில் தற்போது வழக்கத்தை விட கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அங்கு இன்று காலை குறைந்தபட்ச அளவாக 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனியுடன் தற்போது கடுங்குளிரும் நிலவி வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் வீட்டின் முன்புறம் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    பொங்கல் தொடர்விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள், அதிகாலையில் நிலவும் கடுங்குளிரால், வெளியில் சென்று பார்க்க முடியாமல் விடுதிகளுக்குள் முடங்கி உள்ளனர். நீலகிரியில் உறைபனி கொட்டி தீர்த்து வருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து உள்ளது.

    • கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
    • உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒருமாதம் நீர்ப்பனி விழும். தொடர்ந்து உறைபனி கொட்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    இதுபோன்ற நேரங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இம்முறை உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. மேலும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைபனி விழத்தொடங்கி உள்ளது.

    இன்று ஊட்டியின் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 7.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக உள்ளது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, சூட்டிங்மட்டம், காமராஜ்சாகர் அணைக்கட்டு மற்றும் எச்.பி.எப் ஆகிய பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக காணப்பட்டது.

    மேலும் பனிப்பொழிவு, குளிரால் அதிகாலை நேரங்களில் தேயிலை-காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். எனவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலைநேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒரு மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து உறைபனி விழும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற சமயங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசிற்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இந்த முறை உறைபனி அதிகம் விழவில்லை. அதேசமயம் கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வேளையிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது.

    அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்பிஎப் போன்ற பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.

    பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், நீர்நிலை பகுதிகளில் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி இருந்தது. இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி உள்ளது.

    கடுமையான குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் மாலை நேரங்களிலேயே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    • அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 4-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • ஜூன் 9-ல் அதிகபட்சமாக 1.69 செல்சியஸ் வெப்பநிலை
    • உலகம் ஒரு பருவநிலை மாற்ற பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாலும் அதற்கு உலக நாடுகள் ஆற்ற வேண்டிய எதிர்வினை போதுமானதாக இல்லை

    காப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் (C3S) துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் தெரிவித்திருப்பதாவது:-

    உலகளவில் வெப்பம் ஜூன் மாதம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது. எல் நினோ காலக் கட்டம் தொடர்வதால் 2023-ம் வருடத்தை விட 2024-ம் வருடம் மிக வெப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    உலகளாவிய காலநிலை எவ்வளவு வெப்பமாக இருக்கிறதோ, சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களும் நிகழ்வுகளும், தீவிரத்திலிருந்து மேலும் தீவிரமாக மாறலாம். புவி வெப்பமடைதலின் அளவிற்கும், தொடர் மற்றும் தீவிர நிகழ்வுகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஐரோப்பாவின் காப்பர்நிகஸ் அமைப்பு தெரிவித்திருப்பதாவது:-

    இந்த வருடத்தின் ஜூன் மாத முதல் சில நாட்களிலேயே, உலகளாவிய சராசரி வெப்பநிலையானது, இதுவரை பதிவான ERA5 தரவுப் பதிவுகளின்படி, கணிசமான அளவு வித்தியாசத்தில் அதிகமாக இருந்தது. தரவுகளின்படி, தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை, ஜூன் 7-லிருந்து ஜூன் 11-க்கு இடைபட்ட காலத்தில் 1.5 செல்சியஸ் வரம்பின் அருகாமையிலோ அதற்கு மேலோ இருந்துள்ளது.

    மேலும், ஜூன் 9 அன்று அதிகபட்சமாக 1.69 செல்சியஸை தொட்டது. இந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில், உலகளாவிய சராசரி தினசரி வெப்பநிலை, அதே நாட்களில் முந்தைய பதிவுகளை விட 0.4 செல்சியஸ் வெப்பமாக இருந்தது.

    ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிகஸ் பிரிவின் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையில், ஜூன் மாத தொடக்கத்தில் உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை முதல் முறையாக தொழில்துறை காலகட்டங்களுக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் (2.7 ஃபாரன்ஹீட்) உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

    உலக-சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அடிக்கடி 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை மீறுவதாலும், அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் ஒட்டுமொத்த விளைவுகள் தீவிரமடையும் என்றும் இதனை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்பது அவசியம்.

    1.5 செல்சியஸ் வரம்பின் அருகாமையில் கடந்து சென்ற சில நாட்கள், மூன்று வருட, "லா நினா" பருவநிலை கட்டமாக வருகிறது. இது, எதிர்மாறாக, "எல் நினோ" பருவநிலை காலகட்டத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இதன் மூலம் மற்றொரு அரை டிகிரி அல்லது அதற்கு மேலும் சராசரி வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இதே பிரச்னைக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வியாழனன்று பேசும்பொழுது:-

    உலகம் ஒரு பருவநிலை மாற்ற பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாலும் அதற்கு உலக நாடுகள் ஆற்ற வேண்டிய எதிர்வினை போதுமானதாக இல்லை. இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை, தற்போதிருக்கும் காலநிலைக் கொள்கைகளால், ஐ.நா.வின் இலக்கான 1.5 டிகிரி செல்சியஸை விட இரண்டு மடங்கு அதிகமாகலாம். தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட சராசரியாக 2.8 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலைக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

    நாம் கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டே ஒரு பேரழிவை நோக்கிப் பயணிக்கிறோம். ஆனால் இதற்கு தீர்வு காண வேண்டியவர்கள், தங்களுக்கு விருப்பமான சிந்தனை, நிரூபிக்கப்படாத தொழில்நுட்பங்கள் மற்றும் "சில்வர் புல்லட்" தீர்வுகள் ஆகியவற்றையே நம்ப தயாராக உள்ளனர்.

    விழித்தெழுந்து முன்னேற வேண்டிய நேரம் இது. தூய்மையான ஆற்றலை நோக்கி நகரும் முயற்சியில் ஒரு சிறு மாற்றத்தை மட்டும் மேற்கொள்ளாமல், மனித உயிர்களின் வாழ்வோடு பொருந்தாத தயாரிப்பிகளிலிருந்து விலகி ஒரு பெரிய அளவிலான உருமாற்றத்தை புதைபடிவ எரிபொருள் தொழிற்துறையானது மேற்கொள்ள வேண்டும்.

    காலநிலை பிரச்னைகளை தீர்ப்பதற்கான வாக்குறுதிகளிலும், கடமைகளை நிறைவேற்றுவதிலும் நாடுகள் வெகுதொலைவில் உள்ளன. லட்சியம், நம்பிக்கை, ஆதரவு, ஒத்துழைப்பு எதுவுமில்லாத ஒரு நிலையை நான் காண்கிறேன். இப்பிரச்னையில், தெளிவு மற்றும் நம்பகத்தன்மையைச் சுற்றி ஏராளமான சிக்கல்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    பூமி, எல் நினோ கட்டத்தில் நுழையும்போது ஜூன் தொடக்கத்தில் ஏற்பட்ட வெப்பநிலை பல ஆண்டுகள் நீடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ×