search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுநோயாளி"

    • வலியினை போக்க உயர்ந்த ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக் போட்டால் வலியினை போக்கலாம்
    • மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 74 வயது நோயாளி ஒருவர் ப்ராஸ்டேட் புற்றுநோயுடன் கடுமையான முதுகுவலி மற்றும் வயிறு வலியோடு அனுமதிக்கப்பட்டார்.

    அவரை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜேஷ் பரிசோதனை செய்தார். அதில் புற்றுநோய் தண்டு வடத்தில் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடுமையான முதுகுவலி மற்றும் இடுப்பு வலியினை போக்க உயர்ந்த ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக் போட்டால் வலியினை போக்கலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது.

    நோயாளிக்கு சி.டி. ஸ்கேன் உதவியுடன் (சுப்பீரியர் ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக்) எளிதாக செய்யப்பட் டது. ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸ் என்ற சிகிச்சை செய்வதன் மூலம் நாள் பட்ட இடுப்பு வலியினை குறைக்கலாம். இந்த சிகிச்சைக்கு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன் முறையாக சி.டி.ஸ்கேன் வழிகாட்டுதலின் உதவியுடன் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெற்றிகரமாக இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர்.
    • சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

    அவிநாசி :

    புற்றுநோயாளிகளுக்கு பலர் தங்களது தலைமுடிகளை தானமாக வழங்கி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர். இந்தநிலையில் பெண்கள் மட்டும் தான் தானம் கொடுக்க முடியுமா?

    நானும் கொடுப்பேன் என்று, அழகாக தலைமுடியை வளர்த்து, சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.அவிநாசி சேவூர் ரோடு, வ.உ.சி., காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜய் ஆனந்த்.இவரது மனைவி சங்கீதா. இவர்கள் மகன் இறை எழில்பரிதி, நீளமாக தலைமுடியை வளர்த்து புற்றுநோயால்பாதித்தவர்களுக்கு, விக் தயாரிப்பதற்காக முடியை தானம் வழங்கியுள்ளார். முடிதானம் செய்த சிறுவனை அவிநாசி கிழக்கு ரோட்டரி நிர்வாகிகள் உட்பட பலர் பாராட்டினர்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோயாளியிடம் நர்சு, ஊழியர்கள் லஞ்சம் கேட்டது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை அமைப்பின் பொதுச் செயலாளர் ஜாபர்அலி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் அமைப்பை சேர்ந்த ஆணையப்பன் என்பவர் புற்றுநோய் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் நர்சுகள், தொழில்நுட்ப பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் ஆகியோர் சிகிச்சைக்காக பணம் கேட்டுள்ளனர்.

    அவர் பணம் கொடுக்காததால் சிகிச்சை அளிப்பதை வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர். இதுபோன்ற குறைகளை களைவதற்காக மருத்துவ கண்காணிப்பு குழுவும் இந்த மருத்துவமனையில் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயசந்திரன் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கமளிக்க கோரி மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
    ×