என் மலர்
நீங்கள் தேடியது "slug 225460"
- பீனட் பட்டரை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்..
- பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர் தான் பலருடைய சாய்ஸ்.
தேவையான பொருட்கள் :
வறுத்த வேர்க்கடலை - 2 கப்
கடலை அல்லது ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் - 6 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தேன் - 2 டீஸ்பூன்
செய்முறை :
வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அதன் தோலை நீக்கிவிடுங்கள். முழு காய்ந்த கடலை இருந்தாலும் அதை உரித்து கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதன் தோலை நீக்கிவிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
வறுத்த வேர்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
வேர்க்கடலை கொஞ்சம் மசிந்ததும் அதனுடன் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.
அடுத்து அதில் தேன், உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள்.
அவ்வளவுதான் பீனட் பட்டர் தயார்.
இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
- கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது.
- நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பில்லை - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
பச்சை மிளகாய் - இரண்டு
புளி - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை:
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
பிறகு, அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
மிக்சியில் வறுத்த பொருட்களை போட்டு அதனுடன் புளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.
இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி.
- சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
- இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 20 பற்கள்
இஞ்சி - 1 இன்ச்
குண்டு வரமிளகாய் - 10
தக்காளி - 1
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தட்டிக் கொள்ளவும்.
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும்.
மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கிய பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு குக்கரை திறந்து, அதனை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்!
- சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் - 2
முட்டை - 2
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 6-8 பற்கள்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வர மிளகாய் - 2
பிரியாணி இலை - 2
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் மூன்று பருப்புக்களையும் நன்கு நீரில் அலசி போட்டு, தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி,லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.
இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, வர மிளகாய்,பச்சை மிளகாய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் வெங்காய பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு தக்காளி, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் வேக வைத்துள்ள பருப்புக்களை சேர்த்து கிளறி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கி விட வேண்டும்.
இறுதியில் அந்த முட்டையை பருப்பில் சேர்த்து கிளறி இறக்கினால், முட்டை தட்கா தால் ரெடி!!!
- தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ.
முருங்கைக்காய் - 4.
வெங்காயம் - 200 கிராம்.
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4.
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்.
மிளகுத் தூள் - 4 டீ ஸ்பூன்.
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் - 6.
கொத்தமல்லி இலை - 1 கப்.
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 1 குழிக்கரண்டி.
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
முருங்கைக்காயையும் துண்டுகளாக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, முருங்கைக்காய், சிக்கன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.
கிரேவி திக்கான பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இப்போது முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி ரெடி.
- பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது.
- தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இது அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பச்சை மிளகாய் - 20
சின்ன வெங்காயம் - 50 கிராம்
உளுந்து - 2 டீஸ்பூன்
பூண்டு - 10
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு, கறிவேப்பிலை
செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நன்றாக கழுவி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த சட்னியில் கொட்டவும்.
அவ்வளவுதான் சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயார்.
- பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இன்று சிக்கன் சுக்கா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ
வெங்காயம் - 1
பட்டை - 1 துண்டு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.
* மிக்ஸியில் பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசறி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை போட்டு வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.
* இதற்கு சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது. தண்ணீர் சேர்க்கக்கூடாது. சிக்கனில் தண்ணீர் வற்றிய பிறகு சிறு தீயில் வைத்துக் கிளறினால் உப்பு, காரம் சிக்கனில் சேர்ந்து இருக்கும்.
* எண்ணெய் பிரிந்து வரும் போது சிக்கனை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
* சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் ரெடி.
- கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
- ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கேரட் - கால் கிலோ
எலுமிச்சை பழம் - ஐந்து
பச்சை மிளகாய் - பத்து
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி
கடுகு - ஒரு தேகரண்டி
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.
சூப்பரான கேரட் ஊறுகாய் ரெடி.
- எல்லோருக்கும் ஹோட்டல் சட்னி மிகவும் பிடிக்கும்.
- இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
சீரகம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.
- சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த ரெசிபி அருமையாக இருக்கும்.
- இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
எண்ணெய்/நெய் - 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 பெரிய துண்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கையளவு
செய்முறை:
* கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிக்கன் ஒரு பதத்திற்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார்.
- வாரம் ஒருமுறை முட்டைகோஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்.
- முட்டைக்கோஸ் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
புளி - எலுமிச்சை பழம் அளவு
உப்பு - தேவைகேற்ப
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை
முட்டைகோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாயை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.
வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.
- தயிர், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
- குழந்தைகளுக்கு இந்த மீன் மிளகு மசாலா மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
துண்டு மீன் – அரை கிலோ
வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஐந்து
கொத்தமல்லி இலை – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
கறிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டி விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.
மீன் வெந்ததும், மிளகுதுளை சேர்த்து கிளறவும்.
நறுக்கிய கொத்தமல்லி இலையை மீனை இறக்குவதற்கு முன் சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சூப்பரான மீன் மிளகு மசாலா ரெடி.