search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரக்கிடங்கு"

    • முன்னதாக சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
    • நுண் உரக்கிடங்கு வளாகத்தில் செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில்தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகராட்சி செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை பொதுமக்கள் , சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்விளக்கம் அளிக்கபட்டது.

    நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார் நகராட்சி ஆணையர் வெ ங்கடலட்சுமண ன்முன்னி லை வகித்தார்.

    சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் வரவேற்றார் நிகழ்ச்சியி ல்வர்த்தக சங்க தலைவர் தென்னரசு பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சி வளம் மீட்பு மையத்திலும் நுண் உரக்கிடங்கு வளாகத்திலும் செயல்முறை கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் உரக்கி டங்கில் தயார் செய்யப்பட்ட மாதிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது.

    திடக்கழிவு மேலாண்மைவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

    • 5 தலைமுறைகளாக சுமார் 40 சென்ட் இடத்தை சுடுகாட்டுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்
    • 132 ஆண்டுகள் பழமையான சுமார் 20 அடி ஆழ குடிநீர் கிணறு உள்ளது

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் வை.தினகரன் மற்றும் நிர்வாகிகள் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அகஸ்தீஸ்வரம் தாலுகா லீபுரம் வருவாய் கிராமம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரிதாசபுரத்தில் சுமார் 60 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய ஊர் சார்பில் 5 தலைமுறைகளாக சுமார் 40 சென்ட் இடத்தை சுடுகாட்டுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சுடுகாடு இடத்தை சுற்றி வேலி அமைக்க ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

    தற்போது அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஒருவர் சுடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் கட்டி சுடுகாட்டை இனி பயன்படுத்த கூடாது என தடுத்து வருகிறார். மேலும் எங்கள் ஊரில் 132 ஆண்டுகள் பழமையான சுமார் 20 அடி ஆழ குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை எங்கள் ஊர் தலித் மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டாரங்களை சேர்ந்த சுமார் 10 கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கிணற்றுக்கு மிக அருகில் உரங்கிடங்கு அமைக்க சம்பந்தப்பட்ட நபர் முயற்சி செய்கிறார். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வேதாரண்யம் கடற்கரையில் அமைக்க இருக்கும் உரக்கிடங்கிற்கு எதிராக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் ரூ.3 கோடியே 44 லட்சம் செலவில் உரக்கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான விழா சமீபத்தில் நடந்தது. இங்கு உரக்கிடங்கு அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வேதாரண்யம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இப்பணி தொடர்ந்து நடந்ததால் உரக்கிடங்கு அமைக்கும் திட்டத்தை நிறுத்த உடனே கோரி வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பைபர் படகில் சென்று மீன் பிடித்து வந்தனர். இதனால் மீன்களே கிடைத்து வந்தது. இந்த நிலையில் இன்று பைபர் படகில் சென்றும் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் உரக்கிடங்கு திட்டத்தை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
    ×