என் மலர்
நீங்கள் தேடியது "தண்ணீரில் மூழ்கி பலி"
- சென்னிமலையில் குட்டையில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
- நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால், முடியவில்லை.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வாய்ப்பாடி அருகிலுள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி மல்லிகா. இவர்களது இளைய மகன் அஜய் (18). இவர் கொளத்துப்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அஜய் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வாய்ப்பாடி அருகிலுள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அஜய்க்கு நீச்சல் தெரியாது.
இவர்கள் குட்டையில் மீன் பிடித்துகொ ண்டிருந்தபோது அஜய் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார்.
உடனே நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.
உடனே இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தேடியபோதும் காப்பாற்ற முடியாமல் அஜயை பிணமாக மாலையில் மீட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபி (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தார்.
நேற்று மதியம் அவர் நண்பர்கள் 5 பேருடன் பாலவீடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். முதலில் கோபி கிணற்றுக்குள் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதுபற்றி அவர்கள் கோபியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் கோபியை மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து ராட்சத மோட்டார் கொண்டு வரப்பட்டு கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றினர். நள்ளிரவில் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் கோபியை பிணமாக மீட்டனர். இதனை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து பட்டாபிராம் உதவி கமிஷனர் வெங்கடேசன், முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.