search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றப்பத்திரிக்கை"

    • 150 பேரின் சாட்சிகளையும் , பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் பெற்று 2,144 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல்
    • 'எந்த வழக்காக இருந்தாலும் அதை எப்படி மூட வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு எம்.பி., என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது'

    பிரஜ்வல் ரேவண்ணா 

    கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் இடையே பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நிலைமையை தலைகீழாக மாற்றியது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்குத் தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்புப் புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்புப் புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர். இந்த விவகாரத்தால் பாஜக சார்பில் போட்டியிட்ட ரேவண்ணா ஹசன் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். அவர் மீது சிறப்புப் புலனாய்வு குழுவினர் விசாரணை ,மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இந்த விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் மீதும் அவரது தந்தை எச்.டி ரேவண்ணா மீதும்  2,144 பக்கங்கள் அடங்கிய 4 குற்றப்பத்திரிகைகளை பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 150 பேரின் சாட்சிகளையும் , பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் பெற்று இந்த குற்றப்பத்திரிகையானது தயாரிக்கப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை 

    பெண்களை பாலியல் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி பலாத்காரம் செய்தது, அதை வீடியோ எடுத்து பெண்களை மிரட்டியது என பிரஜ்வல் ரேவண்ணாவின் செயல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு வெளிக்கொணர்ந்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில், பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி மீண்டும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதை நிரூபிக்கும் விதமாக அதில் உயிரியல், உடல், அறிவியல், மொபைல், டிஜிட்டல் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக ரேவண்ணாவின் மனைவி பவானி மூலம் விடுதி ஒன்றும் பணியில் சேர்ந்த பெண் பின்னர் ரேவண்ணாவின் வீட்டில் பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளார்.

    பணியில் சேர்ந்த பெண்ணை 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. 2020 இல் பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணா அதை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த பெண், தான் இங்கு நடந்ததை வெளியே சொல்லப் போவதாகக் கூறியுள்ளார்.

    அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா, இதை நீ வெளியே சொன்னால் உனது கணவனை சிறையில் தள்ளுவேன், உனக்கு என்ன செய்தேனோ அதையே உனது மகளுக்கும் செய்வேன். எந்த வழக்காக இருந்தாலும் அதை எப்படி மூட வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு எம்.பி [பாராளுமன்ற உறுப்பினர்] என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில தினங்களில் எஞ்சியுள்ள தகவல்களும் தாக்கல் செய்யப்படும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

    • ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான விசாரணை இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான் என சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.

    இதனிடையே, கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான விசாரணை இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது. சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரை சி.பி.ஐ., கைது செய்தது. இதனால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
    • கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருந்தார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டபோது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கடந்த 19-1-2022 தேதி அன்று வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 20-1-2022 தேதி அன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழனுக்கு சொந்தமான தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரேகோடஅள்ளியில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 53 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடம், சென்னையில் 3 இடங்கள், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு இடம் என மொத்தம் 58 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.2 கோடியே 87 லட்சத்து, 98 ஆயிரத்து 650 ரொக்கம் மற்றும் தங்க நகைகள் 6.637 கிலோ கிராம், சுமார் 13.85 கிலோ கிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து, 650 ரூபாய், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    மேலும், கே.பி. அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கே.பி. அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்தனர். அதில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று பினாமி பெயரில் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மகள் வைஷ்னவி, மருமகள்கள், உறவினர்கள் உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ அலுவலா்கள் பிடித்து விசாரணை நடத்தினா்.
    • தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பூண்டி தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் விக்டா் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ச்சி படிப்பு (பி.எச்.டி) படித்து வந்தார்.

    இவர் சிறுமிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்தது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ அலுவலா்கள் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் விக்டா் ஜேம்ஸ் ராஜா பல்வேறு நாடுகளில் உள்ள நண்பா்களுடன் இணைந்து சிறுமிகள் பாலியல் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தாா். இதை இண்டா்போல் அமைப்பினரின் தரவுகளும் உறுதிப்படுத்தின. பாதிக்கப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலானவா்கள் 12 வயதுக்கு உள்பட்டவா்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து, விக்டா் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ, கூட்டு சதி, தகவல் தொழில்நுட்ப சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ அலுவலா்கள் வழக்குப்பதிவு செய்து, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜா்படுத்தினா். பின்னா், விக்டா் ஜேம்ஸ் ராஜா தஞ்சாவூா் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டாா்.

    இதுதொடா்பாக, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தஞ்சாவூரில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ அலுவலா்கள் தாக்கல் செய்தனா்.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, மெஹுல் சோஸ்கி வழக்கில் சிபிஐ இன்று முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #NiravModi #CBI #PNBScam
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ இன்று முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.


    பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    எனினும், வங்கி மோசடியில் மெஹுல் சோஸ்கியின் பங்கு என்ன என்பது குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. உஷா அனந்தசுப்பிரமணியன் உள்ளிட்ட பல வங்கி உயரதிகாரிகள் ஏற்கனவே சிபிஐயால் விசாரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    #NiravModi #CBI #PNBScam
    ×