search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 218096"

    • ‘மென டோரா அறக்கட்டளை’ தன்னார்வ தொண்டு நிறுவனம் வாலிபரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.
    • ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மாகவுரி மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.

    திருவள்ளூர்:

    ஆவடி ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் வாலிபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்த போது யார்? எங்கிருந்து வந்தார் என்ற விபரம் தெரியவில்லை.

    இதுபற்றி அறிந்த 'மென டோரா அறக்கட்டளை' தன்னார்வ தொண்டு நிறுவனம் அந்த வாலிபரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.

    அங்கு அவருக்கு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மாகவுரி மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதில் அந்த வாலிபர் விரைவில் குணமடைந்தார்.

    இதைத்தொடர்ந்து வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் என்ஜினீயரிங் படித்து வந்ததும் தெரிய வந்தது.

    போதை பழக்கத்துக்கு அடிமையான அவர் மன நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்திருப்பதும் பின்னர் ஆவடி ரெயில் நிலையத்தில் வழிதெரி யாமல் சுற்றி வந்ததும் தெரிந்தது.

    தற்போது மாணவர் நல்ல முறையில் குணமாகி இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் கொடுத்த விவரங்களின்படி பீகாரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவரை தேடி வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

    உடனடியாக அவர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் மீட்கப்பட்ட வாலிபரை மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் ஒப்படைத்தார். முன்னதாக வாலிபருக்கு கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக நடந்தது.

    ஒரு மாதத்துக்கு பின்னர் மாயமான வாலிபரை மீட்டுக்கொடுக்க பெரும் உதவியாக இருந்த தொண்டு நிறுவனத்துக்கும், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீசுக்கும் வாலிபரின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறியதாவது:-

    ஆவடி ரெயில் நிலையத்தில் வீடின்றி தங்குவதற்கு இடமின்றி ஒரு நபர் மிகவும் முடியாத நிலையில் உள்ளதாக ஹெல்ப்லைன் மூலமாக மெனடோரா அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இ.சி.ஆர்.சி. மூலமாக அந்த நபரை மீட்டெடுத்து பிப்ரவரி 21-ந் தேதியில் இருந்து தற்பொழுது வரை நம் பாதுகாப்பில் இருந்து வந்தார். அவரிடம் இருந்து தொலைபேசி எண் போன்ற விவரங்களை சேகரித்து பீகாரில் உள்ள உறவினரை அழைத்தோம். அவர்கள் உடனடியாக வந்ததன் அடிப்படையில், அந்த குடும்பத்துடன் அந்த நபரை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

    இதுபோன்ற நிகழ்வு முதலாவதாக கிடையாது, இதேபோல் 35 நபர்கள் மீட்டெடுத்தும், 20 நபர்களை குடும்பத்துடன் ஒருங்கிணைப்பும் செய்திருக்கிறோம். இது ஒரு நல்ல முன்மாதிரியான மீட்டெடுப்பு சம்பவம் என்பதால் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

    தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 200 எண்ணிக்கையில் தீவிர சிகிச்சை பிரிவிலான நபர்களுக்கு உரிய சிகிச்சை செய்துள்ளார்கள். 35 நபர்களை தெருக்களில் இருந்து மீட்டெடுத்துள்ளனர்.

    இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 18 நபர்களை மீண்டும் ஒருங்கிணைத்துள்ளனர். ஒரு சில நேரங்களில் அந்த நபர்களை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாத குடும்பங்களை பார்த்திருக்கிறோம். அப்படிபட்டவர்களை தொண்டு நிறுவனம் மூலமாக காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறக்கட்டளை இயக்குனர்கள் ரதீஷ்கான் கோட், ரெவலீனா, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மா கவுரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அரசு பள்ளி மாணவர் சாதனை படைத்தார்
    • உயரம் தாண்டுதல் போட்டியில்

    கரூர்:

    முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கரூரில் நடந்தது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் தோட்டக் குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் விஷ்ணு முதலிடம் பெற்றார். அவருக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதய நிதி பரிசு, கோப்பை, ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை வழங்கினார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

    • திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப்போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சண்முகம்உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசும், 10ம் வகுப்பு மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் பரிசும், 10ம் வகுப்பு மாணவி பவித்ர லட்சுமி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம்பரிசும் பெற்று மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தேசிய அளவிலான தடகள போட்டியில் ப்ரண்ட்லைன்மிலேனியம் பள்ளி மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல்போட்டியில் 1.78மீ தாண்டி தேசிய அளவில் நான்காமிடம் பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டுஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி,இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி சக்திநந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது.
    • இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அனுப்பி இருந்தனர்.

    அந்த ஓவியங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் டதி பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவ-மாணவிகள் வரைந்து அனுப்பிய ஓவியங்கள் பொது மக்கள், மற்றும் மாணவ மாணவிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை நெல்லை சரக போலீஸ் டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் திறந்து வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் மற்றும் போலீ சார் அந்த ஓவியங்களை பார்வையிட்டனர்.

    இன்று பள்ளி மாணவ, மாணவிகள் அந்த ஓவியங்களை நேரில் சென்று பார்வையிட்ட னர். நாகர்கோவில் நகரில் உள்ள பல்வேறு பள்ளி களில் இருந்து மாணவ-மாணவி கள் இந்த ஓவியத்தை பார்த்து சென்றனர்.

    போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது. இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    • விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
    • மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் களியக்கா விளை அருகே படந்தாலுமூடு பகுதியில் கிரேஷ் நர்சிங் கல்லூரி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பல விதத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை ஆசிரியர் அடித்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அந்த மாணவரது புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரித்த நிலையில், கல்லாரி நிர்வாகம் மாண வரிடம் இது போல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டு சிகிச்சைக்கு பணம் கொடுத்து வழக்கை திரும்ப பெற வைத்ததாக கூறப்படுகிறது. அதுவும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகத்தின் துன்புறுத்தல் காரணமாக தொழிலாளி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறிப்பிடதக்கது.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் சுமித்திரன் (வயது 19) கல்லூரியில் 2 ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் மாணவர்க ளுக்கு தங்குவதற்காக விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சுமித்திரன் தங்கியுள்ளார்.

    இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 4 மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று சுமித்திரன் படிப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்து உள்ளார். ஆனால் சக மணவர்களிடம் பேச வில்லை என்று கூறப்படுகிறது. எப்போதும் குதூகலமாக இருக்கும் சுமித்திரன் சக மாணவர்களிடம் பேசாத தால் சந்தேகமடைந்த வர்கள் சுமித்திரனிடம் கேட்ட போது ஒன்றும் கூறாமல் இருந்துள்ளான்.

    மேலும் இரவு 1 மணியளவில் சுமித்திரன் கழிவறை போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். காலையில் மற்ற மாணவர்கள் எழுந்து பார்த்த போது சுமித்திரன் விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் சுசீந்திரன் தானாக தூக்கிட்டு தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மாணவர்க ளிடையை கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை படித்துப் பார்த்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

    • தடுக்க சென்ற பேராசிரியர் மூக்கு உடைந்தது
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    நேற்று காலையில் வழக்கம்போல் கல்லூரி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. அப்போது கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.மாணவிகள் சிலரும் அங்கு அமர்ந்திருந்தனர். திடீரென மாணவர்கள் இரு தரப்பினராகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர். அங்கு வந்த பேராசிரியர் ஒருவர் இரு தரப்பு மாணவர்களையும் சமாதானம் செய்தார்.அப்போது மாணவர் ஒருவர் திடீரென பேராசிரியரை சரமாரியாக குத்தினார்.இதில் பேராசிரியரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதை பார்த்து சக மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்த பேராசிரியரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள பேரா சிரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பேராசிரியர் மீது தாக்குதல் நடந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் விசா ரணை மேற்கொண்டு வருகிறது. பேராசிரியரை தாக்கிய மாணவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறது.

    கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆசிரியரின் மூக்கு உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 3 பேர் படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணி யக்குடி ஆனப்பான்குழியை சேர்ந்தவர் ஜூடி. இவரது மகன் ஜெபின் (வயது 19).ஜெபின் வெள்ளமோடி அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் ஜெபின் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.மோட்டார் சைக்கிளின் பின்னால் கோடிமுனையை சேர்ந்த மாணவர் ஜெனிஸ்டன் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் குளச்சல் பெரிய பள்ளி முக்கு சந்திப்பு அருகே செல்லும்போது திடீரென நிலை தடுமாறி எதிரே புத்தளம் சேதுபதிவூரை சேர்ந்த தொழிலாளி குமார் (57) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. குமாரின் பின்னால் மற்றொரு தொழிலாளி சரவணன் உட்கார்ந்திருந்தார்.

    இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள் களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படு காயமடைந்தனர்.அப்பகுதி யினர் அவர்களை மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபின் பரிதாப மாக இறந்தார். ஜெனிஸ்டன், குமார், சரவணன் ஆகிய 3 பேரும் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தொழிலாளி குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஜெபின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    • சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்படுத்தப்படும்.
    • குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு காவல்துறை சார்பில் 4 தலைப்புகளில் ஓவியப்போட்டி கடந்த ஆண்டு நடந்தது. அப்போது சுமார் 3 ஆயிரம் ஓவியங்கள் கிடைக்க பெற்று 12-7-2022 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல இந்த ஆண்டும் போட்டிகள் நடக்கின்றன.

    கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல மற்றவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதும் ஆகும். சமூகமும், உலகமும் தற்போது இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். எனவே காவல்துறை தொடர்பான பல்வேறு அம்சங்களை பொறுத்து மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு வரைதல், ஓவியம், சுவரொட்டி ஆகிய போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    "போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமக்கள்-நமது பொக்கிஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள், காவல்துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை" ஆகிய தலைப்புகளில் போட்டியானது நடக்கும். 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒரு மாணவர் அதிகபட்சம் 3 தலைப்புகளில் பங்கேற்கலாம்.

    மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொ ருள்களில் பங்கேற்கலாம். மாணவர்களின் படைப்பு களை பெறுவதற்கான கடைசி தேதி வருகிற 20-ந்தேதி ஆகும். மாணவர்களின் படைப்புகளை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் அனைத்து ஓவியங்களையும் சேகரித்து அதனை ஒரு கவர் கடிதத்துடன் அனுப்ப வேண்டும். நேரடி யாகவோ அல்லது தபால் மூலமாகவோ நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு அனுப்ப வேண்டும். 3 உறுப்பி னர்களை கொண்ட குழு மாண வர்களிடம் பெறப்பட்ட அனைத்து படைப்பு களையும் ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும்.

    முடிவுகள் 25-ந்தேதி அறிவிக்கப்படும். சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.லும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 94981 03903 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
    • குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி முடிந்து குளச்சல் அருகே உடையார்விளை பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர்.

    பொருட்களை வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினர்.அப்போது சாலையில் செல்போன் ஒலிக்கும் சப்தம் கேட்டது.உடனே அவர்கள் அருகே சென்று பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் திரை உடைந்த நிலையில் ஒலித்து கொண்டிருப்பதை கண்டு அதை எடுத்தனர்.

    பின்னர் அதனை மாணவர்கள் நேராக குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியிடம் ஒப்படைத்தனர். சாலையில் கண்டெடுத்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • 20-ந் தேதிக்குள் மாணவர்களின் படைப்புகளை பள்ளி, கல்லூரிகள் சேகரித்து அறிமுக கடிதத்துடன் அனுப்பி வைக்கவேண்டும்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டவுள்ளது. இது குறித்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கடந்த வருடம் 4 தலைப்புகளில் ஓவிய போட்டிகள் நடத்தப்பட் டது. மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி கல்லூ ரிகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் ஒவியங்கள் வந்தன. இந்த ஓவியங்கள் மாவட்ட ஆயுதப்படை முகாம் மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த வருடமும் ஓவியம், சுவரொட்டி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமகன்-நமது பொக்கி ஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும் பாதுகாப் பாகவும் இருங்கள், காவல் துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை ஆகிய தலைப்புகளில் போட்டி நடக்கிறது.

    1 வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரி வாகவும், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒரு பிரிவாகவும் ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 3 தலைப்புகளில் மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொருட்களில் பங்கேற்கலாம். மாண வர்களின் படைப்புகளைப் வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

    மாணவர்களின் படைப்பு களை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் சேகரித்து அதனை ஒரு அறிமுக கடி தத்துடன் காவல் கண் காணிப்பாளர், மாவட்ட போலீஸ் அலுவலகம், நாகர்கோவில்-629001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரடியாகவும் கொடுக்கலாம். 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும். முடிவுகள் வருகிற 25-ந் தேதி அறிவிக்கப்படும்.

    மேலும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேகங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 9498103903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • சிவகங்கை மாணவர் தங்கம் வென்றார்.
    • மாணவர் சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை முதலியார் தெருவை சேர்ந்த பாஸ்கரன்-லதா தம்பதியரின் மகன் சாய்வாசன் (14). சென்னை தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். பாட்மின்டன் வீரரான இவர் ஒடிசா மாநிலம் புவனேசுவரில் நடந்த தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். 15 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சாய்வாசன், அசாம் வீரர் போர்னில் ஆகாசை 15-21, 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்.சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு எதையும் தாங்கும் மனப்பக்குவம் இல்லை.
    • மனதளவில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

    தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார்.

    அந்தநேரத்தில் சக மனிதர்களும், சுற்றியுள்ள சமூகமும் சம்பந்தப்பட்ட நபருக்கு செவிசாய்க்கும் பட்சத்தில், உடனடியாக அவர் அந்த முடிவில் இருந்து மனம் மாறிவிடுகிறார். ஆனால் தற்போது நாம் வாழும் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு தாமதம் ஆவதாலே தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

    தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர், அவரது நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் அதை வெளிப்படுத்துவார். அதை நண்பர்களோ, உறவினர்களோ உடனே உணர்ந்து கொண்டால் அவர்களின் எண்ணங்களை மாற்றி நல்வழிப் படுத்திவிட முடியும். இன்றைய நாகரிக உலகில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்புக்கு, அடித்தளமாக அமைந்து விடுகிறது.

    கடன் தொல்லை, வேலை கிடைக்கவில்லை, குடும்ப பிரச்சினை, திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏமாற்றம், உடல்நிலை சரியில்லை, காதல் தோல்வி, போதை பழக்கத்துக்கு அடிமை, படிப்பில் சாதிக்க முடியாத நிலை, தேர்வுகளில் தோல்வி போன்றவைகளே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணங்களாக அமைகின்றன.

    ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பவர்களின் தற்கொலைகளும் தற்போது புதிதாக இணைந்து இருக்கின்றன.

    தற்கொலை செய்துகொள்வதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதும் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

    தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள் தங்களை மட்டும் காயப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

    தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை காணமுடிகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2021-ம் ஆண்டு அது ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து இருப்பதுடன், அதில் 18 வயதுக்குட்பட்ட இளவயதினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.

    இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.

    தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2021-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 940 பேர் மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் என்பது வேதனையிலும் வேதனை.

    இது ஒரு புறம் இருக்க 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதில், 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்து கொண்டதில், 525 பேர் மாணவச் செல்வங்களாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மேலும் மனவலியாக இருக்கிறது.

    மனநல ஆலோசனை

    மாணவச் சமுதாயத்தின் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது.

    அந்த கேள்விக்கு பதிலாக, மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம், அவர்களைத் தற்கொலை முடிவுகளில் இருந்து விடுவிக்க முடியும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

    பள்ளிகளில் மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது.

    இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    சர்வதேச வாழ்வியல் மற்றும் மனநல ஆலோசகர் பஜிலா ஆசாத் கூறுகையில், 'மனதளவில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வியல் வகுப்புகள் நடத்தப்படுவது அவசியம். ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொள்வது எப்படி? தோல்வியை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? என்பது பற்றி தொடக்கத்திலேயே கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது எதையும் அவர்கள் கையாளுவதற்கு மாணவர்களால் முடியும். எதிர்நீச்சல் போடுவது எப்படி? என்பதை மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும். மனதளவில் மாணவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். அதனால்தான் தற்கொலை முடிவுகளை உடனே எடுக்கிறார்கள். இதனைச் சரிசெய்ய வாழ்வியல், மனநல பாடங்களை சொல்லித்தருவது மிகவும் அவசியம். ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று ஆராய்ச்சி செய்வதைவிட, மாணவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும், மனதளவில் அதற்கு அவர்கள் தயாராவதற்கும் பயிற்சி அளிக்க வேண்டும். வாழ்வியல் பாடங்கள் சரியாக சொல்லிக்கொடுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மன அழுத்தம் என்ற வார்த்தையே வராது' என்றார்.

    மனநல வகுப்புகள்

    ஆதம்பாக்கத்தை சேர்ந்த இல்லத்தரசி சங்கீதா சிவானந்தன் கூறும்போது, 'இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு எதையும் தாங்கும் மனப்பக்குவம் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். தோல்வியே வெற்றிக்கு அடிப்படை கல் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. பத்திரிகைகளில் பார்த்தால் தேவையில்லாத அர்ப்ப காரியங்களுக்குக்கூட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. செல்போன் பேசுவதை கண்டித்தாலோ, அதை வாங்கித்தராவிட்டாலோ தற்கொலை எண்ணத்துக்கு போவது மிகுந்த கவலை அளிக்கிறது. அந்த காலங்களில் நன்னெறி வகுப்புகள் இருந்தன. பள்ளிக்கூட மாணவர்களை திருத்தி, நல்ல பாதையில் கொண்டு சென்றன. இப்போது அவர்களின் மனநலத்தையே மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், மனநல ஆசிரியர்கள் நியமிப்பதும், மன நல வகுப்புகள் நடத்துவதும் காலத்தின் கட்டாயம் ஆகும்' என்றார்.

    அவசியம்

    கல்வி செயற்பாட்டாளர் உமா கூறும்போது, 'மாணவர்கள் தற்கொலையில் முக்கிய பங்கு மாணவர்களிடம் பரவலாக பேசப்படும் காதல் என்ற வார்த்தைக்கு இருக்கிறது. அதைப் பற்றிய சரியான புரிதல் பிள்ளைகளுக்கு இருப்பது கிடையாது. இதனால் பல இடைநிற்றல்கள் கூட நடந்திருக்கின்றன. தேர்வு பயம், செல்போன் பயன்பாடு போன்ற காரணங்களினாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது தொடர்ந்து நடக்கும் சம்பவமாக இருக்கிறது. ஆசிரியர் பற்றாக்குறையால், அவர்களுக்கு இருக்கும் வேலைப்பளுவால், பிள்ளைகளின் மனநிலையை அவர்கள் கவனிப்பது என்பது குறைந்துவிட்டது. ஆனால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவது அவசியம். எனவே அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்காவது, தனியாக மனநல அறையை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கலாம். ஏற்கனவே மனநல ஆலோசனைகள் தொடர்பாக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து, அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மனநல வகுப்புகள் என்பது மாணவர்களுக்கு அவசியமான ஒன்றுதான்' என்றார்.

    தவறான செயல்

    ரேகா என்பவர் கூறுகையில், 'மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுவது தவறான செயல். பெற்றோருக்கு மனதளவில் பெரிய கஷ்டத்தை கொடுத்துவிடுகிறார்கள். பெற்றோர் ஒவ்வொரு மாணவரின் படிப்புக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அதனை பிள்ளைகள் மனதில் வைத்தால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. பெற்றோரும் மாணவர்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது தவறு. பிள்ளைகளுக்கு எப்போது படிக்க வேண்டும்? எப்போது விளையாட வேண்டும்? என்று தெரியும். பிள்ளைகள்-பெற்றோர் இடையே நட்புறவு இருக்கவேண்டும். பிள்ளைகள், பெற்றோரிடம் நண்பனாக எதையும் தெரிவிக்கவேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பிள்ளைகளுக்கு மனநல வகுப்புகளை நடத்தலாம். அது சிறந்ததாகதான் இருக்கும்' என்றார்.

    விழிப்புணர்வு

    தனியார் கல்லூரி மனநல ஆலோசகர் நபிசா ஜெடி கூறும்போது, 'பலதரப்பு பின்புலம் கொண்ட மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க வருகிறார்கள். அவர்களுக்கு மனநலம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. மேலும் கல்லூரிகளில் மனநல வகுப்புகள் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை அல்லது 2 முறை நடத்தலாம். அதில் சிறந்த மனநல ஆலோசனை பயிற்சியாளர்களை கொண்டு வகுப்புகள் நடத்தலாம். இதனை விருப்பப் பாடமாக இல்லாமல், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பொதுப்பாடமாக கொண்டு வரவேண்டும். இந்த வகுப்புகளை பள்ளி அளவில் இருந்தே கொண்டு வருவது அவசியமான ஒன்று. 9-ம் வகுப்பில் இருந்து இதற்கு என்று தனிப்பாடம் உருவாக்கி நடத்தி, அவர்களை எதையும் எதிர்கொள்ளும் மாணவர்களாகவும், எளிதில் கடந்து செல்லும் மாணவர்களாகவும் உருவாக்க வேண்டும்' என்றார்.

    ×