என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளிச்சந்தை"
கன்னியாகுமரி:
வெள்ளிச்சந்தை அருகே மணவிளையை சேர்ந்தவர் ஜெகன் ஜோஸ் (வயது 42). இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அமராவதி. போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
ஜெகன் ஜோஸ் கோழி பண்ணை நடத்தி வந்தார். கோழிப்பண்ணை நடத்தியதில் அவருக்கு கடன் ஏற்பட்டு அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அமராவதி தனது பணிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சமையலறையில் ஜெகன் ஜோஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பணி முடிந்து இரவு வந்த அமராவதி ஜெகன் ஜோஸ் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அமராவதி வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெகன் ஜோசிற்கு 2 மகன்கள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி:
வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஆரோக்கிய ஆஸ்மி. இவர்களது 12 வயது மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தி, வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய வைப்பாராம். சில நேரங்களில் உடலில் சூடு வைத்து தலையில் அடிப்பாராம். சிறுமியின் தலையில் தையல் போட்ட தழும்பு உள்ளது.
இந்த தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மகளிர் சப் - இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி சிறுமியை கொடுமைப்ப டுத்தியதாக தாய் ஆரோக்கிய ஆஸ்மி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
தற்போது சிறுமியின் தந்தை மரிய ரூபன் ஊர் திரும்பி உள்ளார். பெற்ற மகளை சூடு வைத்து துன்புறுத்திய தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே முட்டம் ஐஸ் பிளான்ட் தெருவை சேர்ந்தவர் பனி பிச்சை (வயது 65). இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் பனி பிச்சை சோகத்தில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று பனி பிச்சை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பனி பிச்சை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனி பிச்சையின் மகள் டெல்பின் சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
- மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மணவாளக்குறிச்சி:
வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஐ.இ.டி. கன்னியாகுமரி நெட்வொர்க் மற்றும் அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த கண்காட்சியில் 172 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக காட்சிப்படுத்திய மாதிரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் துணை தாளாளர் சுனி, இயக்குநர் தருண்சுரத், அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வரும், ஐ.இ.டி.கன்னியாகுமரி நெட்வொர்க்கின் முன்னாள் தலைவருமான ஜோசப் ஜவகர், அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிமலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 64), கூலி தொழிலாளி
- இவருக்கு கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்
நாகர்கோவில் : வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 64), கூலி தொழிலாளி. இவருக்கு கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. எனினும் சரியாக அதிலிருந்து குணமாகாத தால் மனம் உடைந்த அற்புதராஜ், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள பூவரசு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக வெள்ளிச்சந்தை போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். இவருக்கு கோமளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அதில் ஒரு மக னுக்கு திருமணம் ஆகி விட்டது. சம்பவம் குறித்து கோமளா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச் சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜின் உடலை கைப் பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
- வெள்ளி ச்சந்தை போலீசில் புகார்
- உறவினர்கள் வீட்டில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆலங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 44). இவர் சொந்தமாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சகாய ஜஸ்மின் ( 36). இவர்களுக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீதரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளையும் அழிக்காலில் உள்ள மாமியார் வீட்டில் கொண்டு சென்று விட்டு உள்ளார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று 3 பேரையும் அழைத்து வரச் சென்றபோது அவர்கள் அங்கு இல்லை. உறவினர்கள் வீட்டில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து வெள்ளி ச்சந்தை போலீசில் ஸ்ரீதரன் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான சகாய ஜஸ்மின், அவரது மகள்களை தேடி வருகிறார்.
- பொதுமக்கள் திருடனை விரட்டினர்.
- அவர் தனது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.
கன்னியாகுமரி:
வெள்ளிச்சந்தை அருகே புளியடியை சேர்ந்தவர் தாசன். இவரது மனைவி ராணி (வயது 60).
இவர் சம்பவத்தன்று பேயோடு பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு காலை சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். அவர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ராணி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தார். இதில் ராணி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே ராணி சத்தம் போட்டு அலறவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருடனை விரட்டி சென்றுள்ளனர். அவர்கள் விரட்டியதும் அவர் தனது மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு தப்பி யோடி விட்டார். பின்னர் இச் சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசிற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.