என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழித்துறை"
- அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
- சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குழித்துறை:
வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க குழித்துறை ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் நவீன முறையில் இரும்பு மேம்பாலம் அமைக்கப் பட்டது.
இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது முதல் அடிக்கடி அப்பகுதியில் வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து கம்பி லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை கல்லுபாலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார்.
லாரி குழித்துறை மேம்பாலப்பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற கார் மற்றும் ஆம்னி பஸ்சை லாரி டிரைவர் முந்த முயன்றார்.
அவர் லாரியை வேகமாக இயக்கி வாகனங்களை முந்த முற்பட்டார். அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மற்றும் ஆம்னி பஸ் மீது உரசியது.
மேலும் சாலையின் நடுவே குறுக்கு மறுக்காக லாரி ஓடி உள்ளது. அப்போது எதிரே கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி வந்த லாரியை கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்த ஷாஜி (30) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது லாரி தாறுமாறாக ஓடி வருவதை கண்ட அவர் பயந்து வாகனத்தில் இருந்து குதித்து தப்பி உள்ளார்.
இதையடுத்து 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதி சுமார் 10 மீட்டர் தூரம் டாரஸ் லாரியை இழுத்து சென்று மேம்பாலத்தின் சுவரில் மோதி நின்றது.
இதில் 2 வாகனங்களின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்த நிலையில் லாரி டிரைவரின் கால்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி வெளியேற முடியாமல் பரிதவித்து உள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த குழித்துறை தீயணைப்பு துறையினர் அவரை சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் 2 லாரிகளின் டிரைவர்களும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்ப டுத்தினர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- விஜய்வசந்த் எம்.பி.தகவல்
- வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
நாகர்கோவில்:
விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:- குழித்துறை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கிராசிங் எண் 14-ல் ரெயில் போகும் சமயங்களில கேட் நீண்ட நேரமாக அடைத்து வைப்பதின் காரணமாக இருபுறம் அதிகமான வாகன போக்குவரத்து காரணமாக நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நடைக்காவு, சூழால், விளாத்துறை, ஊரம்பு, பைங்குளம், மங்காடு, நித்திரவிளை, முன்சிறை, புதுக்கடை, ஐரேனிபுரம், கொல்லஞ்சி, காரவிளை போன்ற இடங்களில் உள்ள பொதுமக்கள் மார்த்தாண்டம் ரெயில் நிலையம் மற்றும் மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்து செல்ல போக்குவரத்து நெருக்கடி காரணமாக சரியான நேரத்திற்குவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் குழித்துறை ரெயில் நிலையம் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
விஜய்வசந்த் எம்.பி. ரெயில்வே அதிகாரிகளையும், ரெயில்வே அமைச்சரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பாராளுமன்றத்தில் பேசியதின் மூலமாக ரெயில்வே நிர்வாகம் அந்த இடத்தை ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து முழு செலவையும் ஏற்று ரூ.45 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க முன்வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சீராகுவது மட்டுமல்லாது அப்பகுதி விரைவில் வளர்ச்சி பெறும். அதுபோல நீண்ட நாட்களாக விரிகோடு பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங் கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களும், வாகன ஓட்டிகளும் மார்த்தாண்டம், நாகர்கோவில், திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர்.
மாற்று இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் விரிகோட்டை சுற்றியுள்ள மக்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் பேசி முழு முயற்சி எடுத்து வருகிறேன். எனவே அப்பகுதி மக்களின் விருப்பத்தின் படி அவர்களின் கோரிக்கை ஏற்றவாறு விரிகோட்டில் விரைவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பாக மறை மாவட்ட இறைமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
- முதன்மை பணியாளர் ஜார்ஜை மீண்டும் பணி அமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என கோஷங்கள் எழுப்பினர்.
கன்னியாகுமரி:
காரங்காடு மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜார்ஜை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவரை பணி அமர்த்த வேண்டும் எனவும் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பாக மறை மாவட்ட இறைமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
குழித்துறை மறை மாவட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மரிய சேவியர் ராஜன் தலைமை தாங்கினார். மறை வட்ட போராட்ட குழு துணை தலைவர்கள் வர்க்கீஸ், அருள்ராஜ், ராஜா டைட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்ட குழு செயலர் டென்னிஸ் ஆன்றனிஸ், அருள்பணியாளர்கள் ராபர்ட், சேவியர் மைக்கேல், போராட்டக்குழு நிர்வாகிகள் கிறிஸ்டோபர், மைக்கேல்தாஸ், ஜெரோம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் முதன்மை பணியாளர் ஜார்ஜை மீண்டும் பணி அமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என கோஷங்கள் எழுப்பினர்.
- டிரைவரின் கால் முறிந்தது
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 31).
இவர் நெல்லை மாவட் டத்தில் இருந்து டெம்போ வில் வாழை கண்கள் ஏற்றி கொண்டு மார்த்தாண் டத்தை அடுத்த வெட்டு மணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டெம்போ பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி உள்ளது.
இதனால் டெம்போவின் முன்பகுதி சேதம் அடைந் துள்ளது. இதில் ஏற்பட்ட விபத்தில் டெம்போ ஓட்டுநர் இசக்யப்பனின் கால் முறிந்தது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொடரும் மர்மச் சாவுகளால் பரபரப்பு
- பல கோணங்களில் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் இன்று காலை பொது மக்கள் சாலையில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சாலையில் கிடந்த முதியவர் இறந்திருப்பது தெரிய வந்தது.
அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த அந்த முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரை யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா? அல்லது வேறு காரணங்களால் அவர் இறந்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் டிரைவர் மணிகண்டன் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று முதியவர் பிணமாக கிடந்துள்ளார். இந்த தொடர் சம்பவங்கள் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- இன்று பிரேத பரிசோதனை
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 41) கொத்தனார். இவர் நேற்று இரவு குழித்துறை ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பால்ராஜ் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கல்குளம் காயக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரபு (33) லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று இரவு இரணியல் அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக வந்த ரெயில் மோதி பிரபு இறந்துள்ளார். இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகர்கோ வில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பிரபு, பால்ராஜ் இருவரது உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படு கிறது.
- களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணி
- வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குழித்துறை பகுதியில் சட்டவிரோதமாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பெரிய பெரிய பாறாங் கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குழித்துறை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் ஜாக்கிஅமர் வாகனம் ஒன்று அனுமதி இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளரும் நிலத்தின் உரிமையாளரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்து பறிமுதல் செய்த வாகனத்தை போலீசார் காவல்நிலையம் கொண்டு சென்று வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழித்துறை பகுதியில் சமூக விரோதிகள் அதிகாரிகள் உதவியுடன் பெரிய பெரிய பாறைகளை உடைத்து கடத்துவது தொடர்கதையாக நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிய அனில்குமாரின் காலை பிடித்து தாயார் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.
- களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குழித்துறை அருகே கொல்லக்குடிவிளை பகுதி யை சேர்ந்தவர் அனில் குமார். இவர் வெளி நாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கொரோனா தொற்றுக்கு முன் ஊருக்கு வந்தவர். பின்னர் வெளி நாட்டுக்கு செல்லாமல் இப்போது ஊரில் உள்ளார். இவருக்கு திருமணம் ஆக வில்லை. இவர் தாயாருடன் குழித்துறை பகுதியில் வசித்து வருகிறார். இவ ருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்கவே இல்லை. இத னால் அனில்குமார் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
நேற்று இரவு அனில் குமார் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். இன்று காலை அவரது அறை கதவு திறக்கப்பட வில்லை. இதனால் அவரது தாயார் அனில்குமாரை கதவை திறக்குமாறு அழைத்தார்.நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறை கதவை உடைத்து பார்த்தபோது அனில்குமார் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி னார். அனில்குமாரின் காலை பிடித்து தாயார் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. அனில்குமார் தற்கொலை செய்து கொண் டது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
களியக்காவிளை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் விதமாக குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் இன்று களியக்காவிளையில் தொடங்கியது.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு 95 சதவீதம் நடைபெற்றுள்ளது. அதனை 100 சதவீதமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அதில் பங்களித்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது அதன் 2-ம் கட்டமாக குப்பை இல்லா குமரி எனும் திட்டத்தை அறிவித்து அதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என செயல்படுத்தி வருகிறோம். மக்கள் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர்கள் அழைத்து வாக்கத்தான் நிகழ்வை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இது நடைபெற இருக்கிறது.
பிளாஸ்டிக் ஒழிப்பில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பொதுமக்கள் தாங்களாக பிரித்து வழங்கி வருகிறார்கள்.
உறிஞ்சி குழி அமைத்து சுமார் 60 சதவீதம் வீடுகளில் கழிவுகள் வெளியில் விடவில்லை. குமரி மாவட்டமானது சுமார் 6 மாதத்திற்குள் குப்பையில்லா மாவட்டமாக மாறும் சூழல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு நடைபய ணத்திற்கு மார்த்தாண்டம் லிஸ்டர் சந்திப்பில் லிஸ்டர் ஹார்ட் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
மேலும் நடந்து வந்தவர்களுக்கு குளிர்பா னம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இயக்குநர் டாக்டர் அரவிந்த் மற்றும் லிஸ்டர் குழந்தையின்மை சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் ஆனந்தி விஜயன் ஆகியோர் அமைச்சர் மனோதங்கராஜிக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த விழிப்புணர்வு நடை பயணமானது குழித்துறை வரை சென்றது.
- தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர்
- சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களி லிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியா மலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட நான்கு கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- நகராட்சி ஆணையரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
- மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.
நாகர்கோவில்:
விஜய்வசந்த் எம்.பி. மார்த்தாண்டத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொது மக்களைச் சந்தித்து குறை களைக் கேட்டு பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அப்போது எம்.பி. அலுவ லகம் வருகை தந்த குழித் துறை நகராட்சி ஆணையர் ராமதிலகத்திடம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வசதி வாரியம் சாலையின் ஒரு பகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் பதித்து உள்ளன. பணிகள் முடிவடைந்த தும் சாலைகள் சரியாக மூடப்ப டாத காரணத்தினாலும் குண்டும் குழியுமாகப் போக்குவரத்துக்கும் மக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி அதற்கான பணிகள் எப்போது முடியும் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விஜய்வசந்த் எம்.பி. ஆணை யரிடம் கேட்டு அறிந்து விரைவாக பணிகள் முடிக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.
மேலும் மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியு மாக உள்ளது. அதனைச் சீரமைக்க வேண்டியும், மார்த்தாண்டம் மேம்பாலம் கீழே செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டியும், மற்றும் குழித்துறை நகராட்சி யிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மார்த்தாண்டம் மீன் சந்தை அருகே சேகரித்து வைக்கப்பட்டுள்ளதால் துர் நாற்றம் வீசி வருகிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகை யில் உள்ளதால் அந்த கூடத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது தூய்மை அலுவலர் ஸ்டான்லி குமார், நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ரீகன், வட்டார தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 19-ந் தேதி அக்சயா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
- தாயாரை பற்றி ஆபாசமாக அவதூறாக பேசி மிரட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக தெரிய வந்தது.
கன்னியாகுமரி:
குழித்துறையை அடுத்த மருதங்கோடு கழுவந்திட்டை காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ சுமா. கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் 2 பெண் குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
இவரது இளைய மகள் அக்சயா (வயது 16). செண்டை மேள கலைஞரான இவர் திருமணம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு பேண்ட் வாத்தியம் இசைக்கும் வேலை செய்து வந்தார்.
அப்போது உடன் பணி புரிந்த சுங்கான்கடையை சேர்ந்த சஜின் (24) என்ற வாலிபரை காதலித்து உள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி அக்சயா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்சயா இறந்தார்.
இது குறித்து மார்த்தா ண்டம் போலீசில் அக்சயா வின் தாயார் ஸ்ரீசுமா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அக்சயா தற்கொலை செய்வதற்கு முன்பு சஜின், தொலைபேசியில் பேசிய தாகவும், அப்போது அவரது தாயாரை பற்றி ஆபாசமாக அவதூறாக பேசி மிரட்டியதால் தான் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்ததாகவும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி சஜினை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்