என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாரதியார்"
- பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
- தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.
சீர்காழி:
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
154-வது தொகுதியாக சீர்காழிக்கு நேற்றுவந்தார். பின்னர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது
2024-ல் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு யாத்திரையில் பங்கேற்றுள்ளீர்கள். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நந்தனார் போன்ற மகான்கள் பிறந்த ஊரில் மகான்களின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த ஊர். சுதந்திர தாகம் தீட்டிய நீலகண்டபிரம்மச்சாரிக்கு ஒரு வேளை சாப்பிட உணவு இல்லை என பாரதியாரிடம் உணவுகேட்டார்.
அப்போது முண்டாசு கவிஞர் பாரதியார் தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என நீலகண்டபிரம்மச்சாரிக்காக பாடலை பாடினார். பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் வளாகத்தில் ஐம்பொன் சிலைகள், தமிழகத்தின் அரிதான 410, தேவார செப்பேடுகள் கிடைக்கப் பெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள். இவைகள் காலத்தின் பொக்கிஷம். கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், தேவார செப்பேடுகள் ஆகியவற்றை ஸ்ரீ சட்டை நாதர் திருக்கோவிலுக்கு உள்ளேயே தான் வைக்க வேண்டும். தவிர மியூசியத்தில் இருக்க கூடாது.
மயிலாடுதுறையை சுற்றிலும் நவகிரக கோவில்கள், சைவ வைணவ தளங்கள் ஆன்மீகவாதிகள் குடியிருக்க கூடிய எம்பி தொகுதியாக உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவின் ஆன்மீக தலங்களாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணத்தை மாற்றி காட்டுவோம். தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறை சென்னை வந்துள்ளார்.
- ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் மண்டபம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அம்மண்டபத்தையும் மகாகவி பாரதியார் உருவப் படத்தையும் திறந்து வைத்தார்.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை மேயர் பிரியா ராஜன், இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறை சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- யாது மாகி நின்றாய் - காளீ! எங்கும் நீநி றைந்தாய்
- சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்
பாரதியார் சென்னை, பிராட்வேயில் பணிபுரிந்தபோது அருகிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாக இருந்தது
அப்போது காளிகாம்பாள் முன் மெய்மறந்து நின்று பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள், `யாதுமாகி நின்றாய் காளீ' என்னும் இப்பாடல் குறிப்பிடத்தக்கது.
காளி ஸ்தோத்திரம்
யாது மாகி நின்றாய் - காளீ!
எங்கும் நீநி றைந்தாய்
தீது நன்மை யெல்லாம் - நின்றவன்
செயல்க ளன்றி யில்லை
போதும் இங்கு மாந்தர் - வாழும்
பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதி சக்தி, தாயே! - என்மீ
தருள் புரிந்து காப்பாய்!
எந்த நாளும் நின்மேல் - தாயே!
இசைகள் பாடி வாழ்வேன்;
கந்தனைப் பயந்தாய் - தாயே
கருணை வெள்ள மானாய்!
மந்தமாரு தத்தில் - வானில்
மலையி னுச்சி மீதில்
சிந்தை யெங்கு செல்லும் - அங்குன்
செம்மை தோன்று மன்றோ!
கர்ம யோக மொன்றே - உலகில்
காக்கு மென்னும் வேதம்
தர்மநீதி சிறிதும் - அங்கே
தவற லென்ப தின்றி
மர்ம மான பொருளாம் - நின்றன்
மலரடிக் கண் நெஞ்சம்
செம்மையுற்று நாளும் - சேர்ந்தே
தேசு கூட வேண்டும்.
என்ற னுள்ள வெளியில் - ஞானத்
திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும் - மேருக்
கோல மொத்த வடிவும்
நன்றை நாடு முனமு - நீயெந்
நாளு மீதல் வேண்டும்;
ஒன்றைவிட்டு மற்றோர் - துயரில்
உழலும் நெஞ்சம் வேண்டா
வான கத்தி னொளியைக் - கண்டே
மன மகிழ்ச்சி பொங்கி
யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி
எந்த நாளும் வாழ்வேன்;
ஞான மொத்த தம்மா! - உவமை
நானு ரைக்கொ னாதாம்!
வான கத்தி னொளியின் - அழகை
வாழ்த்து மாறி யாதோ?
ஞாயி றென்ற கோளம் - தருமோர்
நல்ல பெரொ ளிக்கே
தேய மீதோர் உவமை - எவரே
தேடியோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா - அழகாம்
மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் - ஆங்கே
நெஞ்சி ளக்க மெய்தும்
காளி மீது நெஞ்சம் - என்றும்
கலந்து நிற்க வேண்டும்;
வேளை யத்த விறலும் - பாரில்
வேந்த ரேத்து புகழும்
யாளி யத்த வலியும் - என்றும்
இன்பம் நிற்கும் மனமும்
வாழி யீதல் வேண்டும் - அன்னாய்!
வாழ்க நின்றன் அருளே.
சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும்
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும்
சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும்
என்ற பாரதியார் வாக்கிற்கிணங்க சக்தி சக்தி என்று சொல்லி சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
ஸ்ரீ காளிகாம்பாள் துதி -பொன்மணி வைரமுத்து
ஓம்காளி ஓம் காளி ஓம் காளி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
(ஓம் காளி ஓம்காளி)
உலகையாளும் ஓங்காரி ஓம் காளி ஓம்
உனதுபாதம் வேண்டும் வேண்டும் ஓம் சக்தி ஓம்
திசைகளெங்கும் நடனமாடும் ஓம் காளி ஓம்
தீயசக்தி மாயவேண்டும் ஓம் சக்தி ஓம்
(ஓம் காளி ஓம் காளி)
கரியமேனி கொண்டதாயே ஓம் காளி ஓம்
கண்திறந்து பார்க்கவேண்டும் ஓம் சக்தி ஓம்
அரியகாட்சி உந்தன்காட்சி ஓம் காளி ஓம்
அண்டமெங்கும் உந்தன் ஆட்சி ஓம் சக்தி ஓம்
(ஓம் காளி ஓம் காளி)
ஜதிகளிட்டு ஆடுகின்ற ஓம் காளி ஓம்
ஜயமளித்து பயமொழிக்கும் ஓம் சக்தி ஓம்
தகதகத்து ஆடுகின்ற ஓம் காளி ஓம்
பகைமுடித்து வரமளிக்கும் ஓம் சக்தி ஓம்
(ஓம் காளி ஓம் காளி)
பத்ரகாளி ருத்ரகாளி ஓம் காளி ஓம்
பக்தருக்கு சாந்தகாளி ஓம் சக்தி ஓம்
சத்யகாளி நித்யகாளி ஓம் காளி ஓம்
சக்தியூட்டி முக்திகாட்டு ஓம் சக்திஓம்
(ஓம் காளி ஓம் காளி)
வேண்டுதலை சொல்லுங்கள் -கவிக்குயில் விசாலி மனோகர்
விளக்கேற்றி வைக்கையிலே வீடுதேடி வந்தவளே
வீடுவந்து சௌந்தர்யம் கோடி கோடி தந்தவளே
உனக்கென்ற ஈடுஇணை உலகினிலே இல்லையடி
ஒருகோடி பிறப்பெனிலும் உனக்கே நான் பிள்ளையடி
யார்தடுத்த போதிலும்உன் சக்தியது குறைவதில்லை
போர்மூளும் போதிலும் நின் பக்கபலம் மறைவதில்லை
ஆதிசக்தி அன்னையிடம் அருள்கூர்ந்து வேண்டியபின்
பாதிமனம் தேவையில்லை பார்த்தருளுவாள் காளிகாம்பாள்
என்னவரம் வேண்டுமென்று இப்பொழுதே கேட்டுவிட்டாள்
முழுமனதாய் வழங்குதற்கு முன்வருவாள் காளிகாம்பாள்
சென்னபுரி வாழுகின்ற காளியிடம் வேண்டுதலை
ஓரிருநாள் சொல்லுங்கள், ஒருகோடி வெல்லுங்கள்.
- தமிழ் ஆசிரியை பாரதியாரை புகழ்ந்து கவிதை பாடினார்.
- மாணவியரின் “அச்சமில்லை” பாடலுக்கான நடனம் இடம் பெற்றிருந்தது.
திருப்பூர் :
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
விழாவின் தொடக்கமாக 9-ம் வகுப்பு மாணவி வரவேற்புரை வழங்க, தமிழ் ஆசிரியை பாரதியாரை புகழ்ந்து கவிதை பாடினார். பாரதியாரின் சித்திரம் மிக பிரம்மாண்டமாக வரையப்பட்டிருந்தது.
கலைநிகழ்ச்சிகளாக மாணவ, மாணவியர்களது நடனம், பாரதியார் பற்றிய சிறப்புரை, பாரதியார் வேடம் அணிந்த ஏராளமான மாணவ, மாணவியரின் "அச்சமில்லை" பாடலுக்கான நடனம் இடம் பெற்றிருந்தது.
விழாவில் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் 9-ம் வகுப்பு மாணவி நன்றி கூறினார்.
- நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும்.
- திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என பல்கலைக்கழக செனட் உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்பூர் குமரனின் தியாகம் மறக்க முடியா தது. இவரது வாழ்க்கையும், அவரது போராட்ட வழிமுறைகளும், நெஞ்சுறுதியும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கக்கூடியது.
இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது என்பது அவருக்கு செலுத்தும் பெரும் புகழஞ்சலியாக இருக்கும்.
குறிப்பாக நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும். இதற்காகவே, திருப்பூர் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் எழுதிய திருப்பூர் குமரன் நாடக நூல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இத்துடன் உள்ளூர் வரலாற்றையும், வளர்ச்சியையும் மாணவர்களுக்கும் எடுத்துக்கூறும் விதமாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
- பாரதியார் பாடலை அருணாச்சல பிரதேச பெண்கள் இருவர் தூய தமிழில் பாடுகின்றனர்.
- அவர்களது பாட்டைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பாராட்டியுள்ளார்.
புதுடெல்லி:
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக, விடுதலை வேட்கை கொண்ட பாடல்கள் மூலம் சுதந்திரத்திற்காக ஏங்கி இருந்த இந்திய மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டியவர் மகாகவி பாரதியார்.
இதற்கிடையே, பாரதியாரின், பாருக்குள்ளே நல்ல நாடு எனும் தமிழ்ப் பாடலை பிழையில்லாமல், தூய தமிழில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண் சகோதரிகள் பாடியுள்ளனர்.
இந்நிலையில், இதனை டுவிட்டரில் பார்த்த பிரதமர் மோடி, 'இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா, உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்' என தமிழில் பாராட்டி அசத்தியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்