search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது.
    • வெள்ளி இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.77.60-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை :

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45,160-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,645-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,620-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் இன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.77.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 77,600-க்கு விற்பனையாகிறது.

    • கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால் கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
    • 10 டன் மீன்கள் மட்டுமே வந்தது.

    பல்லடம் :

    மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் மீன்கள் வரத்து குறைவால், மீன்களின் விலை உயர்ந்துள்ளதாக மீன் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் மீன் கடை உரிமையாளர் கனகசெல்வம் கூறியதாவது:- கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால் கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. டேம் மீன்கள் மட்டுமே சப்ளையாகி வருகிறது. வழக்கமாக பல்லடம் மீன் மார்க்கெட்டிற்கு 15 முதல் 20 டன் வரை மீன்கள் வரும். தற்போது 10டன் மீன்கள் மட்டுமே வந்தது. இதனாலும் மீன்கள் விலை உயர்ந்து உள்ளது. உதாரணமாக சென்ற வாரத்தில் கிலோ 600 ரூபாய்க்கு விற்ற வஞ்சிரம் மீன் தற்போது 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    250 ரூபாய்க்கு விற்ற இறால் மீன் 350 ரூபாய்க்கும், 260 ரூபாய்க்கு விற்ற நண்டு 360 ரூபாய்க்கும் விற்பனையானது. மீன்கள் விலை உயர்வால் பொதுமக்கள் குறைந்த அளவே மீன்களை வாங்கினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோடை மழை காரணமாக எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • ஒரு பழம் 10 ரூபாய் வரை விற்ற நிலையில் நேற்று எலுமிச்சை பழம் ஒன்று 3 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ரூபாய் வரை விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    கோடை மழை காரணமாக எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை எலுமிச்சம்பழம் ஒரு பழம் 10 ரூபாய் வரை விற்ற நிலையில் நேற்று எலுமிச்சை பழம் ஒன்று 3 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ரூபாய் வரை விற்பனையானது. எலுமிச்சை பழம் விலை சரிவால் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

    இது குறித்து வியாபாரி கூறுகையில், தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சென்று எலுமிச்சை பழங்களை வியாபாரிகள் வாங்கி வருகிறார்கள்.

    தற்போது கோடை மழை, அவ்வப்போது பெய்து வருவதால் பயன்பாடு குறைந்து விலையும் சரிவடைந்து வருகிறது. வரும் நாட்களில் எலுமிச்சை பழம் மேலும் விலை சரிவடைய வாய்ப்புள்ளது என கூறினார்.

    • சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45 ஆயிரத்து 160க்கு விற்றது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 645ஆக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்ற தாழ்வு நிலவி வரும் நிலையில் இன்று விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45 ஆயிரத்து 160க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 645ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.78 ஆயிரமாக இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கு விற்கிறது.

    • நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்ப டுகின்றன. இந்த கறிக்கோ ழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோ சனை கூட்டம் நேற்று பல்லடத்தில் நடந்தது. கூட்டத்தில் கறிக்கோழி தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதனால் ரூ.120 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.122 ஆக உயர்ந்தது. கடந்த 16-ந் தேதி ரூ.116 ஆக இருந்த கறிக்கோழி விலை, 17-ந் தேதி ரூ.120 ஆக உயர்ந்த நிலையில், நேற்று மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்ட தால் கறிக்கோழி விலை 3 நாளில் ரூ.6 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடும் வெயிலால் கறிக்கோழியின் எடை குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்து உள்ளதா லும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரி வித்துள்ளனர். இதேபோல முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. முட்டை கோழி விலை எந்த மாற்றமும் செய்யாமல் 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.

    • பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.
    • பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், கபி லர்மலை, நகப்பா ளையம், செல்லப்பம்பா ளையம், அண்ணா நகர், ஆனங்கூர், பாகம்பாளை யம், கழுவன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குண்டு மல்லிகை, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளைவிக்கப்ப டும் பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்க மாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதி கரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.300-க்கும், முல்லைப் பூ ரூ.250-க்கும், ரோஜா ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும் சம்பங்கி ரூ.50-க்கும் விற்பனையானது.

    நேற்று குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், ரோஜா ரூ.220-க்கும், அரளி ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனையானது.

    இன்று அமாவாசை என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது.
    • தங்கத்தை போல வெள்ளியும் குறைந்து இருக்கிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.5,670-க்கும் பவுன் ரூ.45,360-க்கும் விற்பனை ஆனது. இன்று இது குறைந்து கிராம் ரூ. 5,650-க்கும்,பவுன் ரூ. 45,200-க்கும் விற்பனை ஆகிறது. இன்று கிராம் ரூ 20-ம் பவுன் ரூ.160-ம் குறைந்து உள்ளது.

    தங்கத்தை போல வெள்ளியும் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.78.20-ல் இருந்து 78.10-ஆகவும், கிலோ ரூ. 78,200-ல் இருந்து ரூ.78,100-ஆகவும் குறைந்து விற்பனை ஆகிறது.

    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 715-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5 ஆயிரத்து 670-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.78.80-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.45 ஆயிரத்து 720-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45 ஆயிரத்து 360-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 715-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5 ஆயிரத்து 670-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.78.80-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.78.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.78 ஆயிரத்து 200-க்கு விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 742-க்கு விற்கப்படுகிறது.
    • 1 கிலோ பார் வெள்ளி ரூ. 82 ஆயிரத்து 700-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உச்சத்தில் உள்ளது. கடந்த 5-ந்தேதி வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.46 ஆயிரத்து 200 ஆக உயர்ந்தது. அதன் பிறகு விலை சற்று குறைவதும் உயர்வதுமாக உள்ளது.

    நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45 ஆயிரத்து 736-க்கு விற்கப்பட்டது. இன்று பவுன் ரூ.45 ஆயிரத்து 936-க்கு விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 717-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 742-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.82.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.82.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ. 82 ஆயிரத்து 700-க்கு விற்பனையாகிறது.

    • எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
    • பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

    இங்கு கடந்த வாரம் கிலோ ரூ. 240-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ. 480-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ. 280-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ. 120-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ. 200-க்கும் விற்பனையானது. சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்க ளில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறும். எனவே பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.81.80-க்கும் கிலோ ரூ.81,800-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,648-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.91 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,706-க்கும் விற்கப்படுகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.81.80-க்கும் கிலோ ரூ.81,800-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பெண்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
    • கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு விற்பனைக்கு வரும் நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று 280 ரூபாய்க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதால் பொதுமக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். மேலும் வெயில் காலத்தில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டை அதிகரித்துவிடும் என்பதால், கோடைகாலத்தில் அவற்றை தவிர்க்கின்றனர்.

    ஒரு சில வியாபாரிகள், பண்ணைக் கோழிகளை நாட்டுக்கோழி என ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×