search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெகமம் அருகே செட்டியக்காபாளையம் ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும்
    X

    நெகமம் அருகே செட்டியக்காபாளையம் ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும்

    • ஒவ்வொரு ஊராட்சியில் ஊராட்சிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் பல்வேறு வகைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
    • பழமையான ஊராட்சி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    நெகமம்:

    கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஊராட்சியில் ஊராட்சிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் பல்வேறு வகைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் செட்டியக்காபாளையம் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு செயல்பட்டு வந்த ஊராட்சி மன்ற அலுவலகம் பழைமையான கட்டிடம் என்பதால் அவ்வப்போது மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. மேலும் மழை காலத்தில் தண்ணீர் கசிந்து உள்ளே இருந்த தளவாட பொருட்கள் அனைத்தும் நனைந்து வீணாகி வந்தன.

    இதனால் பழமையான ஊராட்சி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அங்குள்ள நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், வீட்டுவரி, குடிநீர் கட்டணம், மற்றும் அரசு அலுவல் தொடர்பாகவும் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

    நூலக கட்டிடம் பழைய கட்டிடமாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வேகமாக வடிகிறது. இதன் காரணமாக தளவாட பொருட்கள், முக்கிய ஆவணங்கள் நனையும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஆவணங்களை அங்கு வைக்க முடிவதில்லை. இடவசதியும் குறைவாக உள்ளது.

    பொதுமக்கள் அலுவ லகத்திற்கு வந்து செல்லவும் சிரமமாக உள்ளது. இதையடுத்து செட்டியக்காபாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு மாதங்கள் பல ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது அந்த இடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    செட்டியக்காபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் தற்போது நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நூலக கட்டிடம் ஏற்கனவே பழமையான கட்டிடம் அதுவும் சிதலமடைந்து, மழைக்காலத்தில் மேற்கூரையில் தண்ணீர் தேங்கி உள்புறம் அதிகளவில் கசிந்து வருகிறது.

    மேலும் இடவசதியும் பற்றாக்குறை இதனால் பொதுமக்கள் அங்கு சென்று வர அச்சம் அடைகின்றனர். ஊராட்சி பணியாளர்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தயாராக உள்ள புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

    Next Story
    ×