என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி"

    • ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஆடம் போடே கூறுகிறார்.
    • அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெண்களை விட ஆண்களே சற்று அதிகமாக காதலில் விழுகின்றனர், ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் துணையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வு தெரிவிக்கிறது.

    ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த Peer review மதிப்பாய்வில், ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்னதாகவே காதலில் விழுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

     இந்த ஆய்வின் ஆசிரியரும், ANU முனைவர் பட்ட மாணவருமான ஆடம் போடே கூறுகையில், "ஆண்கள் தங்கள் காதலியின் மனதை கவர தங்கள் அர்ப்பணிப்பைக் அதிகம் காட்ட வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று தெரிவிக்கிறார்.

    ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

    • மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ரிசிராஜ் குவாலியர் போலீசில் புகார் செய்தார்.
    • இந்தூரில் காதல் ஜோடி தங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ரிசிராஜ் என்ற சஞ்சு ஜெய்ஸ்வால் மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, ஹர்ஷிதா என்ற மகள், ஒரு மகன் உள்ளனர்.

    ஹர்ஷிதா அந்த பகுதியை சேர்ந்த வேற்று சமூக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபருடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஹர்ஷிதா வீட்டை விட்டு சென்று விட்டார்.

    மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ரிசிராஜ் குவாலியர் போலீசில் புகார் செய்தார். போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர்.

    இந்தூரில் காதல் ஜோடி தங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து காதல் ஜோடியை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    கோர்ட்டு விசாரணையில் நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவரோடு தான் நான் செல்வேன் என்றும் ஹர்ஷிதா கூறினார்.

    ரிசிராஜ் மற்றும் அவரது மனைவி தனது மகளிடம் எவ்வளோமன்றாடி கேட்டும் ஹர்ஷிதா கணவரை விட்டு வரமாட்டேன் என்று தெரிவித்தார். இதனால் ரிசிராஜ் விரக்தி அடைந்தார்.

    குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக மகள் திருமணம் செய்ததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.

    மேலும் அங்கு சோதனை நடத்திய போது உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. தனது மகளின் ஆதார் அட்டையில் அந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில் ஹர்ஷிதா நீ செய்தது தவறு. நான் கிளம்புகிறேன். உங்கள் இருவரையும் நான் கொன்றிருக்கலாம். ஆனால் என் மகளை நான் எப்படி கொல்ல முடியும். ஒரு தந்தையின் வலி யாருக்கும் புரியவில்லை. ஒரு முழு குடும்பமும் அழிக்கப்பட்டு விட்டது. இப்போது சமூகத்தில் எதுவும் மிச்ச மில்லை என்று எழுதியுள்ளார்.

    மேலும் அவர் பெற்றோரின் உரிமைகள் மற்றும் வயது வந்த குழந்தைகள் சம்பந்தப்பட்ட சட்ட செயல்முறைகள் குறித்தும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
    • திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ். அதே ஊரை சேர்ந்தவர் மிருதுளா. இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வந்தனர். பள்ளியிலும் ஒன்றாக படித்து வந்தனர்.

    அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

    கடந்த 1961-ம் ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த காலம். காதல் திருமணம் என்பது அரிதானது.

    இதனால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

    இதனால் ஹர்ஷ் மற்றும் மிருதுளா பள்ளி பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி எளிமையான முறையில் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை என சபதம் ஏற்றனர்.

    இந்த நிலையில் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கினர்.

    அவர்களுக்கும் குழந்தை பிறந்து மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேர குழந்தைகள் என பெரிய குடும்பமாக வளர்ச்சி பெற்றது.

    பேரன், பேத்திகளுடன் வாழ்ந்தாலும் தங்களுடைய திருமணம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நடைபெறவில்லை. பிரமாண்ட முறையில் விருந்து வைக்கவில்லை என வயதான பிறகும் தம்பதி ஏக்கத்துடன் இருந்தனர்.

    64 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகன்கள் தங்களது பெற்றோர் எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பெரிய திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் நடந்தன.

    இன்னிசை கச்சேரி ஆட்டம், பாட்டம் என திருமண மண்டபம் களை கட்டியது. தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேர குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண விழாவில் போட்டோ ஷூட் நடந்தது. மண மேடையில் மாலையும் கழுத்துமாக நின்ற தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

    மேலும் செல்பி எடுத்துக் கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    இந்த திருமண வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் இந்த தலைமுறைக்கு நீங்கள் முன்மாதிரி என பதிவு செய்து வருகின்றனர்.

    • காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்
    • திருமணம் செய்து கொண்டனர்

    கரூர்

    கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம்.

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் துர்கா தேவி (வயது 21). இவர், எதிர் வீட்டில் வசித்து வரும் அமீர் பாபு என்பவரின் மகன் ஏஹயா பாட்ஷா என்பவரை சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு பேரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காதலர்கள் இருவரும் நண்பர்கள் உதவியுடன் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், தங்கள் பெற்றோர்களால் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையுடன், மனு வழங்கினர். இதனை தொடர்ந்து போலீசார் இரண்டு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால். வயதை காரணம் காட்டி, காதல் ஜோடிகளுக்கு அறிவுரை வழங்கி பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.

    புதுமண தம்பதிகளாக மாலையும், கழுத்துமாக வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே பெரும் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம்.அவரது மகன் விண்ணரசன் (28), பொக்லைன் எந்திரம் ஆப்ரேட் டராக உள்ளார். இவரும் பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகள் கிருபாசினி (19), என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

    இவர்களின் காதல் இரு வீட்டார் பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன ஜைனுதின் தலைமையில் மயிலம் போலீஸ்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.அங்கு போலீசார் விசாரணை செய்வதற்கு மறுத்ததாக தெரிவிக்கிறது.

    இதனால் நேற்று திண்டிவனம் அடுத்த தீவனூரில் விநாயகர் கோவிலில் திருமணம்செய்து கொண்டனர். பின் னர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள் ளனர். அங்கிருந்து காதல் ஜோடியை திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு காதல் ஜோடி திருமண கோலத்தில் வந்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை செய்ததில், இருவரின் சம்மதத்தின் பேரில் திருமணம் நடை பெற்றதாகவும், இருவரும் சேர்ந்து வாழப்போவதாக வும் தெரிவித்தனர்.இதனையடுத்து இருவரையும் விண்ண ரசன் பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

    • இளம்பெண் பூஜாவுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்
    • போலீஸ் தேடுவதை அறிந்த லோகேஷ், உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் பூஜா (வயது 19) என்பதும், ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    அந்தப் பெண் லோகேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும், இருவரும் இன்று தனியாக காட்டுப்பகுதியில் சந்தித்தபோது காதலிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால், ஆத்திரத்தில் தன்னை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் லோகேஷை தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்த லோகேஷ், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பூஜாவுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • மார்த்தாண்டம் தொழிலாளியை இரும்பு கம்பியால் குத்திய உறவினர்
    • தடுத்த சப்-இன்ஸ்பெக்டரும் படுகாயம்

    நெல்லை:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள கருப்புக் கட்டி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர் கோகுல் சந்திரசேகர்

    (வயது 23).

    இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவானி (20) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்க ளது காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் கடந்த 3-ந் தேதி பவானி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காதல் ஜோடி, நாகர்கோவில் சென்று அங்குள்ள கோவி லில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் பவானியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் காதல் ஜோடி யான பவானி-கோகுல் சந்திரசேகர் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு அவர்களிடமும் பவானி குடும்பத்தினரிடமும் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

    அப்போது பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து கோகுல் சந்திரசேகரின் கழுத்தில் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையின் போது காதல் திருமணம் செய்த வாலிபர் குத்தப்பட்டதை கண்ட, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் மேலும் அசம் பாவித சம்பவம் ஏற்படாத வகையில் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கோகுல் சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உள்ளார்.

    • 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்..
    • காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது. 21). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மத் அசன் (22) என்பவரும் ேவலை பார்த்து வருகிறார். அப்போது 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்.  இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    அதன்பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    • காதலர்கள் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • இருவரது பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பலக்கனூத்தை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஸ்பாண்டி(23). இவரது வீட்டிற்கு அருகே திண்டிவனத்தை சேர்ந்த செல்வன் மகள் மாலினி(22) என்பவர் தனது பாட்டி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதுகுறித்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே அவர்கள் காதலை கண்டித்தனர். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கவும் தொடங்கினர். இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    தாங்கள் சேர்ந்து வாழ்ந்தால் இருவீட்டாரும் பிரச்சினை செய்வார்கள் என பயந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இருவீட்டாரிடமும் எழுதி வாங்கி கொண்டனர்.

    இதனைதொடர்ந்து காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

    • ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் வசித்து வருபவர் ராமு மகன் வீராச்சாமி (வயது 32). இவர் படித்த பட்டதாரி ஆவார். மேலும் இவர் புதுக்கோட்டையில் ஜவுளி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தெற்கு பகுதியை சேர்ந்த கணேசன் மகள் முருகஜோதி (23) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இரு குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இரு குடும்பத்தாரும் சமரசமாக பேசிக்கொண்டனர். பின்னர் இரு குடும்பத்தார்களும் போலீசாரிடம் சமரசம் எழுதிக் கொடுத்தனர். பின்னர் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகளை இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


    • காதலருடன் பழனிமலைக்குச் சென்று இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • காதல் ஜோடியை பல்லடம் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அகிலாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் தர்ஷினி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தர்ஷினியின் பெற்றோர்கள் அவரை வெளியில் விடாமல் வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டிலிருந்து தப்பி காதலருடன் பழனிமலைக்குச் சென்று இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தர்ஷினியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தங்களைப் கண்டு பிடித்தால் இருவரையும் பிரித்து விடுவார்கள் என பயந்த காதலர்கள், பல்லடம் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் விசாரணை செய்த நீதிபதி, இருவரும் மேஜர் என்பதாலும், இருவரின் விருப்பப்படியே பதிவு திருமணம் நடந்துள்ளதாலும், அந்தப் பதிவுத் திருமணம் செல்லும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காதல் ஜோடியை பல்லடம் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    • இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார்.
    • வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இளந்துறை மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் மணிகண்டன்(வயது23) டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். என்பவரும் இதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மகள் ரேனுகா(23) பி.எஸ்.சி. படித்துள்ளார். ஆகிய இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் செல்போ னில்தொடர்பு கொண்டு இருவரையும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் நிலையம் வர வைத்து விசாரணை செய்தனர்.

    மணிகண்டனும் ரேணுகாவும் கடந்த 8 வருடங்களாக வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாகவும் இரு விட்டாரம் திருணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவி த்தனர். இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில் மணிகண்டன் ரேணுகா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் திருவெண்ணைநல்லூர் போலீசார் அறிவுரைகளை வழங்கி மணிகண்டன் ரேணுகாவையும் பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    ×