search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்துங்கநல்லூர்"

    • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை தாங்கினார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூரில் அமைப்பு சாரா தொழிலாளர்க ளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. சமுதாய நலக்கூடத்தில் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் நடந்த விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராமஉதயம் மேலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினார். தனி அலுவலர் ராமசந்திரன் வரவேற்புரை ஆற்றினார். பகுதி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் மஞ்சள்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் விஜய ஏஞ்சல், விஜயகுமாரி, ஆறுமுககனி, செல்வன்துரை, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செய்துங்கநல்லூர் வளைவு பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • உயிரிழந்த கல்யாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவரது மனைவி கல்யாணி (வயது43).

    இசக்கிபாண்டி நேற்று நள்ளிரவு தனது மனைவி, மகன் இமானுவேல் பிரபு, மகள் ரம்யா ஆகியோருடன் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு கார் செய்துங்கநல்லூர் வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் சம்பவ இடத்திலேயே கல்யாணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இசக்கி பாண்டி, ரம்யா, இமானுவேல் பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கல்யாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் தரக்கூடிய நதியாக விளங்குகிறது.

    தாமிரபரணி மகாத்மியம் படி வைகாசி விசாகம் அன்று தான் பிறந்த நாள் கூறுவார்கள். அகத்திய பெருமான் இன்று தான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.

    இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இன்று பிறந்த நாள் விழா தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.

    இதற்காக கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தாமிரபரணி நதியில் நின்று நதியை காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தொடர்ந்து நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செய்துங்கநல்லூரில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள சந்தையடியூர் வேலன் காட்டான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது40). டிரைவர். இவரது மனைவி ஆனந்த ஈஸ்வரி (36). இவர் நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு பூஜா (4) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி ஆனந்த ஈஸ்வரியை பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் கடந்த 6-ந்தேதி வீடு திரும்பினார். கடந்த 7-ந்தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தந்தை பெரியசாமி, ஆனந்த ஈஸ்வரியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செய்துங்க நல்லூர் போலீசில் பெரியசாமி புகார் செய்தார். புகாரில் அவர் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆனந்த ஈஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் தூத்துக்குடி ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
    ×