என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெகமம்"
- ரங்கம்புதூரில் கக்கடவு, ரங்கம்புதூர், மூட்டாம்பாளையம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் இரண்டாமாண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
- 200 மீட்டர், 300 மீட்டர் தூரம் காளைகள் சீறிப்பாய்ந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோைவ:
நெகமம் அடுத்த ரங்கம்புதூரில் கக்கடவு, ரங்கம்புதூர், மூட்டாம்பாளையம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் இரண்டாமாண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
இதில் பழனி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பொள்ளாச்சி, மூலனூர், செஞ்சேரிமலை, சாளையூர், கரட்டுமடம், ஆனைமலை, வேட்டைகாரன்புதூர், கோட்டூர், மலையாண்டிபட்டினம், அங்கலக்குறிச்சி, காளியாபுரம், நெகமம், செட்டியக்காபாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, எரிசனம்பட்டி, ஆவலப்பம்பட்டி, சடையபாளையம், காளியப்பம்பாளையம், தேவிபட்டணம், புரவிபாளையம், வடக்கிபாளையம், சமுத்தூர், மடத்துக்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், துங்காவி ஆகிய பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன.
இதில் 200 மீட்டர், 300 மீட்டர் தூரம் காளைகள் சீறிப்பாய்ந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரேக்ளா பந்தயத்தை காண அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
- ஒவ்வொரு ஊராட்சியில் ஊராட்சிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் பல்வேறு வகைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
- பழமையான ஊராட்சி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நெகமம்:
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஊராட்சியில் ஊராட்சிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் பல்வேறு வகைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் செட்டியக்காபாளையம் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு செயல்பட்டு வந்த ஊராட்சி மன்ற அலுவலகம் பழைமையான கட்டிடம் என்பதால் அவ்வப்போது மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. மேலும் மழை காலத்தில் தண்ணீர் கசிந்து உள்ளே இருந்த தளவாட பொருட்கள் அனைத்தும் நனைந்து வீணாகி வந்தன.
இதனால் பழமையான ஊராட்சி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அங்குள்ள நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், வீட்டுவரி, குடிநீர் கட்டணம், மற்றும் அரசு அலுவல் தொடர்பாகவும் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
நூலக கட்டிடம் பழைய கட்டிடமாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வேகமாக வடிகிறது. இதன் காரணமாக தளவாட பொருட்கள், முக்கிய ஆவணங்கள் நனையும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஆவணங்களை அங்கு வைக்க முடிவதில்லை. இடவசதியும் குறைவாக உள்ளது.
பொதுமக்கள் அலுவ லகத்திற்கு வந்து செல்லவும் சிரமமாக உள்ளது. இதையடுத்து செட்டியக்காபாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு மாதங்கள் பல ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது அந்த இடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
செட்டியக்காபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் தற்போது நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நூலக கட்டிடம் ஏற்கனவே பழமையான கட்டிடம் அதுவும் சிதலமடைந்து, மழைக்காலத்தில் மேற்கூரையில் தண்ணீர் தேங்கி உள்புறம் அதிகளவில் கசிந்து வருகிறது.
மேலும் இடவசதியும் பற்றாக்குறை இதனால் பொதுமக்கள் அங்கு சென்று வர அச்சம் அடைகின்றனர். ஊராட்சி பணியாளர்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தயாராக உள்ள புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
- வடசித்தூர் சமத்துவபுரம் பகுதியில் வீடுகள் பழுதுபார்க்கும் பணியை பார்வையிட்டார்.
- பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு சத்துணவு பொருட்கள், முட்டைகள் இருப்பில் உள்ளனவா என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
நெகமம்:
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜி.எஸ். சமீரன் ஆய்வு செய்தார்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் காட்டம்பட்டி, வடசித்தூர் ஆகிய பகுதிகளில் ஊரக பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதின் மூலம் கிராம புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் வகையில் கிணத்துக்கடவு- காட்டம்பட்டி வரை 7.78 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை ரூ.10.15 கோடி மதிப்பில் இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
மேலும் வடசித்தூர் சமத்துவபுரம் பகுதியில் வீடுகள் பழுதுபார்க்கும் பணியை பார்வையிட்டார். பின் வடசித்தூர் தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து கலெக்டர் சமீரன் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடம் உரையாற்றினார்.
அப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு சத்துணவு பொருட்கள், முட்டைகள் இருப்பில் உள்ளனவா என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.
நெகமம்:
நெகமம் பகுதியில் கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அடிக்கடி வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிபவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காண்காணித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது நெகமத்தில் நான்கு ரோடு சந்திப்பு, வடசித்தூர், நெகமம் போலீஸ் நிலையம் உள்பட 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
மேலும் காட்டம்பட்டி பிரிவு அருகே நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.இந்த கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
திருப்பூர்- பொள்ளாச்சி மெயின் ரோடு, உடுமலை - திருப்பூர் ரோட்டில் நாளுக்கு நாள் அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால் இந்த மெயின் ரோட்டில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் இரு சக்கர வாகனத்தில் 3 பேர், 4 பேர் பயணம் செய்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நெகமம் போலீசார் ஒருவர் கூறியதாவது:-காவல் துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் நெகமம் மற்றும் வடசித்தூர் பகுதியில் 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும் கூடுதலாக ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், செங்குட்டைப்பாளையம், பனப்பட்டி, மெட்டுவாவி, கக்கடவு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். இதை அப்பகுதி மக்கள் முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போது கிராமங்களில் திருட்டு சம்பவங்கள், தடுக்க ஏதுவாக இருக்கும். இதை கிராம பகுதி மக்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நெகமம்:
ஒடிசாவை சேர்ந்தவர் மனோஜ்(வயது35). இவர் கோவை மாவட்டம் நெகமம் அடுத்த கள்ளிப்பட்டியில் உள்ள தனியார் நார் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மனோஜ் மற்றும் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் நார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மனோஜ் தனது குடும்பத்தினர் மற்றும் பொருட்களுடன் சரக்கு வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்