search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிரிக்கா"

    • டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார்.
    • இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று அவரது தந்தை தெரிவித்தார்.

    தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ஆகும்.

    ஆசியாவிலேயே குறைந்த வயதில் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்டவர் என்ற சாதனையை பஞ்சாபை சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.

    ஆகஸ்ட் 18 அன்று கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற துவங்கிய டெக்பீர் சிங், ஆகஸ்ட் 23 அன்று, அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார்.

    டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார். தனது மகனின் இந்த சாதனை குறித்து பேசிய அவரது தந்தை, "டெக்பீர் சிங் இதற்காக கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

    • அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

    ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது. அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் தெரிவித்தனர்.

     

     இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

     

    • 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
    • இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

    ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 737-300 விமானம் மாலி நாட்டுக்கு புறப்படும் பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

    தெற்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள கிராமம் ஒன்றில் போலீசுக்கு துப்பு கொடுத்ததால் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரின் தலையை துண்டித்து பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்றுள்ளனர். #Mozambique
    மபுடோ:

    தெற்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள பால்மா என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் அப் சபாப் பயங்கரவாத குழு இயங்கி வருகிறது. பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து பால்மா கிராம தலைவர் போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்துள்ளார்.

    இதனால், ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள் சில நாட்களுக்கு முன்னர் கிராமத்துக்குள் நுழைந்து கிராம தலைவர் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 10 பேரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடக்கம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பயங்கரவாதிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாகாண போலீசார் கூறியுள்ளனர்.
    ×