என் மலர்
நீங்கள் தேடியது "மும்பை இந்தியன்ஸ்"
- பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தரம்சாலா உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடல்.
- ஞாயிற்றுக்கிழமை தரம்சாலாவில் நடைபெற இருந்த போட்டி வேறு இடத்திற்கு மாற்ற முடிவு.
ஐபிஎல் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதில் பஞ்சாப் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் வருகிற 11ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு 9 இடங்களில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக தரம்சாலா உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனால் வீரர்கள் தரம்சாலாவிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பிசிசிஐ யோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ-யிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததும், போட்டியை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
- ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- தரமசாலாவில் இன்று பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. .
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், தரம்சாலாவில் இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை நடத்த பிசிசிஐக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் மே 11ம் தேதி தரம்சாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நடைபெற இருந்த போட்டியும், வரும் 11ம் தேதி தர்மசாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது குஜராத் அணி.
மும்பை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56-வது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 155 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 18 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
இதையடுத்து, குஜராத் வெற்றிபெற ஒரு ஓவரில் 15 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் கடைசி ஓவரில் 15 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2வது இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் பஞ்சாப் கிங்சும், 4வது இடத்தை மும்பை இந்தியன்சும், 5வது இடத்தை டெல்லியும், 6வது இடத்தை கொல்கத்தாவும், 7வது இடத்தை லக்னோவும் பிடித்துள்ளன.
- டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 56வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
ரிக்கெல்டன் 2 ரன்னிலும், ரோகித் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3வது விக்கெட்டுக்கு வில் ஜாக்ஸ்-சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசினார்.
இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
குஜராத் சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லர் 30 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து கில்லுடன் ரதர்போர்டு ஜோடி சேர்ந்தார். ரதர்போர்டு அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். 14 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
மழை நின்று ஆட்டம் தொடங்கிய நிலையில் சுப்மன் கில், ரதர்போர்டு, ஷாருக் கான், ரஷீத் கான் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மழை மீண்டும் பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஒரு ஓவரில்15 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், குஜராத் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. 8வது வெற்றியைப் பதிவு செய்துள்ள குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் அணி முற்றுப்புள்ளி வைத்தது. மும்பை அணியின் 5வது தோல்வி இதுவாகும்.
- மும்பை அணியின் வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசினார்.
- குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்- ரிக்கெல்டன் களமிறங்கினர். முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரிக்கெல்டன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வில் ஜாக்ஸ் முதல் பந்திலேயே கேட்ச் மிஸ் ஆனார். தடுமாறிய ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் அரைசதம் விளாசினார்.
அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த வீரர்கள் திலக் வர்மா 7, பாண்ட்யா 1, நமன் தீர் 7 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதியில் கார்பின் பாஷ் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் மும்பை அணி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- நடப்பு தொடரில் மும்பையில் நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது.
- புள்ளிப்பட்டியலில் மும்பை 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது. குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
தங்களது எஞ்சிய ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
நடப்பு தொடரில் இங்கு நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிவாலிக் சர்மா, 2023 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
- ராஜஸ்தான் போலீசார் சிவாலிக் சர்மாவை கைது செய்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவாலிக் சர்மா பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து தன்னுடன் உடல்ரீதியான உறவில் ஈடுபட்ட சிவாலிக் சர்மா, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக அவரது காதலி புகார் கொடுத்திருந்தார்.
சிவாலிக் சர்மாவின் காதலி கொடுத்த புகாரின் பேரில் ராஜஸ்தான் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார்.
26 வயதான சிவாலிக் சர்மா, 2023 ஆம் ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. கடந்த நவம்பரில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை அணி அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். அதிகாரபூர்வமாக 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும். தற்போது லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்குவதால், இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் அதிக முக்கியத்துவம் பெறும்.
இந்த தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது. முதலில் சற்று தடுமாறிய மும்பை அணி கடைசியாக 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி வீறுநடைபோடுகிறது. முந்தைய 6 ஆட்டங்களிலும் அந்த அணி, எந்த அணியையும் 200 ரன்களை எட்டவிடவில்லை.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (475 ரன்), ரையான் ரிக்கெல்டன் (334), ரோகித் சர்மா, திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (16 விக்கெட்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (13), ஜஸ்பிரித் பும்ரா (11), தீபக் சாஹர் (9) கலக்குகின்றனர்.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (504 ரன்), ஜோஸ் பட்லர் (470), கேப்டன் சுப்மன் கில் (465) ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கின்றனர். இந்த மூவரையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (19 விக்கெட்), முகமது சிராஜ் (14), சாய் கிஷோர் (12), ரஷித் கான் வலுசேர்க்கின்றனர்.
தங்களது எஞ்சிய ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. அகமதாபாத்தில் நடந்த குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 36 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மும்பை அணி அதற்கு பதிலடி கொடுக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் மும்பை அணியின் தொடர்ச்சியான வெற்றிப்பயணத்துக்கு முடிவு கட்ட குஜராத் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் சூழல் மும்பை அணிக்கு அனுகூலமாக இருக்கும். நடப்பு தொடரில் இங்கு நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் அந்த அணி வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), வில் ஜாக்ஸ், திலக் வர்மா, நமன் திர், கார்பின் பாஷ் அல்லது மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், முகமது சிராஜ், ஜெரால்டு கோட்ஜீ, சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா அல்லது ரபடா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்கள் இரு அணியிலும் உள்ளனர்.
- குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியின் 56-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-சுப்மன்கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி குஜராத்துக்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. மும்பை அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் (அகமதாபாத்) வித்தியாசத்தில் தோற்று இருந்தது. மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பையை மீண்டும் வீழ்த்தி 8-வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவது குஜராத்துக்கு கடும் சவாலானது.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்கள் இரு அணியிலும் உள்ளனர். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- ரோகித் 7 ரன்னில் இருக்கும் போது பரூக்கி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
- இதனை கள நடுவர் அவுட் கொடுப்பார்.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே நடுவர்கள் அந்த அணிக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் குற்றச்சாட்டு.
அந்த வகையில் நேற்றைய போட்டியில் ரோகித் 7 ரன்னில் இருக்கும் போது பரூக்கி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆவார். இதற்கு கள நடுவர் அவுட் கொடுப்பார்.
அதன் பின் ரோகித் சர்மா எதிரில் நின்றிருந்த ரியான் ரிக்கல்டனுடன் டிஆர்எஸ் எடுப்பது பற்றி விவாதித்து, பின்னர் ரிவ்யூ முடிவை எடுத்தார். ஆனால், டிஆர்எஸ் முடிவை எடுப்பதற்கு 15 வினாடிகள் மட்டுமே இருக்கும் நிலையில், சரியாக நேரம் முடிவடைந்து திரையில் பூஜ்யம் (0) எனக் காட்டப்பட்ட பின்னரே ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டார். இதனால் ரோகித் சர்மா நேரம் முடிந்த பின்பே ரிவ்யூ எடுத்தாக சிலரும், அவர் நேரம் முடியும் முன்னேரே ரிவ்யூ எடுத்ததாக சிலரும் கூறி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ரிவ்யூவின் போது மற்றொரு சர்ச்சை எழுந்தது. ரிவ்யூவில், பந்து ரோகித் சர்மாவின் லெக் ஸ்டம்பிற்கு வெளியே பாதி அளவுக்கு பிட்சானது தெரிந்தது. விதிப்படி, பந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்சாகியிருந்தால் அவுட் கொடுக்க முடியாது. அந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி, மூன்றாவது நடுவர் நாட் அவுட் என அறிவித்தார்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரிவ்யூவில், பந்து 50% கோட்டிற்கு உள்ளேயும் 50% வெளியேயும் பிட்சானதாகவே தெரிந்தது. இது குறித்து முடிவெடுப்பது சிக்கலான ஒன்றுதான் என்றாலும், பொதுவாக அம்பயர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்படுவதாக ஒரு கருத்து நிலவும் நிலையில், இந்த விவகாரம் அதை மேலும் அதிகரித்தது.
இந்த ரிவ்யூவில் தப்பிய ரோகித் சர்மா அதன் பின்னர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் எளிய கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறோம்.
- எங்கள் பவுலரின் படை அனுபவம் வாய்ந்ததாக இருக்கின்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தானை 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து ஆறாவது வெற்றியை பெற்று அசத்தி இருக்கிறது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மும்பை அணி 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் என 14 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இந்த வெற்றியால் நாங்கள் துள்ளி குதிக்க மாட்டோம் என்றும் அடக்கமாக நடந்து கொள்வோம் என்றும் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் இன்று பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் என்று சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றோம். பேட்டிங்கில் கூடுதலாக ஒரு 15 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் அதை மட்டும் தவற விட்டு இருக்கின்றோம்.
எங்கள் பவுலரின் படை அனுபவம் வாய்ந்ததாக இருக்கின்றது. எனக்கு எந்த பவுலர்கள் பெயரை விடுவது, சொல்வது என்றே தெரியவில்லை. எனவே அவர்களை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை நாங்கள் தெளிவான மனநிலையில் இருக்கின்றோம்.
நாங்கள் எளிய கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறோம். அதுதான் எங்களுக்கு கை கொடுக்கின்றது. இந்த வெற்றி தொடரும் என்று நம்புகிறோம். இவ்வளவு வெற்றி பெற்றாலும், நாங்கள் அடக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். நாங்கள் இதே போல் முழு கவனத்துடன் செயல்படுவோம்.
என்று ஹர்திக் கூறியுள்ளார்.