என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அருமனை"
- நீண்ட காலமாக கொடி காய்ந்த பின்னும் அறுவடை செய்யப்படவில்லை
- சுமார் 8 அடி பள்ளத்தில் காச்சில் கிழங்கானது முழுமையாக காணப்பட்டது.
கன்னியாகுமரி:
அருமனை அருகே மாலைக்கோடு பகுதியில் விளை நிலத்தில் பிரதீஷ்குமார் என்ற விவசாயி பல வகை கிழங்கு வகைகள் பயிரிட்டு வருகிறார். கொடி வகை கிழங்கு வகைகள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் அந்த கொடி முழுவதும் காய்ந்து விடுகிறது. அதன் பிறகு அறுவடை செய்வது வழக்கம். இவரது தோட்டத்தில் நீண்ட காலமாக கொடி காய்ந்த பின்னும் அறுவடை செய்யாத காச்சில் பயிரானது இருந்தது.
விவசாயி பிரதீஷ் குமார் நிலத்தில் இருந்த காச்சில் பயிரிட்ட இடத்தை தோண்ட ஆரம்பித்தார். சிறிது நேரம் தோண்டிய பிறகும் கிழங்கு நீளமாக சென்று கொண்டிருந்தது. இதனால் அகலமாக தோண்டி சுமார் 8 அடி பள்ளத்தில் காச்சில் கிழங்கானது முழுமையாக காணப்பட்டது. இதனை கண்டு விவசாயி மகிழ்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினரை அழைத்து காட்டியுள்ளார் அனைவரும் இந்தகாச்சில் கிழங்கை வியப்புடன் பார்த்தார்கள். இதனுடைய எடை 45 கிலோவாகவும் உயரம் 7 அடியாகவும் இருந்தது.பார்த்தவர்கள் இதுபோன்ற அபூர்வமான கிழங்கை நாங்கள் பார்த்ததில்லை என்று கூறி சென்றனர்.
கன்னியாகுமரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
குமரி மாவட்டம் அரு மனை கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் 25-வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சி இன்று (வெள்ளிக் கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து சமூக நல்லிணக்க மாநாடு நடை பெற உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய்வசந்த், செல்லக்குமார், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் துரை வைகோ, எஸ்.ஆர்.எம். கல்வி குழும தலை வர் ரவி பச்சமுத்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, மாநில தலைவர் முபாரக், பெங்களூர் டாக்டர் ராபர்ட் கிறிஸ்டோபர், நடிகரும் டைரக்டருமான தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இந்திய குடியரசு கட்சி தமிழக தலைவர் சூசை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் மாவட்ட முக்கிய பிரமுகர்கள், இந்நாள், முன்னாள் பேராயர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டில் பங்கேற்ப தற்காக சென்னையில் இருந்து திருமாவளவன் திருவனந்தபுரம் வருகிறார்.அங்கிருந்து இன்று மாலை கார் மூலம் அருமனை வருகிறார். அவருக்கு கட்சி யின் சார்பில் களியக்கா விளையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படு கிறது. இந்த நிகழ்ச்சியில் மதசார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு
- இந்த ஆண்டு வெள்ளிவிழா 3 நாட்கள் நடத்த தீர்மானிக்கப் பட்டது.
நாகர்கோவில்:
அருமனை கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் 25-வது கிறிஸ்துமஸ் விழாவின் ஆலோசனை கூட்டம் இயக்க செயலாளர் ஸ்டீபன் தலைமையில் நடந்தது. டென்னிஸ், களியல் சிங், ஜோஸ் செல்வன், கென்னத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஸ்டர் தேவ சுஜின் ஆரம்ப ஜெபம் செய் தார். ஷாஜி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்க ளாக மேல்புறம் ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் தேவதாஸ், சங்கரன் (காங்கிரஸ்), விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செய லாளர் மாத்தூர் ஜெயன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இயக்கத்தின் அமைப்பா ளர் காலித், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாண் கிறிஸ்டோபர், காதர் மைதீன் ஆகியோர் 25-வது கிறிஸ்துமஸ் விழா சம்பந்த மான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில், அருமனை கிறிஸ்துமஸ் விழா இந்த ஆண்டு வெள்ளிவிழா 3 நாட்கள் நடத்த தீர்மானிக்கப் பட்டது. அதில் 2 நாட்கள் பேரின்ப பெருவிழாவும், மூன்றாவது நாள் சமூக நல்லிணக்க மாநாடும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அருமனை கிறிஸ்துமஸ் விழாவிற்கு வரும் அனைத்து தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ. ஷேக் முகம்மது, தொல்காப்பியன், ஜாகீர் உசேன், சாந்தகுமார், சக்கர, ரவி, ஜெஸ்டின், எல்வின்ஸ், செலின், பிரதாப், சுந்தர் மற்றும் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வக்கீல் திலீப் சிங் நன்றியுரை கூறினார். பெஞ்சமின் இறுதி ஜெபம் செய்தார்.
- தாயின் கள்ளக்காதலன் - பாட்டி மீது வழக்கு
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் அருமனையை அடுத்த பத்து காணியை சேர்ந்த ஒரு பெண், கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் 15 வயது மகள் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகள்-மகன்கள் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்தநிலையில் அந்தப் பெண்ணுக்கு கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த டிஜேஷ் என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தனது குழந்தைகளுடன் அந்தப் பெண், டிஜேசுடன் சேர்ந்து வாழ்ந்து உள்ளார்.
ஆனால் சில நாட்களில் அந்தப் பெண் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் அவரது குழந்தைகள், பாட்டி மற்றும் டிஜேஷ் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் டிஜேஷ், 15 வயது சிறுமியான மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனை சிறுமி தனது பாட்டியிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.
இதற்கிடையில் சிறுமிக்கு டிஜேஷ் பாலியல் தொல்லை கொடுப்பது அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் கொடுத் தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி மாணவி யின் பாட்டி மற்றும் டிஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
- டிரைவர் தப்பி ஓட்டம்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மஞ்சாலும் மூடு அருகே முக்கூட்டுகல் பகுதியில் அனுமதியின்றி பாறை உடைப்பதாக ரகசிய பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரகசிய பிரிவு போலீசார் அப்பகுதியில் நோட்டமிட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் பாறை உடைப்பதாகவும் உடைக்கப்பட்ட பாறை களை கேரளாவுக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் பாறை உடைக்கும் நபர்களும் டிரைவரும் தப்பி ஓடி விட்டனர். பின்னர்போலீசார் விசாரணைமேற்கண்ட போது பனச்சமூடு அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற ஜே.சி.பி. வாகனம் மற்றும் பாறை உடைக்க கூடிய கம்ப்ரஸர் மோட்டார், டெம்போஆகியவற்றை போலீசார் கைப்பற்றி வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடன் தொல்லை மற்றும் உடல்நிலை பிரச்சினையால் தற்கொலை
- அருமனை போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
அருமனை அருகே சிதறால் வெள்ளாங்கோடு வாழை விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை (வயது 47) கொத்தனார்.
இவரது மனைவி ராஜே ஸ்வரி (45). இவர்களது மகள் நித்யா (26). ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் கிருஷ்ண பிள்ளை மனம் உடைந்து காணப்பட்டார். மகள் நித்யாவிற்கும் கடன்களை வாங்கி சிரமப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.
ஆனால் நித்யாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நித்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணபிள்ளை, ராஜேஸ்வரி, நித்யா ஆகிய 3 பேரும் படுக்கை அறையில் விஷம் குடித்து பிணமாக கிடந்தனர். இதை பார்த்த கிருஷ்ண பிள்ளையின் தாயார் கதறி அழுதார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.
பின்னர் அருமனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக கிடந்த கிருஷ்ணபிள்ளை, ராஜே ஸ்வரி, நித்யா ஆகிய 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்னதாக மனைவி, மகளுக்கு கிருஷ்ணபிள்ளை இறுதி சடங்கை நிறை வேற்றியது தெரியவந்தது. மேலும் கிருஷ்ணபிள்ளை எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
அந்த கடிதத்தில் தனது மனைவியின் நகைகளை வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்மணியின் பெயரில் அடகு வைத்துள்ளதாகவும், அந்த நகைகளை விற்று தங்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்றும் தங்களது உடலை எங்களுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் எழுதியிருந்தனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு கிருஷ்ணபிள்ளை, ராஜே ஸ்வரி, நித்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது. ஒரே இடத்தில் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கடன் தொல்லை மற்றும் அவரது மனைவி யின் உடல்நிலை பிரச்சினையால் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணபிள்ளையின் மனைவி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதனால் மாதத்திற்கு 4 முறை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளனர்.
தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன்பும் இவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தனர். அப்போது அதிக பணம் செலவாகி உள்ளது. நகைகளை அடகு வைத்து பணத்தை செலவு செய்து வந்துள்ளார்.
மகளும் கணவரை விட்டு பிரிந்து வந்த வருத்தம் கிருஷ்ணபிள்ளைக்கு இருந்து வந்தது. இதனால் 3 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்து இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அருமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- இறந்த நபர் திருமணம் ஆகாமல் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தார்.
- அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
அருமனை அரசு மருத்துவமனை அருகில் பூட்டிய வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியது.
அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அழுகிய நிலையில் ஒருவர் பிண மாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அந்த பகுதி கவுன்சிலர் சதீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர் உடனடியாக சம்பவ இடம் வந்து ஊர்மக்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது அந்த வீட்டில் வசித்து வந்த தாமோதரன் தான் பிணமாக கிடந்தவர் என தெரியவந்தது.
தாமோதரனுக்கு திருமணம் ஆக வில்லை. தனியாக அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். பால் வெட்டும் தொழிலாளி யான இவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது. கவனிப்பாரற்ற நிலையில் இருந்தார். தன்னுடைய பணிகளை தானே கவனித்து கொள்வதாக தெரி கிறது. இது சம்மந்தமாக அருமனை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அருமனை போலீசார் சம்பவ இடம் வந்து அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அழுகிய பிணம் ஆனதால் தூக்குவதற்கு யாரும் முன்வராத நிலையில் கவுன்சிலர் சதீஷ் முன்னிலையில் களியல் சமூக சேவை குழுவை சார்ந்த சமூக சேவகர்கள் கிருஷ்ணன்குட்டி, ஜெரோம் மற்றும் புண்ணியம் சமூக சேவகர் அருண் ஆகியோர் பிணத்தை மீட்டு போலீசார் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த சாலை குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு ஆகிய பகுதி அவசர தேவைக்கு மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு திருவனந்தபுரத்திற்கு எளிதாக செல்லும் சாலையாகும்.
- பொதுமக்களும், போக்குவரத்தும் செல்ல முடியாத சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சாலை மழை நீரால் குளங்கள் போல் காட்சியளிக்கிறது
கன்னியாகுமரி:
அருமனை அருகே மஞ்சாலுமூட்டிலிருந்து மாலைக்கோடு வரையிலான சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
பொதுமக்களும், போக்குவரத்தும் செல்ல முடியாத சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சாலை மழை நீரால் குளங்கள் போல் காட்சியளிக்கிறது. இச்சாலைக்காக பல ஆண்டுகாலமாக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குமுறலுடன் இருக்கின்றனர்.
இச்சாலையானது தமிழக அரசு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகும். இந்த சாலை குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு ஆகிய பகுதி அவசர தேவைக்கு மற்றும் ஆஸ்பத்தி ரிகளுக்கு கேரளாவுக்கு (திருவனந்த புரம்) எளிதாக செல்லும் சாலையாகும்.
தற்போது பெய்துவரும் தொடர்மழையால் சாலையில் நீர் தேங்கி குளங்கள் போல் காட்சியளிக்கிறது. இச்சாலையை காலம் கடத்தாமல் உடனடியாக சீர்செய்ய நெடுஞ்சாலை துறையும் மாவட்ட நிர்வாகத்தையும் பொதுமக்களும் அரசிய கட்சியினரும் கேட்டு கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்