search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவக்குமார்"

    • காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகா உள்ளது.
    • காங்கிரஸ் அரசுக்கு எதிரான சதியின் ஒரு பகுதிதான் முடா மோசடி குற்றச்சாட்டு.

    மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (MUDA) மனைகள் ஒதுக்கியது தொடர்பான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த வாரம் சித்தராமையா முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மைசூரு நோக்கி பாஜக-வினர் பேரணி நடத்த உள்ளனர்.

    இந்த நிலையில் முடா ஊழல் குற்றச்சாட்டு காங்கிரஸ் அரசுக்கு எதிரான பாஜக சதியின் ஒரு பகுதி என துணை முதல்வர் சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வெற்றிபெறும் என பாஜக ஒருபோதும் நினைக்கவில்லை. ஆகவே, அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், முடிந்தவரை பேரணிகளை நடத்தட்டும். அவர்களுடைய பிரசாரத்திற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிடுவோம்.

    இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    முடா (MUDA) முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வீட்டுமனை அமைப்பதற்காக 3.16 ஏக்கருக்கும் அதிகமாக 14 இடங்களை ஒதுக்கியதாக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை குற்றம்சாட்டியுள்ளன.

    எந்த தவறும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கும் சித்தராமையா, இந்த நிலங்கள் 2021-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருக்கும்போது ஒதுக்கப்பட்டது. என்னுடைய மனைவி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீட்டுமனை ஒதுக்க ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என்றார்.

    மேலும், முடா தனது மனைவியின் சொத்தை ஆக்கிரமித்துள்ளதாக முதல்வர் கூறி வந்தார். இதுகுறித்து முடா அதிகாரிகளின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றபோது, அவர்கள் தங்கள் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்கு பதிலாக மாற்று இடங்களை ஒதுக்கீடு செய்தனர் என்றார்.

    இது தொடர்பாக சிவக்குமார் கூறுகையில் "நிலத்தை இழந்த பலர் மாற்று இடங்களை பெற்றுள்ளனர். மற்றவர்கள் மாற்று தளங்களைப் பெற்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் அளிப்பார். நானும் தகவல் சேகரித்து வருகிறேன். இது தொடர்பாக முதல்வர் கேள்வி எழுப்பியபோது, அவருக்கு மாற்று நிலத்தை முடா வழங்கியது" என்றார்.

    • விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
    • என்னை விட பழ.கருப்பையா 2 வயது சிறியவர். என்றாலும் அவரது காலில் விழுந்து வணங்குகிறேன்.

    பிரபல நடிகரான சிவக்குமார் சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் மட்டுமின்றி யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். பல்வேறு புத்தக வெளியீடு மற்றும் இலக்கிய விழாக்களில் சிறப்புரையாற்றி வருகிறார்.

    அந்த வகையில் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னை விட பழ.கருப்பையா 2 வயது சிறியவர். என்றாலும் அவரது காலில் விழுந்து வணங்குகிறேன் என்று பழ.கருப்பையா காலில் விழுந்து வணங்கினார். விழா முடிந்து சிவக்குமார் கீழே இறங்கியபோது முதியவர் ஒருவர் ஆர்வத்துடன் அவருக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அவரிடம் இருந்த சால்வையை சிவக்குமார் பறித்து எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழாவில் தன்னோடு செல்பி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை சிவக்குமார் பறித்து எறிந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது சிவக்குமார் சால்வையை பறித்து எறிந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல் கட்ட பணிகளுக்காக கடந்த பா.ஜ.க ஆட்சியில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது.
    • பிரதமருக்கு நெருக்கமான தேவகவுடா இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவாரா?

    பெங்களூரு:

    கர்நாடகாவில் கனகபுரா என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டது. ரூ.9 ஆயிரம் கோடியில் இந்த திட்டத்ததை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த அணை மூலம் 67.14 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி கபினி, கிருஷ்ணராஜர் சாகர் அணை கட்டி கர்நாடக அரசு 115 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை கட்டினால். தமிழகத்தில் பாயும் காவிரி நீரோட்டம் குறைந்து பாலைவனமாக மாறிவிடும் என்பதால், தமிழகத்தில் மேகதாது திட்டத்திற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஆனாலும் கர்நாடக அரசு அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரித்து மத்திய சுற்றுச் சூழல் துறைக்கு ஒப்புதலுக்கு அனுப்பியது. மேலும் முதல் கட்ட பணிகளுக்காக கடந்த பா.ஜ.க ஆட்சியில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகளும், தமிழக அரசும் கடுமையாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

    இதற்கிடையே கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சியும் மேகதாது அணையை கட்ட தீவிரம் காட்டியது. துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார் நீர்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேகதாது அணை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1000 கோடி நிதியை நிலம் கையகப்படுத்துவதற்கு பயன்படுத்தி இருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை என்றும் இத்தகைய திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் பேசினார். அவரது பேச்சு தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கர்நாடக முதல் மந்திரி டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநிலம் பெரியபட்னா தாலுகாவில் உள்ள 79 கிராமங்களில் உள்ள 150 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்படும். பெங்களூருவின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவதற்காக முன்வைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு நிலம் வழங்க சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா மற்றும் பெங்களூரு கிராமபுற மாவட்டங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அவர்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை அதிகாரிகள் மர கணக்கெடுப்பை தொடங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா பாதயாத்திரை சென்றது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய டி.கே. சிவக்குமார், பிரதமருக்கு நெருக்கமான தேவகவுடா இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவாரா? என்றார். மேலும் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற தவறியதாக பா.ஜ.க எம்.பி.க்கள் மீதும் குற்றம் சாட்டினார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு தீவிரம் கட்டி வருவதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28-ந்தேதி காலமானார்.
    • வருகிற ஜன.19-ந்தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெறு

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    நினைவிடத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் நினைவிடத்திற்கு நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விஜயகாந்த் மறைவையொட்டி நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19-ந்தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும்.

    புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை பற்றி அன்று நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    அரசுக்கும் சில கோரிக்கைகள் வைக்க இருக்கிறோம். அவர் ஒரு நல்ல ஆளுமை. நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது பல சவால்களை சந்தித்து சாதித்துள்ளார்.

    எந்த வேலை என்றாலும் முன்னின்று செய்வார். அவரது புகழ் என்றும் ஓங்கி நிலைத்திருக்கும். நம்மிடம் அவர் இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

    வருங்கால முதலமைச்சராக வேண்டியவர் விதி வசத்தால் போய்விட்டார். அவருடன் நான் சில படங்களில் நடித்திருக்கிறேன். கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மெரினா அரங்கத்தில் கலைஞருக்கு மிகப்பெரிய விழாவை விஜயகாந்த் எடுத்தார்.

    விழாவில் 3½ லட்சம் பேர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கலைஞர் இன்னும் கொஞ்சம் தூரம் நீங்கள் என்னை கடந்து சென்றுவிட்டால் நான் முதலமைச்சராகி விடுவேன் என்றார். அவ்வாறே 1 மாதத்தில் கலைஞர் முதலமைச்சர் ஆனார். மலேசியாவில் கமல், ரஜினி உள்பட தமிழ் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நட்சத்திர விழாவின் மூலம் நடிகர் சங்க கடனை அடைத்தார். அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறினார்.

    • பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகா காங்கிரஸ் மந்திரிகளை தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறக்கிவிட்டுள்ளது
    • கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம் முனைப்பு காட்டி வருகிறது.

    இந்த தேர்தலில் கர்நாடகா பார்முலாவை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது பெண்களுக்கு மாதந்தோறும் 2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் கர்நாடக மாநிலத்திலேயே நிறைவேற்றப்படவில்லை இங்கும் நிறைவேற்றமாட்டார்கள் என சந்திரசேகர ராவ் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகா காங்கிரஸ் மந்திரிகளை தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறக்கிவிட்டுள்ளது

    கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா துணை முதல் மந்திரி சிவக்குமார் மற்றும் 10 அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவக்குமார் பிரசாரம் செய்யும் பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.

    நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சித்தராமையா பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும்.

    தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தனது 6 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.

    • வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு
    • விசாரணை நடத்த இருந்த நிலையில், உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது

    கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை நீக்கக்கோரிய சிபிஐ மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி சிபிஐ விசாரணைக்கு கர்நாடாக மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து, சிபிஐ தாக்கல் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதிகள் சி.டி. ரவிக்குமார், சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்ல. ஆனால், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவாக முடித்து வைக்க வேண்டுகோள் விடுக்க சிபிஐ-க்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கூறினர்.

    கடந்த 10-ந்தேதி சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.

    2020-ம் ஆண்டு சிவகுமாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது. இரண்டு வருடங்களாக நடைபெற்ற விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

    2017-ம் ஆண்டு சிவக்குமாருக்கு சொந்தமான இடத்தில் வருமானவரித்துறை சோதனையிட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதனைத்தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அனுமதி கொடுக்க, அக்டோபர 3-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சிவக்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    • தமிழர்களின் வரலாற்று பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
    • அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    கீழடி அருங்காட்சிய கத்தை ஏராளமான திரை பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    ×