search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது.
    • புளி கிலோ 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது. கோடை காலம் துவங்கியதும் புளியம் பழங்கள் அறுவடையை மேற்கொள்கின்றனர். ரோட்டோரத்திலுள்ள மரங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் தரிசு நிலங்களிலுள்ள மரங்களில் புளியம்பழம் பறிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரும் ஏலம் விடுகின்றனர்.

    இவ்வாறு பறிக்கப்படும் புளியம்பழங்களில் இருந்த ஓடு மற்றும் விதைகளை பிரித்து சுத்தியலில் தட்டி மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர்.தளி பகுதியில் இப்பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபடுகின்றனர். இந்தாண்டு அறுவடை முடிந்துள்ள நிலையில் புளியின் விலை சரிந்துள்ளது.

    இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், வழக்கமாக, புளி கிலோவுக்கு 100 ரூபாய் வரை விலை கிடைக்கும். தற்போது 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர். பிற மாநில வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை குறைந்துள்ளது என்றனர்.

    • கோடை மழை காரணமாக வரத்து அதிகரித்தது
    • கிலோ ரூ,120 என சரிந்தது

    கரூர்,

    கரூரில் கடந்த மார்ச் மற்றும் நடப்பு ஏப்ரல் மாத தொடக்கத்தில், எலுமிச்சம் பழம் ஒரு கிலோ 140 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகரித்தது.இதையடுத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ எலுமிச்சை பழம், 100 ரூபாய் முதல், 120 என சரிந்தது.இதுகுறித்து, வியாபாரிகள் சிலர் கூறியதாவது, எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கோடை மழை துவங்கியுள்ளது. இதனால், அவற்றின் பயன்பாடு குறைந்து விலையும் சரிவடைந்து வருகிறது என்று தெரிவித்தனர்.

    • மாம்பழங்களின் விற்பனையும் உயர்வு
    • கிளிமூக்கு-ரூ.80 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வரு கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பெரிதும் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக அவற்றின் விலை உயர்ந்துள்ளது. நாகர்கோவி லில் ஒரு சிகப்பு இளநீர் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் கோடை காலம் என்பதால் மற்ற பழ வகைகளை மக்கள் பெரிதும் வாங்கி உண்ணு கிறாா்கள். இதனால் கடந்த ஒரு மாதமாகவே பழங்கள் விலை சற்று அதிகமாக உள்ளது. ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களின் சீசன் இல்லாததால் அவற்றின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

    அன்னாசி பழம், கொய்யா, திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலை ரூ.10 வரை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் நாகர்கோவி லில் நேற்று ஒரு கிலோ திராட்சை-ரூ.70, அன்னாசி பழம்-ரூ.60, கொய்யா-ரூ.80, முலாம்பழம்-ரூ.45, ஆப்பிள்-ரூ.200, ஆரஞ்சு-ரூ.140 என்ற அடிப்படையில் வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோடை காலம் என்பதால் குமரி மாவட்டத்தில் தற்போது தித்திப்பான மாம்பழம் சீசன் களை கட்டியுள்ளது. பொதுவாகவே குமரி மாவட்டத்தில் மாம்பழம் விளைச்சல் அதிகமாக இருக்கும். சப்போட்டா, மாம்பழம் நீலம், கிளிமூக்கு மாம்பழம் ஆகிய மாம்ப ழங்கள் அதிகளவில் விற்ப னைக்காக வருகின்றன.

    அதிலும் குமரி மாவட்டத் தில் விளையும் சுவை மிகுந்த மாம்பழமான செங்கவருக்கை மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. கடைகள், மார்க்கெட்டுகள், சந்தைகள் என அனைத்து இடங்களிலும் செங்க வருக்கை மாம்பழம் விற்ப னைக்காக வந்துள்ளது.

    இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆகிறது. இதே மற்ற மாம்பழங்களான சப்போட்டா-ரூ.70 முதல் ரூ.80 வரை, நீலம்-ரூ.60 முதல் ரூ.70 வரை, கிளிமூக்கு-ரூ.80 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுபற்றி வியாபாரி களிடம் கேட்ட போது, "குமரி மாவட்டத்தில் தற்போது மாம்பழங்கள் சீசன் தொடங்கியதால் வரத்து அதிகரித்து இருக்கிறது. 1½ கிலோ மாம்பழம் ரூ.100 என்ற அடிப்படையில் விற்பனை நடக்கிறது. அதிலும் குமரி மாவட்ட ஸ்பெஷலான செங்கவருக்கை அதிகளவில் வருகிறது. இதனால் அதன் விலை குறைந்துள்ளது. இந்த வகை மாம்பழம் வரத்து குறை வாக இருந்தால் ரூ.200-க்கு விற்பனை ஆகும். தற்போது வரத்து அதிகமாக உள்ள தால் ரூ.150-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் வரத்து அதிகரித்தால் விலை இன்னும் குறையும்" என்றனர்.

    • ஓராண்டுக்கு சமையலுக்கு தேவையான அளவிற்கு புளியை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வதில் பொதுமக்கள் மட்டுமின்றி உணவகம், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் மளிகை வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • 1கிலோ முதல் தர புளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, சந்துமலை கிராமங்கள் மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் சித்தேரி மலை, தீர்த்தமலை பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சரிவான நிலப்பகுதிகள், தரிசு நிலங்களில், பாரம்பரிய முறையில் நீண்டகால பலன் தரும் புளியமரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர். சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் புளிய மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    இதுமட்டுமின்றி, சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர் பகுதி கிராமங்களிலும், தரிசு நிலங்களிலும், பாரம்பரிய முறையிலும், குறைந்த நாட்களில் கூடுதல் மகசூல் கொடுக்கும், சதைப்பற்று மிகுந்த ஒட்டுரக புளி மரங்களையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    மலை கிராமங்களுக்கு செல்லும் வாழப்பாடி பகுதி வியாபாரிகள், விவசாயிகளிடம் புளியம் பழத்தை மேலோடுகளுடன் கொள்முதல் செய்து கொண்டு வந்து, கூலித்தொழிலாளர்களை கொண்டு ஓடு மற்றும் விதையை நீக்கி பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். விவசாயிகளே நேரடியாகவும் விற்பனை செய்கின்றனர்.

    சேலம் மாவட்ட எல்லையிலுள்ள மலை கிராமங்களில் விளையும் புளி சமையலுக்கு ஏற்ப இனிப்பு கலந்த புளிப்புச்சுவையுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் விரும்பி வாங்கி, அன்றாடம் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டு புளி அறுவடை தொடங்கியுள்ளது. மரத்தில் இருந்து புளியம் பழங்களை உதிர்த்து அறுவடை செய்து, மேலோடு மற்றும் விதையை நீக்கி விற்பனை செய்வதில் விவசாயிகளும், வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விற்பனைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் புளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    1கிலோ முதல் தர புளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஓராண்டுக்கு சமையலுக்கு தேவையான அளவிற்கு புளியை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வதில் பொதுமக்கள் மட்டுமின்றி உணவகம், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் மளிகை வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மே மாத இறுதியில் அறுவடை முடிவுக்கு வரும் என்பதால், தொடர்ந்து இரு மாதங்களுக்கு புளி விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 90 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.80.40-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த ஒரு வாரமாக சற்று ஏற்றமும் இறக்கமும் காணப்பட்ட நிலையில் அட்சய திருதியை நாளான இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

    கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,605-க்கும், ஒரு சவரன் ரூ.44,840-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 90 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.80.40-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400-க்கும் விற்பனையாகிறது.

    • செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
    • பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

    ஈரோடு:

    கோடை காலத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளில் முதலிடத்தில் இருப்பது மாம்பழம் தான். ஈரோடு மாவட்டத்தில் மாம்பழங்கள் குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்திற்கு அருகே உள்ள சேலம், கிருஷ்ணகிரி, சங்ககிரி, மேச்சேரி, ஆத்தூர், வனவாசி, நங்கவள்ளி, தலைவாசல் போன்ற பகுதியில் இருந்து மாம்பழங்கள் அதிக அளவில் விளைச்சலாகி வருகிறது.

    ஈரோட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட், சம்பத் நகர், பெரியார் நகர் உழவர் சந்தைகள் உட்பட அனைத்து கடைகளிலும் பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக பங்கனப்பள்ளி, செந்தூரம், மல்கோவா, கிளி மூக்கு போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. வ.உ.சி. மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

    சேலம், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் விளைச்சல் ஆகும். செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட செந்தூரம் இந்த ஆண்டு ரூ.80 முதல் ரூ. 110 வரை விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.30-க்கு விற்கப்பட்ட கிளி மூக்கு மாம்பழம் இந்த ஆண்டு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாம்பழம் வரத்து குறைந்து இருப்பது தான்.

    இதேபோல் பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இவற்றின் விலையும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

    ஈரோட்டிற்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி விட்டாலும் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது.

    ஓசூர், பெங்களூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இந்த மாம்பழங்கள் வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    ஈரோட்டில் கடந்த சில மாதங்களாகவே கடும் வெயில் வாட்டி வருவதால் மா மரத்தில் காய் பிடிக்கும் சீசனில் பூக்களிலேயே உதிர்ந்து விடுகிறது. மேலும் மாங்காய் முழு வளர்ச்சி பிடிக்காமல் வெம்பி விழுந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் தற்போது சீசன் தொடங்கியும் மாம்பழம் வரத்து குறைவாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றம் இருக்காது.
    • நாளை மறுநாள் மீண்டும் அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்பது தெரியவில்லை.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த 2 மாதங்களாக கடுமையாக உயர்ந்தது. அவ்வப்போது குறைந்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து அதிர்ச்சி அடைய வைத்தது. இம்மாதம் 3- வது முறையாக நேற்று தங்கம் புதிய உச்சத்தை தொட்டு கிராம் ரூ.5,720-க்கும்,பவுன் ரூ. 45,760-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில் இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் கிராம் ரூ. 70-ம் பவுன் ரூ.560-ம் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.5,650-க்கும், பவுன் ரூ. 45,200-க்கும் விற்பனை ஆகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த விலையில் மாற்றம் இருக்காது. நாளை மறுநாள் மீண்டும் அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்பது தெரியவில்லை.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.83-ல் இருந்து 81.50 ஆகவும், கிலோ ரூ.83 ஆயிரத்தில் இருந்து ரூ81,500 ஆகவும் குறைந்து விற்பனை ஆகிறது.

    • இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.
    • நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய்இடையாறு, குப்பிச்சிபாளையம், மோ கனுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 க்கும் விற்பனையானது.

    வரத்து குறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடுகளில் கனி வைத்து வழிபடுவர், கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது.
    • ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளது. இறைச்சி கடைக்காரர்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறும். மிளகாய் மற்றும் ஆடு, மாடு விற்பனைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சந்தையில், எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது.

    ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த நிலையில், கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்து 500 வரை விலை போனது. இன்று 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளது. இறைச்சி கடைக்காரர்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.ரம்ஜான் பண்டிகை எதிரொலி கொளத்தூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு 

    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • பூக்கள் விலை‌ உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.400- க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.660-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.320-க்கும், ரோஜா ரூ.260-க்கும், முல்லைப் பூ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.900-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும் ஏலம் போனது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ் புத்தாண்டையொட்டி பரமத்தியில் பூக்கள் விலை உயர்வு

    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
    • ஒரு கிராமுக்கு ரூ.1.20 காசுகள் உயர்ந்து 83 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.83,000-க்கும் விற்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ் புத்தாண்டு தினமான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,760-க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,720-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.1.20 காசுகள் உயர்ந்து 83 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.83,000-க்கும் விற்கப்படுகிறது. 

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையும் இன்று உயர்ந்து ஒரு கிராம் ரூ.81.40-ஆகவும், கிலோ ரூ.81 ஆயிரத்து 400-ஆகவும் விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. இம்மாதம் 5- ந்தேதி இதுவரை இல்லாத வகையில் சவரன் ரூ.45,520-ஆக அதிகரித்தது. பின்னர் சற்று குறைந்து சவரன் ரூ.45,120-க்கு விற்பனை ஆனது.

    கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவது இருந்த நிலையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, சவரனுக்கு ரூ. 400 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,680-க்கும் ஒரு சவரன் ரூ.45,440-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.81.40-ஆகவும், கிலோ ரூ.81 ஆயிரத்து 400-ஆகவும் விற்கப்படுகிறது.

    ×